Home /News /business /

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு முதல் ஆட்டோ டெபிட் வரை - அக்டோபர் மாதத்தில் வரவுள்ள மாற்றங்கள்!

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு முதல் ஆட்டோ டெபிட் வரை - அக்டோபர் மாதத்தில் வரவுள்ள மாற்றங்கள்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் வெளியிட்ட உத்தரவின்படி, கிரெடிட் / டெபிட் கார்டிலிருந்து தானாக டெபிட் செய்யும் வசதி கூடுதலாக மேம்படுத்தப்பட இருக்கிறது.

அக்டோபர் மாதத்தில் பல்வேறு மாற்றங்கள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பென்சன், எல்.பி.ஜி விலை உயர்வு முதல் மதுக்கடைகள் மூடல் வரை ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்து இங்கு காண்போம்.,

1. ஓய்வூதியம் :

அக்டோபர் 1 முதல் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான ‘டிஜிட்டல் சான்றிதழ்’ தொடர்பான விதிகள் மாற இருக்கின்றன.ஓய்வூதியம் பெறுபவர்கள் இந்தியாவில் உள்ள தலைமை தபால் அலுவலகங்களில் ‘டிஜிட்டல் சான்றிதழ்’ அல்லது ‘வாழ்க்கை சான்றிதழை’ தங்களுடைய ஜீவன் பிரமான் மையத்தில் சமர்பிக்க வேண்டும்.இதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நவம்பர் 30 வரை நீட்டித்துள்ளது.இதன் மூலம் ஓய்வூதியதாரர்களுக்கான சேவை எளிதில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

2. காசோலைகள் செல்லாது :

அக்டோபர் முதல் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் அலகாபாத் வங்கிகளின் பழைய காசோலை புத்தகங்கள் மற்றும் MICR குறியீடுகள் செல்லாது என்றும், இதனை புதிப்பிக்கப்படாவிட்டால் வங்கிகளால் வழங்கப்படும் கடன்கள் ரத்து செய்யப்படும்.எனவே நீங்கள் இந்த மூன்று வங்கிகளை சேர்ந்தவர்களாக இருந்தால் இந்த விஷயத்தை மறந்து விடாதீர்கள்.

3. ஆட்டோ டெபிட் வசதி:

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் வெளியிட்ட உத்தரவின்படி, கிரெடிட் / டெபிட் கார்டிலிருந்து தானாக டெபிட் செய்யும் வசதி கூடுதலாக மேம்படுத்தப்பட இருக்கிறது. இதனால் அனைத்து வங்கிகளும் AFA என்ற முறையை செயல்படுத்த வேண்டும்.இதனால் மாதாந்திர பில்கள் மற்றும் மாதந்தோறும் தவணை செலுத்துதல் போன்றவை, 24 மணி நேரத்திற்கு முன்பே வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல் அல்லது எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அனுப்பப்படும்.அதன் பிறகே உங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும்.

4. முதலீட்டு விதிகளில் மாற்றங்கள்:

நிதி முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக செபி என்று அழைக்கப்படும் ‘இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்’ புதிய விதியை கொண்டுள்ளது.இந்த விதியானது, AMC அதாவது மியூச்சுவல் ஃபண்ட் ஹவுஸில் பணிபுரியும் ஊழியர்களுக்கானது ஆகும்.இவ்விதியின்படி ஊழியர்கள் அவர்களின் மொத்த சம்பளத்தில் 10 சதவீதம் முதலீடு செய்ய வேண்டும்.இது அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.ஏதாவது மாற்றங்கள் காரணமாக இடம் மாறுதல் போன்றவை காரணமாக இருந்தால் 2023க்குள் 20 சதவீதம் முதலீடு செய்ய வேண்டும்.

Also read... இன்றே கடைசி நாள்... இதை செய்தால் பிரதமரின் விவசாய திட்டத்தில் ₹4000 பெறலாம்!

5. கேஸ் சிலிண்டர் விலை உயருமா?

ஒவ்வொரு மாதமும், வழக்கம் போல் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களின் விலை அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் மாதாந்திர திருத்தத்திற்குப் பிறகு மாறும்.அக்டோபர் 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் மீண்டும் விலை உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தகவல் உறுதிப்படுத்தவில்லை.உள்நாட்டு எல்பிஜி மற்றும் வணிக சிலிண்டர்களின் புதிய விலைகள் மாதந்தோறும் நிர்ணயிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

6. மூடப்படும் மதுக்கடைகள் :

அக்டோபர் 1 முதல் நவம்பர் 16 வரை டெல்லியில் உள்ள ‘தனியார் மதுக்கடைகள்’ மூடப்படும் என்று டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.இதுபற்றி அவர் கூறும்போது, ‘புதிய கலால் கொள்கையின் கீழ், தலைநகரை 32 மண்டலங்களாகப் பிரிப்பதன் மூலம் உரிமங்கள் ஒதுக்கீடு செயல்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய கொள்கையின் கீழ் வரும் கடைகள் மட்டுமே நவம்பர் 17 முதல் செயல்பட அனுமதிக்கப்படும்’ என்று கூறினார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Credit Card, LPG Cylinder, News On Instagram

அடுத்த செய்தி