• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ஆர்பிஐ புதிய விதிகள் அமல்.. வாடிக்கையாளர்களுக்கான மாற்றங்கள் என்ன?

ஆர்பிஐ புதிய விதிகள் அமல்.. வாடிக்கையாளர்களுக்கான மாற்றங்கள் என்ன?

பண பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ரிசர்வ் வங்கி புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள ஆட்டோ டெபிட் விதிகள் அக்டோபர் 1ம் தேதியான இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

  • Share this:
    பண பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ரிசர்வ் வங்கி புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள ஆட்டோ டெபிட் விதிகள் அக்டோபர் 1ம் தேதியான இன்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த புதிய விதி மாற்றத்தால் வழக்கமாக ஆட்டோ டெபிட்டிற்காக டெபிட்/கிரெடிட் கார்டுகள் மொபைல் வாலெட்களை பயன்படுத்துவோர் சிரமத்தை சந்திக்க நேரிடலாம். பெரும்பாலான மக்கள் தங்களது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் தங்களது செல்போன் பில்கள், OTT சேவைகள் உள்ளிட்ட பலவற்றுக்கான கட்டணத்தை, ஆட்டோ டெபிட் ஆப்ஷன் மூலம் செலுத்தி வருகின்றனர்.

    உதாரணமாக பேங்க் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் தங்களது டெபிட் அல்லது கிரெடிட் கார்டு குறித்த தகவல்களை கொடுத்து தாங்கள் பயன்படுத்தும் சேவைகளுக்கு, அந்தந்த சேவை வழங்குநர்களுக்கு மாதாமாதம் தங்கள் அக்கவுண்ட்டிலிருந்து ஆட்டோமேட்டிக்காக பணத்தை செலுத்தும் ஆட்டோ டெபிட் ஆப்ஷனை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் பயன்பாட்டு பில்கள், தொலைபேசி ரீசார்ஜ், டிடிஎச் மற்றும் ஓடிடி பேமெண்ட்ஸ் போன்ற பல்வேறு சேவைகளுக்கு இனிமேல் ஆட்டோமேட்டிக் பேமெண்ட் ஆப்ஷன் இல்லை என்று கூறி இருக்கிறது.

    RBI-ன் புதிய விதிப்படி எந்தவொரு பரிவர்த்தனைக்கும் முன்னதாக அங்கீகாரத்திற்கான கூடுதல் காரணி (additional factor of authentication - AFA) இருக்க வேண்டும் தவிர ரூ.5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பேமெண்ட்ஸ்களை கொண்ட வாடிக்கையாளர்களின் ஒப்புதல் இன்றி ஆட்டோ டெபிட் மூலம் அவர்களது பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பணம் எடுக்கப்படாது.

    Also Read : பணத்தை எந்த வங்கியில் போட்டால் நல்ல வட்டி கிடைக்கும் தெரியுமா?

    கடன் தவணையை வாடிக்கையாளரின் பேங்க் அக்கவுண்டில் இருந்து தானாகவே பணம் எடுத்துக் கொள்ளும் ஆட்டோ டெபிட் முறை, ATM கார்டின் ரகசிய எண் தேவையின்றி ரூ.5,000 வரை எடுப்பது போன்ற முறைகள் தற்போது நடைமுறையில் இருக்கிறது. இதனிடையே இன்று முதல் நடைமுறைக்கு வரும் ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை இங்கே பார்க்கலாம்.

    * RBI-ன் புதிய விதிகளின்படி நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும் பேங்க், உங்களது தொடர்ச்சியான கட்டண கடன்கள் தொடர்பான தகவல் அல்லது எச்சரிக்கையை உங்களுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பே அனுப்ப வேண்டும். உதாரணமாக நீங்கள் மாதாந்திர வீட்டு கடன்களை செலுத்தி வருகிறீகள் என்றால் அதற்கான பேமெண்ட்டை ஒப்புக்கொள்ளவும், சரிபார்க்கவும் உங்கள் வங்கி இது தொடர்பான தகவல்களை உங்களுக்கு ஒரு நாளுக்கு முன்னரே அனுப்ப வேண்டும்.

    Also Read : உங்களிடம் எஸ்பிஐ ஏடிஎம் கார்டு இருக்கா? அப்ப உங்களால் கடன் வாங்க முடியும் தெரியுமா?

    * ஒன்-டைம் ரிஜிஸ்ட்ரேஷன்: புதிய விதியின் கீழ் வாடிக்கையாளர் தரப்பிலிருந்து ஒன்-டைம் ரிஜிஸ்ட்ரேஷன் செயல்முறையை செய்து முடிக்க வேண்டும். மேலும் ஆரம்ப பரிவர்த்தனைக்கு மட்டுமே AFA தேவைப்படுகிறது. முதல் முறைக்கு பின், வாடிக்கையாளர்கள் பிற எதிர்கால பரிவர்த்தனைகளை AFA இல்லாமல் செய்ய முடியும்.

    * சேவை வழங்குநர்களுக்கு மாதா மாதம் குறிப்பிட்ட தேதியில் ஆட்டோ டெபிட் மூலம் செலுத்தப்படும் தொடர்ச்சியான கட்டணம் ரூ.5,000-க்கு மேல் இருக்கும் பட்சத்தில், ரிசர்வ் வங்கியின் புதிய விதிப்படி பேமெண்ட் ப்ராசஸ் செய்யப்படும் முன் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு OTP-ஐ அனுப்ப வேண்டும்.

    எளிமையாக சொல்வதென்றால் நீங்கள் பயன்படுத்தி வரும் ஒரு சேவை நாளையுடன் முடிய போகிறது என்றால் 24 மணி நேரத்திற்கு முன் உங்களுக்கு செல்போன் அல்லது இமெயில் மூலம் நோட்டிஃபிகேஷன் அனுப்பப்படும். இதற்கு நீங்கள் அனுமதி வழங்கினால் தான் அந்த பரிவர்த்தனை நடைபெறும். இது ரூ.5,000-ற்கும் கீழ் உள்ள பரிவர்தனைகளுக்கான நடைமுறை. அதுவே ரூ-5,000-ற்கும் மேற்பட்ட பரிவர்த்தனை என்றால் OTP மூலம் வாடிக்கையாளர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும். `

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: