Home /News /business /

மோசமான கிரெடிட் ஸ்கோர் இருக்கா? அப்போ கண்டிப்பா வங்கி சார்ந்த சிக்கல்களை முன்கூட்டியே தெரிஞ்சிக்கோங்க..

மோசமான கிரெடிட் ஸ்கோர் இருக்கா? அப்போ கண்டிப்பா வங்கி சார்ந்த சிக்கல்களை முன்கூட்டியே தெரிஞ்சிக்கோங்க..

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு

மோசமான கிரெடிட் ஸ்கோர் புதிய கடன் பெறுவதற்கான வாய்ப்புகளை குறைக்கலாம். ஒருவழியாக கடன் கிடைத்தாலும், அதன் வட்டி விகிதம் அதிகமாக இருக்கலாம்.

    மோசமான கிரெடிட் ஸ்கோர் புதிய கடன் பெறுவதற்கான வாய்ப்புகளை குறைக்கலாம். ஒருவழியாக கடன் கிடைத்தாலும், அதன் வட்டி விகிதம் அதிகமாக இருக்கலாம். உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருப்பதால் என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என நீங்கள் அறிந்திருப்பது கட்டாயம்.

    வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCகள்) மற்றும் மைக்ரோ-பைனான்சியர்கள் தனிநபர்களின் கடன் மதிப்பெண்களை பகுப்பாய்வு செய்து, அவர்களின் கடன் தகுதி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான அணுகுமுறையை உறுதிப்படுத்துகின்றனர். இந்த கிரெடிட் ரிப்போர்ட், புதிய கடனை நீட்டித்தல், ஏற்கனவே உள்ள கடன் பொறுப்புகளை மாற்றுதல், பாலிசி பிரீமியங்களை செலுத்துதல் மற்றும் கடன் வசதிகளுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய விஷயங்களை உள்ளடக்கியது.

    மோசமான கிரெடிட் ஸ்கோர் புதிய கடன்களை பெறுவதற்கான உங்கள் வாய்ப்புகளை குறைக்கலாம் அல்லது முன்னணி திட்டமிடப்பட்ட வணிக வங்கிகள் மற்றும் NBFCகள் உங்களுடைய குறைவான கிரெடிட் ஸ்கோரைப் பார்த்து, விண்ணப்பத்தையே முழுமையாக ரிஜெக்ட் செய்யலாம். மோசமான கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பதால் ஏற்படும் பின் விளைவுகள் என்னென்னவென பார்க்கலாம்...



    1. கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும்:

    ஆரோக்கியமான கிரெடிட் ஸ்கோர் உள்ள வாடிக்கையாளருடன் ஒப்பிடும் போது, ​​மோசமான கிரெடிட் ஸ்கோரைக் கொண்ட வாடிக்கையாளர் சப்பிரைம் கடன் வாங்குபவராகக் கருதப்படுகிறார்கள். எனவே கடன் வழங்குபவர்கள் நிச்சயமாக கடன்கள் மற்றும் முன்பணங்களுக்கு அதிக வட்டியை வசூலிப்பார்கள். அதிக கிரெடிட் ஸ்கோர், வாடிக்கையாளரின் நிதி விவேகம், கடனை தவணைகளை உரிய அல்லது அதற்கு முன்னதாகவே செலுத்துதல், கடன் பெறும் போது ஒப்புக்கொண்ட கடமைகளை முறையாக செய்தல் போன்றவற்றை வெளிப்படுத்துகிறது. உங்களிடம் நல்ல மதிப்பெண் இருந்தால், சிறந்த வட்டி விகிதங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தலாம்.

    2. அதிக காப்பீட்டு பிரியமிங்கள்:

    மோசமான கிரெடிட் ஸ்கோர் உள்ள வாடிக்கையாளர்களை காப்பீட்டு நிறுவனங்கள் அதிக பீரியம் தொகையை செலுத்த வைக்கிறார்கள். குறைந்த கிரெடிட் ஸ்கோரைக் கொண்ட வாடிக்கையாளர்கள் பாலிசியின் முதிர்வுக் காலம் முடிவதற்குள் அதிக முறை க்ளைம் செய்ய வாய்ப்புள்ளதாக நம்பப்படுவதால், இந்த நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது.

