ஹோம் /நியூஸ் /வணிகம் /

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு... அடுத்த மாதம் 7ம் தேதி வரை நீட்டிப்பு...

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு... அடுத்த மாதம் 7ம் தேதி வரை நீட்டிப்பு...

வருமான வரி

வருமான வரி

Income Tax | 2022-23-ம் கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் 31ம் தேதியோடு நிறைவடைபவர்களுக்கான கால அவகாசம் அடுத்த மாதம் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நிறுவனங்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அடுத்த மாதம் 7ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

  வருமான வரி சட்டம் பிரிவு 139, துணை பிரிவு (1)-ன்படி 2022-23-ம் கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் 31ம் தேதியோடு நிறைவடைபவர்களுக்கான கால அவகாசத்தை, மத்திய நேரடி வரிகள் வாரியம் அடுத்த மாதம் 7ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

  இதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் செய்தித்தொடர்பாளர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 2022-23-ம் கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் 31ம் தேதியோடு நிறைவடைபவர்களுக்கான கால அவகாசம் அடுத்த மாதம் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க : கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்... முதல்வர் ஸ்டாலின் செயலுக்கு அண்ணாமலை பாராட்டு

  மேலும் இதுதொடர்பான மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் சுற்றறிக்கையை www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  இதுகுறித்து AMRG & அசோசியேட்ஸ் இயக்குநர் (கார்ப்பரேட் & சர்வதேச வரி) ஓம் ராஜ்புரோஹித் கூறுகையில், “இந்த நீட்டிப்பு பண்டிகை காலத்தில் வரி விதிப்புகளுடன் எதிர்காலத்தில் ஏற்படும் முரண்பாடுகளை தடுக்க (30 நாட்கள் சட்டப்பூர்வ கால இடைவெளியை பேணுதல்) மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்கும்” என்றார்.

  மேலும் “கடந்த மாதம்  மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அக்டோபர் 7 வரை 7 நாட்களுக்கு நீட்டித்தது. பரிவர்த்தனை விலை ஒழுங்குமுறைக்கு உட்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒப்பிடக்கூடிய ஒரு நிவாரணம் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது” என்றும் அவர் கூறினார்.

  Published by:Karthi K
  First published:

  Tags: Income tax, Tamilnadu