Home /News /business /

கிரெடிட் கார்டு வாங்க ஆசைப்படுறீங்களா? அதுக்கு முன்னாடி இதை தெரிஞ்சுக்கோங்க!

கிரெடிட் கார்டு வாங்க ஆசைப்படுறீங்களா? அதுக்கு முன்னாடி இதை தெரிஞ்சுக்கோங்க!

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு

முதல்முறை கிரெடிட் கார்டு வாங்க நினைப்பவர்களுக்கு லைஃப் டைம் ஃப்ரீ கார்டு ஏற்றது.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    கிரெடிட் கார்டுகள் என்பவை எதிர்பாராத செலவுகளை ஈடுகட்ட மற்றும் கையில் காசில்லாத போதும் தேவையான பொருட்களை பயனுள்ளவையாக இருக்கின்றன. ஆனால் கிரெடிட் கார்டை பயன்படுத்தும் ஒருவர் அதனை புத்திசாலித்தனமாக பயன்படுத்த வேண்டும். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள போதும் ஜூலை 2022 நிலவரப்படி இந்தியாவில் சுமார் 8.03 கோடி கிரெடிட் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. நீங்கள் முதல்முறை கிரெடிட் கார்டை பயன்படுத்த திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் அதை தேர்ந்தெடுப்பது கடினமாக இருக்கலாம்.

    கிரெடிட் கார்டை தேர்வு செய்யும் முன் மனதில் கொள்ள வேண்டியவை:

    அனைத்து தரப்பினரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் சரியான கிரெடிட் கார்டு என்று எதுவும் இல்லை. ஏனென்றால் உங்களுக்கான சிறந்த கார்டை தேர்வு செய்வது என்பது உங்களது தனிப்பட்ட செலவு முறைகள் மற்றும் ரிவார்டுகள் மீதான உங்கள் ஆர்வத்தைப் பொறுத்தது.

    ட்ராவல், ஷாப்பிங், லைஃப் ஸ்டைல்.! எந்த கார்டு உங்களது தேவை?

    நீங்கள் அதிகம் ட்ராவல் செய்பவர் என்றால் செல்லும் இடங்களில் நீங்கள் ஓய்வெடுக்க ஹோட்டல்களை அதிகம் பயன்படுத்தினால் அதற்கேற்ப சலுகைகளை வழங்கும் கிரெடிட் கார்டுகள் அதே போல விமான பயணங்களின் போது பயன்படுத்த கூடிய வகையில் ஏர் லைன் மைல்ஸ்களை வழங்கும் ஏர்லைன் கிரெடிட் கார்டுகளை தேர்வு செய்யலாம். அதிகம் ஷாப்பிங் செய்பவர் அல்லது மளிகை பொருட்கள் அதிகம் வாங்குபவர் என்றால் அடிக்கடி கேஷ்பேக்ஸ் வழங்கும் கார்டுகளை தேர்வு செய்யலாம். நீங்கள் உணவு பிரியர் என்றால் அதன் மீது ஆஃபர்களை வழங்கும் வகையிலான கார்டுகளும் உள்ளன. இப்படி உங்களது தேவைகளுக்கு ஏற்ப கிரெடிட் கார்டுகளை தேர்வு செய்ய வேண்டும்.

    எந்த வங்கியை தேர்வு செய்யலாம்?

    பெரும்பாலான கமர்ஷியல் வங்கிகள் கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன என்றாலும் உங்கள் அனுபவத்தை எளிதாக்க நீங்கள் வைத்துள்ள வங்கி வழங்கும் கிரெடிட் கார்டை பெறுவதற்கு முன்னுரிமை கொடுக்கலாம். ஏனென்றால் உங்கள் நிதியின் அடிப்படையில், குறிப்பிட்ட வங்கி உங்களுக்காக ப்ரீ-அப்ரூவ்டு ஆஃபரை வழங்க வாய்ப்புள்ளது. இத்தகைய ஆஃபர்கள் ப்ராசஸிங் நேரத்தை குறைக்க உதவுகின்றன. வரையறைக்குள் இல்லாமல் பல வகை கிரெடிட் கார்டுகளை உங்கள் வங்கி வழங்குகிறதா என்பதையும் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். இல்லை என்றால் வேறு வங்கியின் கிரெடிட் கார்டுகளை வாங்குவதை பற்றி பரிசீலிக்கலாம்.

