• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • வரி சேமிப்பு டெபாசிட்களுக்கு சிறந்த வட்டி விகிதங்களை வழங்கும் வங்கிகளின் பட்டியல்

வரி சேமிப்பு டெபாசிட்களுக்கு சிறந்த வட்டி விகிதங்களை வழங்கும் வங்கிகளின் பட்டியல்

வரி சேமிப்பு டெபாசிட்களுக்கு சிறந்த வட்டி விகிதங்களை வழங்கும் வங்கிகளின் பட்டியல்!

வரி சேமிப்பு டெபாசிட்களுக்கு சிறந்த வட்டி விகிதங்களை வழங்கும் வங்கிகளின் பட்டியல்!

வருமானம் நிச்சயம் என்பதால் முதலீட்டாளர்கள் நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். இந்த எஃப்.டி.களில் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் 80 சி வரி விலக்கு நன்மையை பெறலாம்.

  • Share this:
வரி சேமிப்பு நிலையான வைப்புத்தொகை அல்லது வரி சேமிப்பு FD பாதுகாப்பான மற்றும் வசதியான வரி சேமிப்பு திட்டங்களைத் தேடும் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல தீர்வாக இருக்கும். இது எளிதான மற்றும் பாதுகாப்பான வரி சேமிப்பு முறையாகும். இது பங்கு அடிப்படையிலான வரி சேமிப்பு முறைகளை விட பாதுகாப்பானது. மேலும், வரி சேமிப்பாளரின் வருமானம் நீங்கள் முதலீடு செய்யும் இடத்தைப் பொறுத்து அஞ்சல் அலுவலகம் அல்லது வங்கியால் ஒப்பந்த அடிப்படையில் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. இந்த வருமானம் FD இன் சேமிப்பு காலத்திற்கு உட்பட்டது.

வரி சேமிப்புக்கான ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டத்தில் (ELSS) மொத்த தொகை முதலீடுகள் ஆபத்தானதாக இருக்கலாம். ஆனால் ஐந்தாண்டு வரி சேமிப்பு நிலையான வைப்புத்தொகைகளில் (FD) முதலீடு செய்வது தற்போதைய சூழ்நிலையில் முதலீட்டாளர்களுக்கு ஆறுதலளிக்கிறது. மேலும், வருமானம் நிச்சயம் என்பதால் முதலீட்டாளர்கள் நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். இந்த எஃப்.டி.களில் முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் 80 சி வரி விலக்கு நன்மையை பெறலாம்.

அதாவது வருமான வரிச் சட்டத்தின் 80 சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீட்டிற்கு நீங்கள் வரிவிலக்கு பெறலாம். வரி சேமிப்பு எஃப்.டி.களுக்கு ஐந்து வருட கால இடைவெளி உள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் முதலீட்டு பணத்தை திரும்பப் பெற முடியாது. மேலும் தற்போது வங்கிகளில் FD முதலீடுகளுக்கான விகிதங்கள் குறைந்திருந்தாலும், சில தனியார் வங்கிகள் இன்னும் உங்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்கி வருகின்றன.

பாங்க் பஜார் வெளியிட்ட தரவுகளின்படி, சிறிய தனியார் வங்கிகள் வரி சேமிப்பு எஃப்.டி.களுக்கு 6.75 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன. முன்னணி பொதுத்துறை வங்கிகளுடன் ஒப்பிடும்போது வரி சேமிப்பு எஃப்.டி.களுக்கான இந்த வட்டி விகிதங்கள் அதிகம் தான். அதன்படி டிசிபி (DCB) வங்கி மற்றும் யெஸ் வங்கி (Yes Bank) ஆகியவை வரி சேமிப்பு FDக்களுக்கு 6.75% வட்டி வழங்கி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதற்கடுத்ததாக இண்டஸ்இண்ட் (IndusInd) வங்கி 5 ஆண்டு வரி சேமிப்பு எஃப்.டி.களில் 6.50% வட்டியை வழங்குகின்றன.

ஏ.யூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி மற்றும் உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி முறையே வரி சேமிப்பு எஃப்.டி.க்களுக்கு 6.50% மற்றும் 5.80% வட்டியை வழங்குகின்றன. முன்னணி தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும்போது சிறு நிதி வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள் அதிகம். இதுதவிர வெளிநாட்டு வங்கிகளான டிபிஎஸ் வங்கி மற்றும் டாய்ச் வங்கி (Daichi Bank) ஆகியவை வரி சேமிப்பு எஃப்.டி.க்களுக்கு 5.50% வட்டியை வழங்குகின்றன. தனியார் வங்கிகளான ஆக்சிஸ் வங்கி , ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி ஆகியவை முறையே 5.50 %, 5.35 % மற்றும் 5.30% வட்டியை வரி சேமிப்பு எஃப்.டி.களுக்கு வழங்குகின்றன.

5 ஆண்டு வரி சேமிப்பு எஃப்.டி.களுக்கு யூனியன் பாங்க் ஆப் இந்தியா 5.55 % வட்டியை வழங்குகிறது. பொதுத்துறை வங்கி வழங்கும் மிக உயர்ந்த விகிதம் இதுவாகும். அதனைத் தொடர்ந்து கனரா வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முறையே 5.50 % மற்றும் 5.40 % வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இதுதவிர, டி.சி.பி வங்கி மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வரி சேமிப்பு எஃப்.டி.களில் முதலீடு செய்யப்படும் ரூ.1.5 லட்சம் தொகை 5 ஆண்டுகளுக்குப் பிறகு முறையே ரூ .2.10 லட்சம் மற்றும் ரூ.1.98 லட்சமாக வளர்கிறது. குறைந்த வாடிக்கையாளர் தளத்தைக் கொண்ட சிறிய தனியார் வங்கிகள் பொதுவாக வாடிக்கையாளர்களையும் வைப்புதாரர்களையும் ஈர்க்க அதிக கட்டணங்களை வழங்குகின்றன. அதனால்தான் அரசாங்கத்திற்கு சொந்தமான வங்கிகள் குறைந்த கட்டணங்களை வழங்குகின்றன.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: