அதிகரிக்கும் கிரெடிட் கார்டுகள் புழக்கம்; சரியும் டெபிட் கார்டுகள்; காரணம் என்ன?

அதே கால கட்டத்தில் பிஓஎஸ் இயந்திரத்தில் கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஷாப்பிங் செய்தவர்கள் 61,300 கோடி ரூபாயும், ஏடிஎம் பரிவத்தனைகள் 400 கோடி ரூபாயும் செய்துள்ளனர்.

news18
Updated: July 13, 2019, 7:42 PM IST
அதிகரிக்கும் கிரெடிட் கார்டுகள் புழக்கம்; சரியும் டெபிட் கார்டுகள்; காரணம் என்ன?
டெபிட் கார்டு
news18
Updated: July 13, 2019, 7:42 PM IST
இந்தியாவில் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் 92.4 கோடி டெபிட் கார்டுகள்மா புழக்கத்தில் இருந்தன. அதுவே மார்ச் - மே மாதங்களில் 10 சதவீதம் அதாவது 10 கோடி கார்டுகள் குறைந்துள்ளதாக ஆர்.பி.ஐ வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன.

வங்கி நிறுவனங்கள் மேக்னட்டிக் ஸ்ட்ரைப் கார்டுகளை மாற்றி, சிப் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்து வருகிறன. இதனால் மார்ச் - மே மாதங்களில் 92.4 கோடியாக இருந்த டெபிட் கார்டுகள் 82.4 கோடியாக குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது.

டெபிட் கார்டுகள் குறைந்துள்ள அதே கால கட்டத்தில் கிரெடிட் கார்டுகளின் புழக்கம் 10 லட்சத்திலிருந்து 5 கோடியாக அதிகரித்துள்ளது.

சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது, மே மாதம் மட்டும் 3.86 கோடியாக இருந்த கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 4.89 கோடியாக அதிகரித்துள்ளன. அதிகபட்சமாக எச்டிப்சி வங்கி 1.26 கிரெடிட் கார்டுகளையும், எஸ்பிஐ 87 லட்சம் கிரெடிட் கார்டுகளையும், ஆக்சிஸ் வங்கி 62 லட்சம் கிரெடிட் கார்டுகளையும் மே மாதம் வழங்கியுள்ளன என்று ஆர்பிஐ வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன.

டெபிட் கார்டுகளை பொறுத்தவரையில் பஞ்சாப் நேஷ்னல் வங்கி 5.2 கோடி கார்டுகளையும், பாங்க் ஆஃப் இந்தியா 2.2 கார்டுகளையும், எஸ்பிஐ 1.9 கோடி கார்டுகளையும் மே மாதம் இழந்துள்ளன.

டெபிட் கார்டு பயன்படுத்துபவர்கள் பலர் வேறு இடங்களுக்கு மாற்றலாகியும், அதன் வங்கி கணக்கு முகவரியை மாற்றாமல் இருப்பது, புதிய சிப் கார்டை பெற்ற பிறகும் அதை ஆக்டிவேட் செய்யாமல் இருப்பதுமே இந்த சரிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் கிரெடிட் கார்டு ஸ்வைப் செய்வது 3 சதவீதமும் டெபிட் கார்டு ஸ்வைப் செய்வது 0.04 சதவீதமும் மே மாதம் அதிகரித்துள்ளது. அதே கால கட்டத்தில் பிஓஎஸ் இயந்திரத்தில் கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஷாப்பிங் செய்தவர்கள் 61,300 கோடி ரூபாயும், ஏடிஎம் பரிவத்தனைகள் 400 கோடி ரூபாயும் செய்துள்ளனர்.
Loading...
மார்ச் மாதம் 89 கோடி முறை டெபிட் கார்டு மூலம் ஏ.டி.எம்மில் பரிவர்த்தனைகள் நடைபெற்று இருந்தது. ஏப்ரல் மாதம் அது 81 கோடி முறையாகச் சரிந்து இருந்தது. ஆனால் மே மாதம் அது மீண்டும் 82 கோடி முறையாக அதிகரித்துள்ளது.

மேலும் பார்க்க:
First published: July 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...