• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • போஸ்ட் ஆபிஸில் RD செலுத்த தாமதமானால் அபராதம் செலுத்த வேண்டுமா? தாமதக் கட்டணங்கள் பற்றிய விவரங்கள்!

போஸ்ட் ஆபிஸில் RD செலுத்த தாமதமானால் அபராதம் செலுத்த வேண்டுமா? தாமதக் கட்டணங்கள் பற்றிய விவரங்கள்!

போஸ்ட் ஆபிஸில் RD

போஸ்ட் ஆபிஸில் RD

Post Office RD Interest Rates 2021 : பணத்தை முதலீடு செய்ய மக்களை ஊக்குவிக்க, போஸ்ட் ஆபீஸ் RD-க்கள் முன்பணமாக டெபாசிட்டுகளில் தள்ளுபடிகளை வழங்குகின்றன. வருமானம் குறைவாக உள்ள ஒருவருக்கு மற்ற தேவைகளுக்காக பணத்தை சேமிக்க RD சேமிப்பு உதவும்.

  • Share this:
    தொடர்ச்சியான வைப்புநிதி அல்லது RD முதலீடுகள் மிகவும் பிரபலமான முதலீட்டுத் திட்டமாகும். ரெக்கரிங் டெப்பாசிட் முதலீடுகள், நிலையான வருமானத்தை அளிப்பவை. இவ்வகையான முதலீட்டுத் திட்டங்களில் நீங்கள் மாதாந்திர தவணை முறையில் தொகையைச் செலுத்தி, வட்டியுடன் முதிர்வுத் தொகையைப் பெறுவீர்கள். RD கணக்கு தொடங்குபவர்களின் வயது, தேர்வு செய்யப்பட்ட வைப்புநிதியின் வகை மற்றும் முதிர்வு காலத்தைப் பொறுத்து வங்கிகள் RD களில் வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

    வங்கிகளில் மட்டுமின்றி தபால் நிலையங்களிலும் ஆர்டி டெபாசிட் தொடங்கலாம். தபால் அலுவலக RD வைப்புகளின் குறைந்த பட்ச கால அளவு ஐந்து ஆண்டுகள். மேலும், முதலீட்டைத் தொடங்குவதற்கான குறைந்தபட்சத் தொகை மாதம் ரூ.10 ஆகும். RD கணக்கில் முதலீடு செய்யக்கூடிய அதிகபட்ச தொகைக்கு எந்த வரம்பும் இல்லை. தபால் அலுவலகம் RD முதலீட்டாளர்களுக்கு 5.8% வருடாந்திர விகிதத்தில் வட்டி வழங்குகிறது. ஏப்ரல் 1, 2021 முதல் ஐந்து ஆண்டுகளுக்கான தபால் நிலைய ரெக்கரிங் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 5.8 சதவீதம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு RD கணக்கை தொடர விரும்பும் நபர்கள் தொடரலாம். ஏனென்றால், ஆர்.டி.யை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் தேர்வு உள்ளது. தபால் நிலைய RD கணக்கின் அதிகபட்ச காலம் பத்து ஆண்டுகள். கூடுதலாக, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நீட்டிக்கப்பட்ட RD கணக்குகளுக்கு காலாண்டு அடிப்படையில் கணக்கிடப்பட்ட வட்டி தொடர்ந்து கிடைக்கும்.

    ALSO READ | தொடர் வைப்பு நிதிக்கு வங்கிகள் கொடுக்கும் வட்டி விகிதங்கள் மற்றும் திட்டங்கள்!

    ஒரு தபால் அலுவலக RD கணக்கைத் திறக்கும் நபர் இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 60 ,முறை டெபாசிட்களைச் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு, ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யப்படும். நீங்கள் RD கணக்கைத் திறக்கும் போது வைப்புநிதியின் முதல் தவணைத்தொகையைச் செலுத்த வேண்டும். மேலும் அந்தத் தேதியின் அடிப்படையில் மாதாந்திர டெபாசிட்களை நிலுவைத் தேதிக்கு முன்பாகச் செலுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட மாதத்தின் 1 முதல் 15ம் தேதிக்குள் கணக்கைத் திறக்கும் முதலீட்டாளர்கள், அடுத்த மாதம் 15ம் தேதிக்கு முன் மாதாந்திர டெபாசிட் செய்ய வேண்டும். 15ம் தேதிக்குப் பிறகு தொடங்கப்பட்ட கணக்குகளுக்கு, 16ம் தேதிக்கு மேல் மாதத்தின் கடைசி நாளுக்கும் முன், டெபாசிட் செய்யப்பட வேண்டும். முதலீடுகளை பணமாகவோ அல்லது காசோலை மூலமாகவோ செய்யலாம்.

    தபால் அலுவலகம் தொடர் வைப்புத் தள்ளுபடி :

    பணத்தை முதலீடு செய்ய மக்களை ஊக்குவிக்க, போஸ்ட் ஆபீஸ் RD-க்கள் முன்பணமாக டெபாசிட்டுகளில் தள்ளுபடிகளை வழங்குகின்றன. வருமானம் குறைவாக உள்ள ஒருவருக்கு மற்ற தேவைகளுக்காக பணத்தை சேமிக்க RD சேமிப்பு உதவும். 6 தவணைகளின் RD டெபாசிட்டுக்கான தள்ளுபடி, ஒவ்வொரு ரூ.100 க்கும் ரூ.10 ஆகும். 12 தவணை முதலீட்டுக்கு ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 40 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ALSO READ | கிழிந்த ரூபாய் நோட்டுகள் இருந்தால் அதை எங்கு கொடுக்க வேண்டும்? கொடுத்தால் என்ன கிடைக்கும் தெரியுமா?

    சில தவிர்க்க முடியாத காரணங்களால் குறிப்பிட்ட தேதியில், ரெக்கரிங் டெப்பாசிட் கணக்கில் மாதாந்திர தவணைத் தொகையை டெபாசிட் செய்ய முடியாமல் போனால், சம்பந்தப்பட்ட வங்கி அல்லது தபால் அலுவலகம் உங்களிடமிருந்து அபராதத்தை வசூலிக்கலாம். வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களுக்கு தாமதத் தவணைகள் மீது விதிக்கப்படும் கட்டணங்கள் சார்ந்த விதிகள் வேறுபட்டவை. இருப்பினும், பொதுவாக, ஒரு கணக்கு வைத்திருப்பவர் தொடர்ந்து 4 மாதங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தேதியில் RD கணக்கில் சேமிப்பை டெபாசிட் செய்ய முடியாவிட்டால், அந்த விஷயம் பெரிதாக கவனத்தில் கொள்ளப்படாது.

    இருப்பினும், 4 மாதங்களுக்கும் மேலாகத் தொகை செலுத்தப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட கணக்கு வைத்திருப்பவரை, தவணை செலுத்தாதவராக அறிவித்து கணக்கு மூடப்படும். இதுபோன்ற காரணங்களால் கணக்கு மூடப்பட்டால், அடுத்த மாதத்திற்கு (ஐந்தாவது மாதம்) மீதமுள்ள தொகையை செலுத்திய 2 மாதங்களுக்குள் கணக்கை மீண்டும் திறக்க முடியும்.

    RD விதிகளின்படி, ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் கணக்கு வைத்திருப்பவருக்கு 1 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. RD கணக்கை மீண்டும் திறக்கும்போது தவறவிட்ட சேமிப்புத் தொகையுடன் தொடர்புடைய கணக்கு வைத்திருப்பவர் இந்த அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், கணக்கு வைத்திருப்பவர் RD கணக்கை மீண்டும் திறக்க விரும்பவில்லை என்றால், தபால் நிலையம் முன்கூட்டியே திரும்பப் பெறும் விதியை செயல்படுத்துகிறது மற்றும் அதற்கேற்ப வட்டி வசூலிக்கிறது.

    ALSO READ |  போஸ்ட் ஆஃபீஸில் ரெக்கரிங் டெபாசிட் செய்ய வட்டி விகிதம் எவ்வளவு? முழு விவரம் இதோ!

    இதே கட்டணம் வங்கிகளுக்கு மாறும். உதாரணமாக, நீங்கள் எஸ்பிஐ வங்கியில் ஆர்டி கணக்கு வைத்து, சில மாதங்களாக இந்தக் கணக்கில் உங்கள் சேமிப்பை டெபாசிட் செய்ய முடியவில்லை என்றால், வங்கி உங்களுக்கு அபராதம் விதிக்கும். இதற்காக, 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான முதிர்வு காலம் கொண்ட கணக்குக்கு, மாதம் ஒன்றுக்கு 100 ரூபாய்க்கு 1.50 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், முதிர்வு காலம் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் இருந்தால், ஒவ்வொரு மாதமும் ரூ.100க்கு ரூ.2 அபராதம் விதிக்கப்படுகிறது.

    RD கால்குலேட்டர் என்றால் என்ன?

    RD கணக்கு முதிர்வு காலத்திற்குப் பிறகு நீங்கள் பெறும் பணத்தின் அளவை தீர்மானிக்க RD கால்குலேட்டரைப் பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள் RD கால்குலேட்டர் அல்லது பல்வேறு வங்கிகள் வழங்கும் எளிய சூத்திரத்தைப் பயன்படுத்தலாம். உடனடி முடிவுகளைப் பெற RD கால்குலேட்டரைப் பயன்படுத்தவும். ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒரு RD கணக்கிலிருந்து பெறப்படும் வட்டி சேர்க்கப்படும்.

    ALSO READ |  தபால் நிலையம் வழங்கும் RD கணக்குகள் பற்றிய விவரங்கள்

    தபால் நிலையத்திற்குச் செல்லாமல் ஆன்லைனில் RD கணக்கு தவணையை டெபாசிட் செய்யலாம். இந்தியா போஸ்ட் பேமென்ட் செயலி (IPPB) மூலம் முதலீடு செய்யப்பட வேண்டும்.

    இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எப்படி என்று பார்க்கலாம்.

    1. உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து IPPB கணக்கிற்கு பணத்தை அனுப்பவும்
    2. DOP பிரிவில் இருந்து தொடர் வைப்புத் தொகையைத் தேர்ந்தெடுக்கவும்.
    3. RD கணக்கு எண்ணை உள்ளிடவும். பின்னர் DOP வாடிக்கையாளர் ஐடியை உள்ளிடவும்
    4. தவணை காலம் மற்றும் தொகையைத் தேர்ந்தெடுக்கவும்
    5. பணத்தை செலுத்தும் போது IPPB அறிவிப்பை அனுப்பும்

    - கோர் பேங்கிங் வசதி உள்ள தபால் நிலையங்களில் உள்ள தபால் அலுவலக சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே புதிய ஆப் மூலம் பரிவர்த்தனை செய்ய முடியும்.
    - கணக்கின் KYC பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
    - கணக்கில் இன்டர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகள் இயக்கப்பட வேண்டும் அல்லது இந்தச் சேவைகளைப் பெற தபால் நிலையத்தில் ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும்.
    மொபைல் இணைய சேவைகள் செயல்படுத்தப்பட்டவுடன் தற்போதைய வாடிக்கையாளர்கள் மொபைல் பயன்பாட்டைப் பயன்படுத்தத் தொடங்கலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: