தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அறிவிப்பு... உயர்வில் பங்குச்சந்தை...!

தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அறிவிப்பு... உயர்வில் பங்குச்சந்தை...!
News 18 Creative
  • News18
  • Last Updated: September 20, 2019, 3:44 PM IST
  • Share this:
இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய தொழில் சலுகைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

கோவாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 37வது கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பே செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், உள்நாட்டு நிறுவனங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் நிறுவன வரி விகித சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேக் இன் இந்தியாவை அதிகரிக்கும் வகையில் வருமான வரிச் சட்டத்தில் 2019-20 நிதி ஆண்டு முதலே புதிய வரி விகிதம் சேர்க்கப்படுகிறது என்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி வகிதத்தை 34.94 விழுக்காட்டில் இருந்து 25. 17 விழுக்காடாக குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


உள்நாட்டு தொழில் உற்பத்தி நிறுவனம் மீதான வரி 22 சதவீதமாக குறைக்கப்படும் எனக் குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன்,  வரி விலக்கு அல்லது சலுகைகள் பெறும் நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச மாற்று வரி 18.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்படும் என தெரிவித்தார். அக்டோபர் 1-ம் தேதிக்கு பிறகு தொழில் உற்பத்தி துறையில் தொடங்கப்படும் புதிய நிறுவனங்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படும் என்றும் வரி விகித குறைப்பு மூலம் அரசுக்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமனின் அறிவிப்பை அடுத்து, பங்குச்சந்தை புள்ளிகள் உயர்ந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 600 புள்ளிகளை தாண்டி வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 610 புள்ளிகள் அதிகரித்து 11,315 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது.

First published: September 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்