முகப்பு /செய்தி /வணிகம் / வாடிக்கையாளர்கள் ஒப்புதலின்றி இனி ஆட்டோ பேமெண்ட் இல்லை - விதிமுறைகளில் புதிய மாற்றம்!

வாடிக்கையாளர்கள் ஒப்புதலின்றி இனி ஆட்டோ பேமெண்ட் இல்லை - விதிமுறைகளில் புதிய மாற்றம்!

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

ஆட்டோ பேமெண்ட் விதிகளில் ஏப்ரல் முதல் மாற்றங்கள் வர உள்ளன. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.

  • Last Updated :

மொபைல் பில், பிற பயன்பாட்டிற்கான பில்கள் உள்ளிட்ட இன்னும் பல மாதாந்திர கட்டணங்களை செலுத்துவதற்கான ஆட்டோ பேமெண்ட் விதிகளில் ஏப்ரல் முதல் மாற்றங்கள் வர உள்ளன. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. இதன்படி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் அல்லது வாலட்கள் வழியே செய்யப்பட்டு வரும் ஆட்டோ பேமெண்ட் முறைக்கு ஏப்ரல் முதல் வாடிக்கையாளர்களிடமிருந்து கூடுதல் அங்கீகாரம் தேவைப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

நடைமுறையில் உள்ள ஆட்டோ பேமெண்ட் முறையில் வாடிக்கையாளர்களின் நலன் கருதி புதிய கட்டுப் பாட்டை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. அதன்படி டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், யுபிஐ பேமெண்ட்ஸ் அல்லது பிற ப்ரீபெய்ட் கட்டணக் கருவிகள் (PPI) ஆகியவற்றைப் பயன்படுத்தி செய்யப்படும் தொடர்ச்சியான பரிவர்த்தனைகளுக்கு வரும் ஏப்ரல் 1 முதல் கூடுதல் காரணி அங்கீகாரம் (additional factor authentication) தேவைப்படும் என்று ரிசர்வ் வங்கி முன்பே கூறியது.

அதன்படி ஏப்ரல் முதல் அமலுக்கு வர உள்ள புதிய விதிமுறைகளின் கீழ் தவணை மற்றும் பிற தொடர்ச்சியான கட்டணம் செலுத்த வேண்டியது குறித்து, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் ஒப்புதலை பெற்ற பிறகே அவர்களது வங்கி கணக்கில் இருந்து, ஆட்டோ பேமண்ட் முறையில் பணம் எடுக்க முடியும். இந்த விதி நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி + ஹாட்ஸ்டார் உள்ளிட்ட வெவ்வேறு ஸ்ட்ரீமிங் இயங்குதளங்களுக்கான மாத சந்தா கட்டணங்கள் செலுத்துவதில் லேசான பாதிப்பை ஏற்படுத்த கூடும்.

ஆட்டோ பேமெண்ட் குறித்த ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் பின்வருமாறு:

1. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் அல்லது வாலட்கள் மூலம் ஆட்டோ பேமெண்ட் செய்ய இனி வாடிக்கையாளரின் கூடுதல் அங்கீகாரம் தேவைப்படும். கார்டில் e-mandate வசதியைத் தேர்வுசெய்ய விரும்பும் ஒரு அட்டைதாரர், வழங்குபவரின்(issuer) கூடுதல் காரணி அங்கீகார சரிபார்ப்புடன் ஒரு முறை பதிவுசெய்தல் செயல்முறையை (one time registration process) மேற்கொள்ள வேண்டும்.

2. கார்டுகள் மற்றும் வாலட்கள் ஆகியவற்றிலிருந்து ஆட்டோ டெபிட் செய்வதற்கான வரம்பு ரூ.5,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.5000-க்கும் மேல் உள்ள ஆட்டோ டெபிட் பரிவர்த்தனைகளுக்கு, கூடுதல் OTP தேவைப்படும்.

3. ரூ.5,000-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைக்கு வாடிக்கையாளர்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகே, அவர்களது கணக்கில் இருந்து, ஆட்டோ பேமெண்ட் முறையில் பணம் பிடித்தம் செய்ய முடியும். அதே போல் தவணை பிடித்தம் செய்வதற்கான கெடு முடிவடைய முடிய 5 நாட்கள் இருக்கும் போது, வாடிக்கையாளருக்கு உரிய தகவல் அனுப்ப வேண்டும். அதற்கு வாடிக்கையாளர் தரப்பிலிருந்து அனுமதி கிடைத்த பின் ஆட்டோ பேமெண்ட் முறையில் பணம் பிடித்தம் செய்ய வேண்டும்

4. அனைத்து வகையான அட்டைகளையும் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு புதிய விதி பொருந்தும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, யுபிஐ மற்றும் பிபிஐ-க்கள், வாலட்கள் என அனைத்து முறையில் செய்யப்படும் ஆட்டோ பேமெண்ட் முறைகளுக்கும் புதிய விதி பொருந்தும்.

5. புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப 2021 மார்ச் 31-க்குள் (இன்றுக்குள்) கூடுதல் காரணி அங்கீகாரத்தை (additional factor authentication) அறிமுகப்படுத்துமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி முன்பே கேட்டுக் கொண்டிருந்தது. இது தொடர்பாக கடந்த டிசம்பரில் ரிசர்வ் வங்கி அனுப்பிய சுற்றறிக்கையில், மேற்கூறிய அறிவுறுத்தல்களுக்கு இணங்காமல் கார்டுகள் / பிபிஐ / யுபிஐ நடைமுறைகளின் கீழ் செய்யப்படும் தொடர்ச்சியான பரிவர்த்தனைகளை மார்ச் 31-க்கு பின் தொடர முடியாது என்று கூறி இருந்தது.

6. குறிப்பிட்ட வங்கிகள் பரிவர்த்தனைக்கு முந்தைய அறிவிப்பை குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்கு முன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப வேண்டும். பரிவர்த்தனைக்கு முந்தைய அறிவிப்பைப் பெறுவதற்கு எஸ்எம்எஸ், மின்னஞ்சல் உள்ளிட்ட பயன்முறையைத் தேர்வுசெய்ய பயனருக்கு விருப்பம் கொடுக்கப்பட்டுள்ளது.

Also read... அமேசானில் ஸ்மார்ட்போன்களை வாங்கும் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் 40% வரை தள்ளுபடி பெற ஒரு அரிய வாய்ப்பு..!

7. பரிவர்த்தனையைத் தொடர, வாடிக்கையாளரின் ஒப்புதல் அவசியம். குறிப்பிட்ட பரிவர்த்தனையிலிருந்து விலகுவதற்கான விருப்பமும் கார்ட் ஹோல்டர்களுக்கு உண்டு.

8. எந்த நேரத்திலும் எந்தவொரு e-Mandate-ஐயும் திரும்பப் பெற அட்டைதாரருக்கு ஆன்லைன் வசதியை வழங்குபவர் தர வேண்டும் என்றும் ரிசர்வ் வாங்கி அறிவுறுத்தியுள்ளது. மேலும் தொடர்ச்சியான பரிவர்த்தனைகளுக்கான கார்டுதாரர்கள் e-Mandate வசதியைப் பெறுவதற்கு எந்தவொரு கட்டணமும் அட்டைதாரரிடமிருந்து வசூலிக்கப்படாது என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

9. மேற்காணும் புதிய விதிமுறைகள் குறித்து வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கத் தொடங்கியுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள தகவலில்,ஒழுங்குமுறை தேவைகளுக்கு இணங்க, கூடுதல் பரிவர்த்தனை காரணி (AFA) இல்லாமல் உங்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டில் பதிவுசெய்யப்பட்ட தொடர்ச்சியான பரிவர்த்தனைகளுக்கான e-Mandate செயலாக்கம் ஏப்ரல் 1, 2021 முதல் நிறுத்தப்படும். தேவைப்படின் மெர்ச்சண்ட் வெப்சைட் அல்லது அப்ளிகேஷன் வழியே உங்கள் கார்டின் மூலம் பணம் செலுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos

    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    First published:

    Tags: Credit Card, RBI