    மேலும் குறைந்த கிரெடிட் ஸ்கோரைக் கொண்ட சப்பிரைம் கடன் வாங்குபவர்கள் இறுதியில் அதனை கட்டமுடியாமல் போகும் போது உண்மையான அணுகுமுறையை காட்டுவார்கள். ஏனெனில் அவர்கள் பல கடன்களை ஒழுங்காக கட்டாமல் அல்லது ஒத்திவைத்திருக்க வேண்டும் அல்லது அவர்களின் வருவாய்த் திறனைக் காட்டிலும் அதிக கடன் பெற்று சிக்கலில் சிக்கியிருக்க வேண்டும் என எண்ணப்படுகிறது.

    3. கனவு இல்ல திட்டங்களுக்கு காத்திருக்க நேரிடும்:

    உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால், வீட்டுக்கடன் பெறுவதில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். ஏற்கனவே வாங்கிய கடன் தொகையை நீங்கள் திரும்ப செலுத்த தவறவிட்டிருந்தால், கடன் வழங்குபவர்கள் கடன் தொகையை அதிகரிக்க தயங்கலாம்.

    தனிப்பட்ட அல்லது வணிக ரீதியில் நீங்கள் ஏதாவது இடம், வீடு, கடையை வாடகை அல்லது லீசுக்கு எடுக்க நினைக்கும் போது, ரியல் எஸ்டேட் அல்லது ரியல் எஸ்டேட் தரகர்கள் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பரிசோதித்தால் அது உங்களுடைய கனவு திட்டத்திற்கு மூடுவிழா நடத்துவது போல் அமையும்.

    4. தேவையற்ற விசாரணைகள், பேக்ரவுண்ட் செக்கிங்:

    குறைவான கிரெடிட் ஸ்கோருடன், வாகனக் கடன், வீட்டுக் கடன், தங்கத்தின் மீதான கடன் அல்லது பத்திரங்கள் மீதான கடன் உள்ளிட்ட மிகவும் பாதுகாப்பான கிரெடிட் வசதிகளுக்கு நீங்கள் விண்ணப்பித்தாலும் கூட, நிதி நிறுவனம் உங்களுக்கு கடன் வழங்கலாமா?, நீங்கள் சமர்ப்பித்திருக்கும் ஆவணங்கள் எப்படிப்பட்டவை என்பது போன்ற விவரங்களை கிராஸ் செக் செய்து கொள்ள வாய்ப்புள்ளது.

    5. தனிநபர் அல்லது வணிககடன் பாதிக்கப்படும்:

    சொந்த தொழில் தொடங்குவதற்காகவும், அவசர தேவைகளை சமாளிப்பதற்காகவும் பிசினஸ் லோன் மற்றும் பர்ஷனல் லோன்களை பெரும்பாலானோர் நம்பி இருக்கிறோம்.

    வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு விடுத்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா!


    வங்கிகள், மைக்ரோ பைனான்சியர்கள், சிறப்பு கடன் நிறுவனங்கள் மற்றும் புதிய டிஜிட்டல் கடன் வழங்குபவர்கள் ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை சப்பிரைம் கடன் வாங்குபவர்களை ஆன்போர்டு செய்ய தயாராக உள்ளனர், ஆனால் கடன் வாங்குபவர் கடன் நடத்தையில் முன்னேற்றம் காட்டவில்லை என்றால் அவர்கள் கடன் விண்ணப்பங்களை முற்றிலும் நிராகரிக்கலாம்.

    கடன் வழங்குபவர் அல்லது கடன் வழங்குபவர்களின் குழு இன்னும் வழங்கப்படாத தொகையை குறைக்கும் சூழ்நிலை ஏற்படலாம், ஏனெனில் தனிநபர்கள் கூடுதலாக கொடுக்கப்போகும் கடன் தொகையை திரும்ப செலுத்த முடியுமா?, முடியாதா? என்ற முடிவை எடுக்க நேரிடுகிறது.

    மோசமான கிரெடிட் ஸ்கோர் இருந்தாலும், தனிப்பட்ட நபர்களில் சிலரது வருமானம் நிலையானதாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு கடன் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும். நீங்கள் மோசமான கிரெடிட் ஸ்கோர் கொண்டவராக இருந்தாலும், நிலையான வருவாய் மற்றும் பல வருமான ஆதாரங்கள் இருந்தால், அவை உங்களை ஓரளவு காப்பாற்றும்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Bank, Bank Loan, Credit Card

    அடுத்த செய்தி