Home /News /business /

எலுமிச்சை விலை கிடு கிடு உயர்வு.. கோடையில் ஏழைகளுக்கு எட்டா கனியாக மாறிய எலுமிச்சை

எலுமிச்சை விலை கிடு கிடு உயர்வு.. கோடையில் ஏழைகளுக்கு எட்டா கனியாக மாறிய எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சை

ஆண்டு முழுவதும் தட்டுப்பாடு இன்றி நினைத்த மாத்திரத்தில் கிடைப்பது எலுமிச்சை பழம். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தற்போது எலுமிச்சைக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

டிவிட்டர் மற்றும் பிற சமூக ஊடகங்களில் எலுமிச்சை குறித்த தகவல்கள் ட்ரெண்டிங்கில் உள்ளன. எலுமிச்சை குறித்த கார்ட்டூன்கள், ஜோக்குகள் மீம்ஸ்கள் திடீரென சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன. இதற்கு காரணம் வரலாறு காணாத அதன் விலை ஏற்றம் தான்.

Also Read: பெண்கள் சொந்த காலில் நிற்க ரூ. 2 லட்சம் கடன்.. அப்ளை செய்வது எப்படி? முழு விபரம்!

சில மாதங்களுக்கு முன், கிலோ, 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட எலுமிச்சை தற்போது கிலோ, 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதாவது ஒரு எலுமிச்சையின் விலை 10 ரூபாய் முதல் 15 ரூபாயாக உள்ளது. தற்போதைய விலை உயர்வுப் போரில் பெட்ரோல் மற்றும் தங்கத்துடன் எலுமிச்சை போட்டியிடத் தொடங்கியுள்ளது. உலகில் உள்ள எலுமிச்சையில் 17 சதவீதத்தை இந்தியா உற்பத்தி செய்கிறது. நாடு முழுவதும் 3 லட்சத்து 17 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள பழத்தோட்டங்களில் எலுமிச்சை வளர்க்கப்படுகிறது. ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா மற்றும் தமிழ்நாடு. ஆகிய மாநிலங்கள் எலுமிச்சையை அதிகம் விளைவிக்கின்றன.

எலுமிச்சை சாகுபடிக்கு சூடான, மிதமான வறண்ட மற்றும் ஈரமான காலநிலை தேவைப்படுகிறது. ஆண்டுக்கு 3 பருவங்களில் விவசாயிகள் எலுமிச்சையை பயிரிடுகின்றனர். இதனால் ஆண்டு முழுவதும் தட்டுப்பாடு இன்றி எலுமிச்சை கிடைக்கும். 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், வழக்கத்திற்கு மாறாக கனமழை பெய்தது. இதுவே தற்போதை உற்பத்தி பாதிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.

Also Read: பெட்ரோல், டீசல் விற்பனை குறைகிறது : இன்றைய (ஏப்ரல் 19-2022) விலை நிலவரம்

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு ஆந்திராவிலிருந்து எலுமிச்சை பழங்கள் வருகின்றன. தற்போது வட மாநிலங்களில் அதிக டிமாண்ட் இருப்பதால் கோயம்பேடுக்கு வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது.திருச்சி காந்தி மார்க்கெட்டில், சிறிய எலுமிச்சை பழங்கள், 5 ரூபாய்க்கும், நடுத்தர பழங்கள், 10 ரூபாய்க்கும், பெரிய பழங்கள், 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன

 

வெப்பத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் இயற்கையான மற்றும் குளிர்ச்சி மிகுந்த பானங்களை அருந்துகின்றனர். ஆனால் ஏழைகளின் ஆரஞ்சு பழமாக கருதப்படும் எலுமிச்சையும் தற்போது எட்டா கனியாக மாறியுள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் குறைந்த விலையில் வெளியில் வாங்கும் உணவுப் பொருட்கள் பட்டியலில் எப்போதும் 'லெமன் ரைஸ்' முதலிடம் வகிக்கிறது. ஆனால், விலை உயர்வு காரணமாக, லெமன் ரைசும் தற்போது பிரியாணியும் போட்டி போடும் நிலை ஏற்பட்டது.
Published by:Ramprasath H
First published:

Tags: Lemon, Lemon juice, Lemon Rice, Lemon water, Price hike, Summer, Summer Heat, Tamil News

அடுத்த செய்தி