Home /News /business /

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி - விரைவில் அகவிலைப்படி உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி - விரைவில் அகவிலைப்படி உயர்வு!

மாதிரி படம்

மாதிரி படம்

டிஏ என்பது அரசு ஊழியர்களுக்கும் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அவர்களது ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும் தொகை ஆகும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்திய நற்செய்தி என்ன என்றால், எதிர்வரும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு அவர்களுக்கு டிஏ உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பது குறித்த தகவல்தான். அதிலும், இந்த மாத இறுதிக்குள் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹோலி பண்டிகை இந்த மாதம் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

மத்திய அரசு டிஏ அலோவன்சை உயர்த்தும் பட்சத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்கள் பலன் அடைவார்கள் என்று செய்தி நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன. தற்போது உயர்த்தப்பட இருக்கும் டிஏ தொகை மற்றும் இரண்டு மாதங்களுக்கான டிஏ அரியர் தொகை ஆகியவை மார்ச் மாத ஊதியத்துடன் சேர்த்து ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

மொத்தம் எவ்வளவு டிஏ :

மத்திய அரசு தற்போது 3 சதவீத அளவுக்கு டிஏ உயர்த்தினால், மத்திய அரசு ஊழியர்கள் பெற இருக்கும் மொத்தம் டிஏ என்பது அவர்களது அடிப்படை ஊதியத்தில் 34 சதவீதமாக இருக்கும். அதாவது, மிக குறைந்தபட்ச மாத ஊதியம் பெறு மத்திய அரசின் கடைநிலை பணியாளருக்கு மாத ஊதியம் ரூ.18,000 என்றால், ஓராண்டில் அவர் பெறும் டிஏ தொகை என்பது ரூ.73,440 ஆக இருக்கும்.

டிஏ என்றால் என்ன, நாம் இதுவரை அறிந்து வைத்திருப்பது என்ன?

டிஏ என்பது அரசு ஊழியர்களுக்கும் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அவர்களது ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும் தொகை ஆகும். பெருகி வரும் விலைவாசி உயர்வுகளுக்கு ஏற்ப, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை டிஏ மற்றும் டிஆர் ஆகிய அலோவன்ஸ் தொகைகள் உயர்த்தப்படுகின்றன. குறிப்பாக, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இந்த உயர்வு வழங்கப்படுகிறது.

எல்லோருக்கும் ஒரே அளவு டிஏ வழங்கப்படுமா?

ஒரே பணி, ஒரே ரேங்க், ஒரே அனுபவம் என்றாலும் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே மாதியான டிஏ வழங்கப்படாது. மாநகரகப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள், நகரப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் பணியாற்றும் ஊழியர்கள் என வகைப்படுத்தி, ஒவ்வொரு வகைப்பாட்டின் விலைவாசிகளுக்கு ஏற்ப டிஏ தொகை ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

Also read... உங்கள் கிரெடிட் ஸ்கோர் உயர வேண்டுமா - இந்த வழிமுறையை பின்பற்றுங்கள்

கடைசியாக எப்போது டிஏ உயர்த்தப்பட்டது :

அரசு இதற்கு முன்பு கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டிஏ தொகையை உயர்த்தியது. அப்போது 45 லட்சம் மத்திய அரசு பணியாளார்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இதன் மூலமாக பலன் பெற்றனர். தற்போது, இவர்களுக்கு 31 சதவீத டிஏ தொகை வழங்கப்பட்டு வருகிறது.

முன்னதாக, கொரோனா பெருந்தொற்று காலம் காரணமாக ஊழியர்களுக்கு டிஏ நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் டிஏ உயர்வு வழங்கப்பட்டது.

3 சதவீதம் வழங்க வாய்ப்பு :

தற்போது பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3 சதவீத டிஏ உயர்வு வழங்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக பல்வேறு ஊடகங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன. 3 சதவீதம் உயர்த்தப்பட்டால், மத்திய அரசு ஊழியரின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.20,000 ஆக இருக்கும்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Central government

அடுத்த செய்தி