பணமதிப்பு நீக்கம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தது: பிரதமர் மோடி

பணம் மதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் தற்போது உள்ளதை விடக் கூடுதலாக ரொக்கப் பணம் புழக்கம் இருந்திருக்கும்.

news18
Updated: April 9, 2019, 11:34 AM IST
பணமதிப்பு நீக்கம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தது: பிரதமர் மோடி
பிரதமர் மோடி
news18
Updated: April 9, 2019, 11:34 AM IST
இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைவதற்கும், சட்ட விரோத போலி நிறுவனங்களை முடக்குவதற்கும் பணம் மதிப்பு நீக்க நடவடிக்கை முக்கிய காரணமாக இருந்தது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நியூஸ் 18-க்கு கொடுத்த பிரத்தியேக பேட்டியில் பிரதமர் மோடி பேசும் போது, “நாடு சுதந்திரம் அடைந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, கடந்த 5 ஆண்டுகளில் வருமானவரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 100-க் கணக்கான நிறுவனங்கள் சிறு அறைகளிலிருந்து போலியாக இயங்கி கூட்டுப் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி வந்தன. பல ஹவலா நிறுவனங்கள் பொருளாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தி வந்தன. அந்த நிறுவனங்களின் செயல்பாடுகளைத் தடுக்க பணமதிப்பு நீக்கம் உதவியது. கோடிக்கான பணம் கணக்கு காண்பிக்கப்பட்டு அரசின் கருவூலத்திற்கு வந்தது.


பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் தற்போது உள்ளதைவிட பணம் புழக்கம் அதிகமாக இருந்திருக்கும்.

பல பெரும் வணிகர்கள் பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து இன்றும் வெளியில் வர முடியாமல் உள்ளனர். ஆனால் சாமானிய மக்கள் நாங்கள் எடுத்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் தொடக்கத்தில் பாதிப்படைந்தனர் என்பதை மறுக்க முடியாது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்த கால கட்டத்தில் உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

Loading...

சர்வதேச அமைப்புகளான உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் அல்லது வேறு எந்த மதிப்பீட்டு நிறுவனங்களாக இருந்தாலும், இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைவதை ஒப்புக்கொண்டுள்ளன. அதற்கு நாம் பெருமை பட வேண்டும்” என்று மோடி கூறினார்.

மேலும் பார்க்க:

மேலும் வணிக செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  வணிக செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

 
First published: April 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...