BitCoin: இந்தியாவை நோக்கி படையெடுக்கத் தொடங்கிய க்ரிப்டோ பரிவர்த்தனைகள்!

பிட் காயின்

க்ரிப்டோ கரன்ஸிகளை வாங்க பணம் கொடுக்க கூடாது என வங்கிகளுக்கு தடை விதித்தது இந்திய ரிசர்வ் வங்கி. ஆனால் சில நாட்களிலேயே உச்சநீதிமன்றம் அந்த தடையை உடைத்தது.

  • Share this:
    பிட் காயின் மாதிரியான க்ரிப்டோ கரன்ஸிகளை வாங்குவதற்கு இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் க்ரிப்டோ பரிவர்த்தனை மையங்கள் இந்தியாவை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளன.

    2009ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிட்காயின் எந்த ஒரு நிறுவனத்தையோ, அரசையோ சாராமல் ப்ளாக் செயின் என்ற தொழில்நுட்பத்தின் மூலம் சுயமாக இயங்கக் கூடியது. இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் பல பரிவர்த்தனைகளுக்கு இந்த கரன்ஸியை பயன்படுத்தி வருகிறார்கள்.

    2015ஆம் ஆண்டு 26 ஆயிரம் ரூபாயாக இருந்த ஒரு பிட்காயினின் மதிப்பு 2020 ஆம் ஆண்டு 44 லட்சத்தை தொட்டுவிட்டு தற்போது சுமார் 27 லட்சத்துக்கு சந்தைகளில் கிடைக்கிறது.

    Also Read:   11 ஆண்டுகளுக்கு முன் மாயமான பெண்: தனது வீட்டருகே காதலன் வீட்டில் ரகசியமாக குடும்பம் நடத்தியது அம்பலம்!

    மீண்டும் இந்த காயினின் மதிப்பு 40 லட்சத்திற்கு மேல் செல்லும் என்ற எதிர்பார்ப்பில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் இதனை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வரிசையில் இந்தியர்களும் அதிகம் இருப்பதால் பிட்காயின் வர்த்தகம் செய்யும் மையங்கள் இந்தியாவுக்குள் அதிகம் வரத் தொடங்கியிருக்கிறார்கள்.

    க்ரிப்டோ கரன்ஸிகளின் முன்னோடி பிட்காயினாக இருந்தாலும் இதே மாதிரியான தொழில்நுட்பம் கொண்ட பல கரன்ஸிகள் தற்போது சந்தைகளில் கிடைக்கின்றன. ஆனால் திடீரென அதிக ஏற்ற இறக்கங்களை இந்த கரன்ஸிகள் சந்திப்பதாலும் இதற்கென பொறுப்பேற்க ரிசர்வ் வங்கி மாதிரியான நிறுவனங்களும் இல்லாததாலும் உலகின் முன்னணி நிறுவனங்களும் அரசுகளும் இந்த கரன்ஸிகளை ஏற்க மறுத்து வருகின்றனர்.

    Also Read:   தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள்: கொரோனா குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக் திறப்பு?

    அது மட்டுமல்லாமல் க்ரிப்டோ கரன்ஸிகளை கட்டுப்படுத்த பல நாட்டு அரசுகளும் பல முயற்சிகளை செய்து வருகின்றன. 2018 ஆம் ஆண்டு க்ரிப்டோ கரன்ஸிகளை வாங்க பணம் கொடுக்க கூடாது என வங்கிகளுக்கு தடை விதித்தது இந்திய ரிசர்வ் வங்கி. ஆனால் சில நாட்களிலேயே உச்சநீதிமன்றம் அந்த தடையை உடைத்தது.

    தற்போது இந்த க்ரிப்டோ கரன்ஸி உலகளவில் வெகு பிரபலம் அடைந்துவிட்டதால் அதனை ஏற்றுக் கொள்ளும் வகையிலும் அதே சமயம் கட்டுப்பாடுகள் விதிக்கும் வகையிலும் மத்திய அரசு புதிய மசோதாவினை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த தகவலை அறிந்த உலகளவிலான பரிவர்த்தனை மையங்கள் இந்தியாவிற்குள் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
    Published by:Arun
    First published: