Home /News /business /

டெபிட், கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... அக்டோபர் முதல் புதிய விதிகள்

டெபிட், கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... அக்டோபர் முதல் புதிய விதிகள்

மாதிரி படம்

மாதிரி படம்

கஸ்டமர் கிரெடிட் கார்டு தேவையில்லை என்பதை உறுதி அளித்த ஏழு நாட்களுக்குள் கார்டை ரத்து செய்ய வேண்டும். இதற்கு வாடிக்கையாளரிடம் இருந்து எந்த கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Delhi, India
    வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான பல்வேறு விதிகளை அவ்வப்போது ரிசர்வ் வங்கி மாற்றி அல்லது திருத்தி அமைக்கும். தொடர்ச்சியாக முன்னேறி வரும் தொழில்நுட்பம், இணைய பயன்பாடு, ஆன்லைனிலேயே அனைத்து சேவைகளையும் பெறும் வசதி ஆகியவை பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி அவ்வப்போது புதிய விதிகள் மற்றும் விதிமுறைகளை மேற்கொள்ளும்.

    சில மாதங்களுக்கு முன்பு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான விதிகள், ஆன்லைன் பண பரிவர்த்தனை வரம்புகள் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளும் பின்பற்ற வேண்டும் என்று வெளியிட்டது. அதைத் தொடர்ந்து தற்போது அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் டெபிட் மற்றும் கடைக்காரர்களுக்கு புதிய விதிகள் அமல்படுத்த உள்ளதாக ரிசர்வ் வங்கி மீண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    ஜூலை 1 ஆம் தேதியே அறிவிக்கப்பட்ட மாற்றங்கள் – முதன்மை வழிகாட்டி

    கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், ‘கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு’ வழங்குதல் மற்றும் நடத்தை விதிமுறைகள் 2022 என்ற பிரிவில் கூறப்பட்டுள்ள முதன்மை வழிகாட்டி என்ற புதிய விதிமுறைகளை ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஆனால், உடனடியாக இதை செயல்படுத்த முடியாது என்று பல்வேறு தரப்பிலிருந்து கருத்துகள் வந்ததால், இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு இந்த விதிகளை அமல்படுத்துவதற்கு மூன்று மாத காலம் அவகாசம் அளித்துள்ளதாக தெரிவித்து உள்ளது. அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிகளில் முக்கியமானவை என்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

    Also Read : போன் ஆஃப்லைன் இருந்தாலும் இனி வாட்ஸ்அப்பை இயக்க முடியுமாம் - புதிய அப்டேட் அறிமுகம்.!

    முதன்மை வழிகாட்டியில் கூறப்பட்டுள்ளபடி வாடிக்கையாளரின் ஒப்புதல் இல்லாமல் கிரெடிட் கார்டை ஆக்டிவேட் செய்யக்கூடாது என்பது ஒரு முக்கியமான விதியாகும். கிரெடிட் கார்டு அனுப்பப்பட்ட வாடிக்கையாளர், கார்டை பெற்ற தேதியிலிருந்து 30 நாட்கள் அதை ஆக்டிவேட் செய்யவில்லை என்றால் வங்கிகள் தானாக ஆக்டிவேட் செய்யக்கூடாது. கஸ்டமரின் ஒப்புதலை பெற்ற பிறகு தான் வங்கிகள் அதை ஆக்டிவேட் செய்ய வேண்டும். கடன் அட்டை வழங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளரின் ஒப்புதலை பெற்றுக்கொண்டு OTP அங்கீகரிக்கும் அடிப்படையில்தான் கார்டை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

    கிரெடிட் கார்டை ஆக்டிவேட் செய்வதற்கு வாடிக்கையாளர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அதை வழங்கிய வங்கி அல்லது நிதி நிறுவனம் அந்த அட்டையை கேன்சல் செய்ய வேண்டும். கஸ்டமர் கிரெடிட் கார்டு தேவையில்லை என்பதை உறுதி அளித்த ஏழு நாட்களுக்குள் கார்டை ரத்து செய்ய வேண்டும். இதற்கு வாடிக்கையாளரிடம் இருந்து எந்த கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது.

    வாடிக்கையாளரின் அனுமதி அல்லது ஒப்புதல் இல்லாமல் கார்டு லிமிட்டை மாற்றக்கூடாது. கார்டு வழங்கும் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் கார்டு ஹோல்டரின் ஒப்புதலோடுதான் கிரெடிட் லிமிட் வழங்கியுள்ளார்கள், எந்த கால கட்டத்திலும் அந்த விதிமுறையை மீறவில்லை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். ஜூலை 1 ஆம் தேதியே இந்த விதி கட்டாயமாக அமல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டாலும், செம்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    செலுத்தப்படாத கட்டணம் சார்ந்த விதிகள் மற்றும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்டு வட்டி போன்றவற்றை அமல்படுத்துவதையும் ரிசர்வ் வங்கி ஒத்தி வைத்துள்ளது. முதன்மை வழிகாட்டியின் படி, கட்டண நிலுவை, அதன் மீது விதிக்கப்படும் வரிகள், கூட்டு வட்டி கணக்கீடு ஆகியவற்றுக்காக மூலதனமாக்கல் செய்யக்கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Credit Card, RBI

    அடுத்த செய்தி