Home /News /business /

குறைந்த வட்டியில் லோன் வாங்க கிரெடிட் ஸ்கோர் எவ்வளவு இருக்க வேண்டும் தெரியுமா?

குறைந்த வட்டியில் லோன் வாங்க கிரெடிட் ஸ்கோர் எவ்வளவு இருக்க வேண்டும் தெரியுமா?

கிரெடிட் ஸ்கோர்

கிரெடிட் ஸ்கோர்

தாமதமாக பணம் செலுத்துவது உங்கள் கிரெடிட் ஸ்கோரை எவ்வாறு பாதிக்கிறது என்று தெரியுமா?

    லோன் அல்லது கிரெடிட் கார்டு கேட்டு நீங்கள் விண்ணப்பிக்கும் போது, அவற்றை வழங்குவோர் உங்கள் கிரெடிட் ஸ்கோரை சரிபார்த்து, அந்த கிரெடிட் லைனுக்கான உங்கள் தகுதியை உறுதிப்படுத்துகிறார்.

    கடன் அல்லது கிரெடிட் கார்டுகளை பெறுவதற்கான முக்கிய தகுதிகளில் ஒன்று நல்ல கிரெடிட் ஸ்கோரை வைத்திருப்பது. எனவே 3 டிஜிட்களை கொண்ட கிரெடிட் ஸ்கோரானது எதை குறிக்கிறது..? கிரெடிட் ஸ்கோர் என்பது உங்கள் கடன் தகுதி அடிப்படையில் கடன் வழங்குபவருக்கு, உங்கள் லோன் ஹிஸ்ட்ரியை பற்றி கூறுகிறது. உங்களுடைய கடன் தகுதியானது கடனளிப்பவருக்கு, கடன் வாங்கிய பின் திருப்பி செலுத்துவதற்கான உங்கள் திறனை பற்றி கூறுகிறது.

    உங்கள் வரலாற்று தரவை (historical data) கருத்தில் கொண்ட பிறகு கிரெடிட் ஸ்கோர் உங்களுக்கு ஒதுக்கப்படும். அதன் ரேஞ்ச் 300 முதல் 900 வரை இருக்கும். 750 அல்லது அதற்கு மேற்பட்ட கிரெடிட் ஸ்கோர் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோர் நீங்கள் கடன்களை பெறுவதை எளிதாக்குவதை தவிர, பேச்சுவார்த்தை மூலம் கடன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை உங்களுக்குச் சாதகமாக மாற்றவும் சிலநேரங்களில் உதவும்.

    செம்ம ஹாப்பி நியூஸ்.. பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு இனி அந்த வங்கியில் அதிக வட்டி!

    எனவே உங்கள் நிதி வாழ்க்கையின் முக்கிய அம்சமாக கிரெடிட் ஸ்கோர் இருப்பதை புரிந்து கொள்ளுங்கள். இங்கே உங்களது கிரெடிட் ரிப்போர்ட்ஸ் மற்றும் கிரெடிட் ஸ்கோரை நீங்கள் ஏன் தவறாமல் சரிபார்க்க வேண்டும் என்பதற்கான முக்கிய காரணங்களை பார்க்கலாம்..

    பிழையை கண்டறிய உதவும்..

    தனிநபர்களின் கடன் மதிப்பீடுகள் தொடர்பான தகவல்களை சேகரித்து கடன் வழங்குவோருக்கு கிடைக்க செய்யும் நிறுவனங்களுக்கு வங்கிகளால் வழங்கப்படும் டேட்டா உங்கள் கிரெடிட் ஸ்கோர். எனவே வழங்கப்படும் தகவல்கள் துல்லியமாக மற்றும் முழுமையாக இருக்க வேண்டும். அறிக்கை பிழை காரணமாக உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறையும் சூழலை தவிர்க்க விரும்பினால், உங்கள் கிரெடிட் ரிப்போர்ட் மற்றும் ஸ்கோரை தவறாமல் சரிபார்ப்பது உங்கள் கடன் வரலாறு மற்றும் தனிப்பட்ட விவரங்கள் பற்றிய ஏதேனும் பிழையை இருந்தால் அவற்றை கண்டறிய உதவும்.

    உங்கள் கடன் தகுதியை ட்ராக் செய்யலாம்..

    நீங்கள் லோன் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போதெல்லாம், ஒரு கடன் வழங்குனர் உங்கள் கிரெடிட் தகுதியை தெரிந்து கொள்ள முதலில் உங்கள் கிரெடிட் ஸ்கோரை தான் செக் செய்வார்கள். உங்கள் கிரெடிட் ஸ்கோரை நீங்கள் செக் செய்ய ஆரம்பித்தவுடன், உங்கள் கிரெடிட் நடத்தை உங்கள் கிரெடிட் ஸ்கோரில் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

    PM kisan status : ரூ.2,000 தரும் மத்திய அரசு.. பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

    உதாரணமாக தாமதமாக பணம் செலுத்துவது உங்கள் கிரெடிட் ஸ்கோரை எவ்வாறு பாதிக்கிறது என்பதை தெரிந்து கொள்வீர்கள். உங்கள் ஸ்கோர் குறைவாக இருந்தால், உங்கள் அடுத்தடுத்த கடன் வாய்ப்புகளை மேம்படுத்த நீங்கள் உரிய நடவடிக்கை எடுக்க உங்கள் ஸ்கோரை தவறாமல் சரிபார்த்து மெயின்டைன் செய்வது புத்திசாலித்தனமான ஒன்றாக இருக்கும்.

    அடையாள திருட்டை (id theft) கண்டறிய உதவும்..

    உங்கள் கிரெடிட் ஸ்கோரை அடிக்கடி தவறாமல் சரிபார்ப்பது அடையாள திருட்டை கண்டறிந்து அதை தவிர்க்க உதவும். பெயர், பிறந்த தேதி, பான் விவரங்கள், தொலைபேசி எண், வங்கிக் கணக்கு எண் போன்ற முக்கியமானடேட்டாக்களை திருடுவதன் மூலம் ஒருவர் மற்றொரு நபரைப் போல ஆள்மாறாட்டம் செய்வது அடையாளத் திருட்டு. உங்கள் தனிப்பட்ட அடையாளம் திருடப்பட்டு பல நிதி பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படலாம். கடனை பெற உங்கள் பான் எண் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உங்கள் கிரெடிட் ரிப்போர்ட் குறிப்பிடும். நீங்கள் ரிப்போர்ட்டை செக் செய்யும் போது மோசடி நிகழ்ந்திருந்தால் உடனடியாக வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    பெரும்பாலான கடன் வழங்குவோர் நல்ல கிரெடிட் ஸ்கோர் உள்ளவர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கி வரும் நிலையில் சிறந்த டீல்களை பெற உங்கள் கிரெடிட் ஸ்கோரை ஆரோக்கியமாக வைத்திருப்பது பெரிதும் உதவும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank Loan, Credit Card, Loan

    அடுத்த செய்தி