    நிதி நெருக்கடி சமயங்களில் முதலீட்டாளர்கள் எடுக்க வேண்டிய முக்கியமான முடிவுகள்!

    ரிவார்ட்ஸ்..

    கிரெடிட் பிளேயிங் கார்டுகளில் கேஷ்பேக், ரிவார்ட் ஃபேக்டர்ஸ், ஏர் மைல்ஸ் போன்ற பல முக்கிய நன்மைகள் உள்ளன. எனினும் கூட உங்கள் செலவு முறைகளுடன் ஒத்து வரும் நன்மைகள் தரக்கூடிய ஒரு கார்டை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். கிரெடிட் கார்டுகளில் கிடைக்கும் ரிவார்ட்ஸ்களுக்காக உங்கள் சக்திக்கு மீறி செலவழிக்க கூடாது. எனவே உங்கள் பொருளாதார கட்டமைப்பிற்கு ஏற்ற கிரெடிட் கார்டை மட்டுமே நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

    லைஃப் டைம் ஃப்ரீ கார்டு அல்லது வருடாந்திர கட்டணங்கள் வசூலிக்கும் கார்டு?

    வங்கிகள் நூற்றுக்கணக்கான வகை கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. இவற்றில் சிலவற்றுக்கு வாழ்நாள் முழுவதும் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை, சிலவற்றுக்கு வருடாந்திர கட்டணங்கள் உண்டு. மேலோட்டமாக பார்த்தால் லைஃப் டைம் ஃப்ரீ கார்டு சிறப்பாக தோன்றும். ஆனால் வருடாந்திர கட்டணங்களுடன் வரும் கிரெடிட் கார்டுகள் அதிக பலன்களை வழங்குகின்றன. அதே போல ஒரு வருடத்தில் குறிப்பிட்ட தொகையை கிரெடிட் கார்டு மூலம் செலவழித்தீர்கள் என்றால், அதற்கு அடுத்த வருடம் annual feesல் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. எனினும் முதல்முறை கிரெடிட் கார்டு வாங்க நினைப்பவர்களுக்கு லைஃப் டைம் ஃப்ரீ கார்டு ஏற்றது, ஏனென்றால் சில ஹை-என்ட் வருடாந்திர கட்டண கார்டுகளுக்கு நீங்கள் குறிப்பிட்ட வருமான வரம்பில் இருக்க வேண்டும். இல்லை என்றால் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.

    மாதந்தோறும் ரூ. 50,000 வரை பென்சன் கிடைக்கும்.. கலக்கும் எல்.ஐ.சி திட்டம்!

    முதன் முறை கிரெடிட் கார்டு வாங்குபவர்களுக்கான ஸ்டார்டர் கார்டுகளில் வழங்கல் கட்டணம் ( issuance fees) பொதுவாக பூஜ்ஜியமாக இருக்கும். எனினும் ரூ.499 அல்லது அதற்கு மேல் கட்டணம் உள்ள பிரீமியம் கார்டுகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். சராசரிக்கும் மேலான பலன்களை பெற வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்கள். பெரும்பாலான கார்டுகளில் ஆண்டு சதவீத விகிதம் (annual percentage rate) 40%-ற்கும் அதிகமாக உள்ளது. அதே போல கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் நிலுவை தொகையை சரியான நேரத்தில் செலுத்துவதற்கு கவனம் காட்ட வேண்டும். இல்லை என்றால் அது கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank, Bank Loan, Credit Card

    அடுத்த செய்தி