Home /News /business /

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 300 டாலரை எட்டும் என கணிப்பு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 300 டாலரை எட்டும் என கணிப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Oil Prices | ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், பேரல் ஒன்றின் விலை 300 டாலர் வரை விலை உயரும் என கணிப்பு

    ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் முடிவுக்கு வராத நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 300 டாலரை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.

    ரஷ்யா - உக்ரைன் இடையே போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்று 135 டாலராக அதிகரித்துள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி மீதான தடை விதிக்கப்பட்டிருப்பதால், பேரல் ஒன்றின் விலை 300 டாலர் வரை விலை உயரும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

    Also Read: பெண்களுக்கான சேமிப்பு... செல்வமகள் சேமிப்பு திட்டம் மிகச் சிறந்த தேர்வு!

    இதனிடையே, கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. சென்னையில்  நேற்று ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, 5,0 56 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, 40,448 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இருப்பினும் வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து, 76 ரூபாய்க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி 76,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    அதே நேரத்தில் காலையில் சரிவுடன் தொடங்கிய இந்தியப் பங்குச் சந்தைகள் மாலையில் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 581 புள்ளிகள் உயர்ந்து, 53,424 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 150 புள்ளிகள் அதிகரித்து, 16,013 புள்ளிகளுடன் முடிவடைந்தது.

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crude oil, India, Petrol Diesel Price, Russia, Russia - Ukraine

    அடுத்த செய்தி