₹ 2000 நோட்டுக்களின் புழக்கம் குறைவு: மத்திய அரசின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை தோல்வியா?

₹ 2000 நோட்டுக்களின் புழக்கம் குறைவு: மத்திய அரசின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை தோல்வியா?
  • Share this:
புழக்கத்தில் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

2000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இது செல்லாது என்றும், வங்கிகளுக்கு செல்லும் 2000 ரூபாய் நோட்டுகள், மீண்டும் பழக்கத்திற்கு விடப்படுவது இல்லை என்றும் பல்வேறு வதந்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால் உண்மையில், ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை படி, புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி புழக்கத்தில் உள்ள நோட்டுக்கள் குறைய முக்கியமான காரணம் என்ன?


கடந்த 2017-18 நிதியாண்டில், 6,72,600 கோடி ரூபாய் மதிப்பிலான 336.3 கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. 2018-19-ம் ஆண்டில், 6,58,200 கோடி ரூபாய் மதிப்பிலான 329.1 கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

சுமார் 14,400 கோடி ரூபாய் மதிப்பிலான 7.2 கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் தற்போது இல்லை. இது, மக்களிடையே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மீதான நம்பிக்கை குறைக்கும் வகையில் இருக்கிறது.

ரிசர்வ் வங்கி தரப்பில் இருந்து, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து குறைக்க, நடவடிக்கை எடுக்குமாறு வங்கிகளுக்கு எந்த அறிவுரையும் வழங்கப்படவில்லை என்று வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் அவற்றின் புழக்கம் குறைந்திருப்பது கருப்பு பணம் குறித்த மத்திய அரசின் நடவடிக்கைகள் தொடர் தோல்வியில் முடிவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

 
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading