Home /News /business /

உங்களிடம் கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் உள்ளதா? அப்ப இந்த தகவல் உங்களுக்கு தான்!

உங்களிடம் கிழிந்த ரூபாய் நோட்டுக்கள் உள்ளதா? அப்ப இந்த தகவல் உங்களுக்கு தான்!

கிழிந்த நோட்டுகள்

கிழிந்த நோட்டுகள்

ரூபாய் நோட்டுகளில் எழுதப்பட்டிருந்தாலும் செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி விதிமுறைகள் தெரிவிக்கின்றன.

    இந்தியாவில் பல்வேறு மதிப்புகளைக் கொண்ட நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை நாம் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தி வருகிறோம். நாணயங்களின் மதிப்பு குறைவு என்பதால், பெரும்பாலான சமயங்களில் நாம் ரூபாய் நோட்டுகளைத் தான் பரிவர்த்தனைகளுக்கு அதிகமாக பயன்படுத்துகிறோம்.

    ரூபாய் நோட்டுகள், சிறப்பு வாய்ந்த தாள்களில் தயாரிக்கப்படுகின்றன என்றாலும் கூட, நாள் கணக்கில் அது பயன்பாட்டில் சுற்றி வரும்போது சேதம் அடைய தொடங்குகிறது. ஏதேச்சையாக எங்கோ ஒரு இடத்தில் நாம் பெறும் பணம் என்பது கிழிந்து அல்லது சேதமடைந்து இருக்கிறது. இதுபோன்ற கிழிந்த நோட்டுகளை என்ன செய்வது என்ற குழப்பத்தில் அதை அப்படியே பர்ஸ்களில் வைத்திருக்கும் நபர்களும் உண்டு.

    இதையும் படிங்க.. FD rates: நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வட்டி.. பிக்சட் டெபாசிட் திட்டத்தில் இத்தனை பயன்களா?

    ஆனால், இந்திய குடிமக்கள் அனைவருக்கும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பை அரசு வழங்குகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் ரூ.5, 10, 20, 50, 100, 500, 1000 ஆகிய மதிப்புகளில் ரூபாய் தாள்கள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால், கடந்த 2017ஆம் ஆண்டில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டபோது 500, 1000 ஆகிய உயர் மதிப்பு கொண்ட ரூபாய் தாள்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அதே சமயம், புதிய 500, 200 மற்றும் 2,000 ஆகிய ரூபாய் தாள்கள் அடுத்தடுத்து அறிமுகம் செய்யப்பட்டன.

    கிழிந்த ரூபாய் தாள்களை மாற்றிக் கொள்ள ரிசர்வ் வங்கி விதித்துள்ள விதிமுறை :

    ரூபாய் தாள் கிழிந்து விட்டால், அதன் மதிப்பும் சற்று குறைந்து விடும். ஒரு நபரிடம் 20 கிழிந்த ரூபாய் தாள்கள் உள்ளது என்றால், அதன் மொத்த மதிப்பு ரூ.5,000 க்கு மேல் வரும் பட்சத்தில், அதற்கான பரிவர்த்தனை கட்டணம் பிடித்தம் செய்யப்படும். பணத்தை மாற்றிக் கொள்வதற்கு முன்பாக, அந்த தாள்களில் உள்ள செக்யூரிட்டி அடையாளங்கள் காணும் நிலையில் இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு ரூபாய் தாளுக்கும் ஒவ்வொரு விதி :

    கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக நீங்கள் வங்கிக்கு கொண்டு செல்லும்போது, அது மதிப்பு கொண்ட தொகை, எந்த அளவுக்கு கிழிந்துள்ளது என்பதைப் பொறுத்து, திரும்ப பெறத்தக்க ரூபாயின் மதிப்பு மாறுபடும். உதாரணத்திற்கு ஒரு 2,000 ரூபாய் நோட்டில் 88 ஸ்கொயர் செ.மீ. அளவுக்கு கிழிந்துள்ளது என்றால் உங்களுக்கு முழு பணமும் திரும்ப கிடைக்கும். அதுவே, 44 ஸ்கொயர் செ.மீ. கிழிந்து இருந்தால் பாதி தொகையை பெற்றுக் கொள்ளலாம். ஒரு முழு நோட்டின் அளவு 109.56 ஸ்கொயர் செ.மீ. ஆகும்.

    இதையும் படிங்க.. ஏப்ரல் மாத வங்கி விடுமுறை எத்தனை நாட்கள் ? முழு விவரம் இதோ..

    எந்தெந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் :

    ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் படி 3 வகையான ரூபாய் நோட்டுகளை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். முதலாவதாக, பல கைகள் மாறி வந்ததால் கலர் மங்கிய நோட்டுகள் மற்றும் இரண்டாவதாக லேசாக கிழிந்த அதே சமயம், ஒரிஜினல் தன்மை அப்படியே உள்ள நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். மூன்றாவதாக ரூபாய் நோட்டுகளின் வெவ்வேறு பீஸ்களை ஒட்டி வைத்திருந்தாலும் மாற்றிக் கொள்ளலாம். அதே சமயம், மிக, மிக சேதமடைந்து நம்பர்களை படிக்க முடியாத படி இருந்தால் அதை மாற்றிக் கொள்ள வங்கிகள் சம்மதிக்காது.

    பிற விதிமுறைகள் :

    ரூபாய் நோட்டுகளில் எழுதப்பட்டிருந்தாலும் செல்லுபடியாகும் என்று ரிசர்வ் வங்கி விதிமுறைகள் தெரிவிக்கின்றன. ஆனால், அரசியல் ரீதியாக எழுதப்பட்டது என்றால் அது செல்லுபடியாகாது. நாட்டில் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். ஆனால், குறைந்தபட்சம் 20 கிழிந்த நோட்டுகள் இருக்க வேண்டும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Foreign Currency, Money, RBI, Savings

    அடுத்த செய்தி