மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தியை அரசு அறிவிக்க இருக்கிறது. 7ஆவது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, வரும் நாட்களில் டிஏ அலவன்ஸ் தொகையை உயர்த்த இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் எதிரொலியாக அவர்களது ஊதியமும் அதிகரிக்க உள்ளது.
ஜீ நியூஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான பிட்மென்ட் ஃபேக்டர் அலவன்ஸ் தொகையை அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கும். பிட்மென்ட் ஃபேக்டர் அலவன்ஸ் தொகையை 2.57 மடங்கில் இருந்து 3.68 மடங்காக அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு ஊழியர்கள் சங்கத்தினர்கள் ஏற்கனவே வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பான கொள்கை முடிவு தற்போது நிலுவையில் இருக்கிறது.
இது மட்டுமல்லாமல், மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18,000 இல் இருந்து ரூ.26,000 ஆக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போதைய சூழலில் பிட்மென்ட் ஃபேக்டர் அலவன்ஸ் தொகையை உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஜீ நியூஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
Also read... சேமிப்பு கணக்கு தொடங்க பெஸ்ட் வங்கி இதுதான்.. வட்டி மட்டுமே 7% கொடுக்குறாங்க!
தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு பிட்மென்ட் ஃபேக்டர் அடிப்படையில், அவர்களது அடிப்படை ஊதியம் கணக்கிடப்பட்டு வருகிறது. தற்போது ஊழியர் சங்கத்தினர்களின் கோரிக்கையின்படி இந்தத் தொகையை அரசு அதிகரித்தால், அது ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்திலும் எதிரொலிக்கும். அதாவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.8,000 வரை ஊதிய உயர்வு கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் எதிரொலியாக அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000 ஆக அதிகரிக்கும் என கருதப்படுகிறது.
பொதுவாக ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் டிஏ அலவன்ஸ் தொகையை உயர்த்துவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டில் இதுவரையிலும் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. தற்போதையதற்போதைய சூழலில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களது அடிப்படை ஊதியத்தில், 7ஆவது ஊதியக் குழு பரிந்துரையின் படி 31 சதவீதம் டிஏ அலவன்ஸ் தொகையாக செலுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் அதிகரிக்கப்பட்டால், அதன் எதிரொலியாக டிஏ அலவன்ஸ் தொகையும் அதிகரிக்கும்.
அதேசமயம், ஒன்றரை ஆண்டுகளுக்கான அரியர் தொகையை அரசு வழங்கும் என்றும், இதன் மூலமாக ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.2 லட்சம் வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அரசு தரப்பில் இருந்து இந்த தகவல் இதுவரையிலும் உறுதி உறுதிசெய்யப்படவில்லை. அதிகாரப்பூர்வ செய்தி அறிக்கை எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.