Home /News /business /

தமிழக அரசின் மீது உள்ள கடன் சுமை மற்றும் வருவாய் பற்றாக்குறை எவ்வளவு?

தமிழக அரசின் மீது உள்ள கடன் சுமை மற்றும் வருவாய் பற்றாக்குறை எவ்வளவு?

திமுக அரசின் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நாளை தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

திமுக அரசின் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நாளை தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

திமுக அரசின் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நாளை தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் மீது உள்ள கடன் சுமை மற்றும் வருவாய் பற்றாக்குறை எவ்வளவு என்பது குறித்த ஒரு விரிவான தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

    10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மே மாதம் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, திமுக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிதிநிலை அறிக்கை குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் இரண்டாவது முழு நிதி நிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது..

    விடியலை நோக்கி என்ற பிரச்சாரத்துடன் ஆட்சிக்கு வந்த திமுக அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும் சமூக நிதி திட்டங்களையும் தொடர்ச்சியாக அறிவித்து வந்தாலும் கூட, முதல் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் மேல் அரசாணைகள் வெளியிடப்பட்டு பணிகளானது தொடங்கியுள்ளது.

    இதையும் படிங்க.. நீண்ட காலமாக எதிர்பார்த்த வசதி.. போஸ்ட் ஆபீஸ் சேவிங்க்ஸில் வருகிறது தெரியுமா?
     
    நிலைமை இவ்வாறு இருக்க திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கொடுக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியிலும் அரசியல் கட்சிகள் மத்தியிலும் பெரிதாக பார்க்கப்படுவதும், தற்போது திமுக அரசின் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நாளை தாக்கல் செய்யவுள்ள நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

    பொது மக்களின் எதிர்பார்ப்பும் அரசியல் கட்சிகளும் எதிர்பார்க்கும் தமிழக அரசு என்னென்ன சலுகைகளை அறிவிக்க உள்ளது வரிகளை உயர்த்த போகிறது என்ற எதிர்பார்ப்பு உள்ள சூழலில் கடந்த ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட அறிக்கையும் மிக முக்கியமான காரணியாக பார்க்கப்படுகிறது!

    மிக முக்கியமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை 1.50லட்சம் கோடி என்ற அளவில் உள்ளதும், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு வருவாய் பற்றாக்குறை சரிந்துள்ளது!

    தமிழ்நாட்டின் கடன் சுமை

    தமிழகத்தின் 2020-21 நிதி ஆண்டு வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக உள்ளது. 2021 - 22ம் ஆண்டின் இடைக்கால நிதிநிலை அறிக்கை கணக்கீட்டின்படி மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் தொகை ரூ.5,70,189 கோடியாக உள்ளது! இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,63,976 கடன் உள்ளது என்று நிதியமைச்சரால் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, தமிழ்நாடு அரசின் கடன் சுமையானது, 1999-2000 ஆண்டு - ரூ.18,989 கோடியும், 2000-2001 ஆண்டு ரூ.28,685 கோடியும், 2001-2002 - ரூ.34,540 கோடியும் 2005-2006 - ரூ.50,625 கோடியும் 2011-2012 - ரூ.1,03,999 கோடியும் 2015-2016 - ரூ.2,11,483 கோடியும் 2017-2018 - ரூ.3,14,366 கோடியும் 2020-2021 - ரூ.4,56,660 கோடியும் 2021 - ரூ.4,85,502 கோடியும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசினுடைய கடன் சுமை 13 மடங்காக உயர்ந்ததன் விளைவாக தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 16 லட்சம் குடும்பங்களுக்கும், ஒவ்வொரு குடும்பங்களின் தலையிலும் 2 லட்சத்து 63,976 ரூபாய் கடன் உள்ளது.

    2016 ஆம் ஆண்டில் மீண்டும் அ.தி.மு.க ஆட்சியமைந்த பிறகு 2021 வரையில் கடன் அளவானது 4.85 லட்சம் கோடியாக அதிகரித்தது.
    2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது கடன் அளவு 4 லட்சத்து 85 ஆயிரத்து 502 கோடியே 54 லட்சம் என அறிவிக்கப்பட்டது.

    2021ம் ஆண்டு இறுதிக்குள் 5.70 லட்சம் கோடியாக உயரும் எனவும் கூறப்பட்டது.

    வருமானம் 

    தமிழ்நாடு அரசுக்கு மிக முக்கியமான வருமானம் மூன்று துறைகளில் இருந்து மட்டுமே வருகிறது, பெட்ரோல் டீசல் மீதான வரி, பத்திர பதிவுத்துறை மற்றும் டாஸ்மாக் இந்த மூன்று துறைகளில் இருந்து மட்டுமே தரக்கூடிய வருவாயானது தமிழ்நாடு அரசனுடைய மற்ற அனைத்து திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் தமிழ்நாடு அரசினுடைய வருவாய் என்பது எந்த அளவிற்கு தற்போது உயர்ந்துள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவலானது நாளை வெளியிடப்பட உள்ள தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரியவரும்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: TN Assembly, TN Govt

    அடுத்த செய்தி