வங்கி விடுமுறை நாட்கள் நாடு முழுவதும் பொது விடுமுறை என்பதைக் கடந்து, மாநில வாரியாக வேறுபடும். அதன் அடிப்படையில், 2022 டிசம்பர் மாதத்தில், வங்கிக்கு எவ்வளவு நாட்கள் விடுமுறை என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
2022ஆம் வருடத்தின் இறுதி மாதமான டிசம்பர் மாதத்தில் 14 நாள்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆர்பிஐ வழிகாட்டுதல்களின்படி, மாநிலத்தைப் பொறுத்து சில மாநில விடுமுறைகளுடன் அனைத்து பொது விடுமுறை நாட்களிலும் வங்கிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு விடுமுறை நாட்களை அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்கின்றன.
டிசம்பர் விடுமுறை நாள்கள்
டிசம்பர் 3 - சனிக்கிழமை - புனித சேவியர் நாள் விழா - கோவாவில் வங்கிகள் விடுமுறை
டிசம்பர் 5 - திங்கள்கிழமை - குஜராத்தில் தேர்தல் காரணமாக வங்கிகள் விடுமுறை
டிசம்பர் 12 - திங்கள்கிழமை - பா-டோகன் நென்மிங்ஜா சங்மா தினம் - மேகாலயாவில் வங்கி விடுமுறை
டிசம்பர் 19 - திங்கள்கிழமை - கோவா விடுதலை தினம் - கோவாவில் வங்கி தினம்
டிசம்பர் 24 - சனிக்கிழமை - கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - மேகாலயாவில் விடுமுறை
டிசம்பர் 26 - திங்கள்கிழமை - கிறிஸ்துமஸ் விழா - மிசோரம், சிக்கிம், மேகாலயாவில் விடுமுறை
டிசம்பர் 29 - வியாழக்கிழமை - குரு கோபிந்த் சிங் பிறந்தநாள் - சண்டிகரில் விடுமுறை
டிசம்பர் 30 - வெள்ளிக்கிழமை- யு கியாங் நங்க்பா - மேகாலயாவில் வங்கி விடுமுறை
டிசம்பர் 31 - சனிக்கிழமை - புத்தாண்டு கொண்டாட்டம் - மிசோரமில் வங்கி விடுமுறை
வார விடுமுறை நாள்கள்
டிசம்பர் 4, டிசம்பர் 11, டிசம்பர் 18 மற்றும் டிசம்பர் 25 ஆகிய நான்கு ஞாயிற்றுக் கிழமைகளும் விடுமுறை தினங்களாகும்.
டிசம்பர் 10 இரண்டாம் சனிக்கிழமை மற்றும் டிசம்பர் 24 நான்காம் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை தினங்களாகும்.
மேற்கண்ட நாள்களில் வங்கிகள் மூடப்பட்டாலும் ஆன்லைன் இணைய வங்கி சேவைகள் வழக்கம்போல் கிடைக்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டாம் என வங்கிகள் தெரிவித்துள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank, Bank holiday, RBI