வீட்டில் பால், கேஸ், மின்சார பில் போன்ற அத்தியாவசியமான செலவுகளில் ஒன்றாக மளிகைப் பொருட்களுக்கான செலவினங்கள் இருக்கின்றன. மளிகை செலவுகளை நாம் தவிர்க்கவே முடியாது. நாம் திட்டமிட்டு செயல்பட்டால் ஏராளமான பணத்தை சேமிக்க முடியும். சரியான கிரெடிட் கார்டை பயன்படுத்தி மளிகை பொருட்கள் வாங்குவதன் மூலமாக இது சாத்தியமாகிறது.
நீங்கள் ஆன்லைன் மூலமாக மளிகை பொருட்களை வாங்கினாலும் அல்லது கடைகளுக்கு நேரடியாகச் சென்று பொருட்களை வாங்கினாலும் உங்களுக்கான
ஆஃபர்களை வழங்குவதற்கு சில கிரெடிட் கார்டுகள் காத்திருக்கின்றன. கேஷ்பேக், ரிவார்ஸ், நேரடி டிஸ்கவுண்ட் போன்ற சலுகைகளை நீங்கள் பெற முடியும்.
இதையும் படிங்க.. அதிர்ச்சி தரும் பெர்சனல் லோன் பற்றிய உண்மைகள்.. இனியாவது கவனமாய் இருங்கள்!
அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு
நூற்றுக்கும் மேற்பட்ட வியாபார அமைப்புகளுடன் அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு பார்ட்னர்ஷிப் உள்ளது. நீங்கள் அமேசான் பிரைம் மெம்பராக இருந்தால் 5 சதவீதமும், நான்-பிரைம் மெம்பர் என்றால் 3 சதவீதமும், பார்ட்னர்ஷிப் வியாபார தளங்களில் 2 சதவீதமும், இதர பரிவர்த்தனைகளுக்கு 1 சதவீதமும் கேஷ்பேக் கிடைக்கும். இது லைஃப் டைம் ஃப்ரீ கிரெடிட் கார்டு ஆகும்.
ஃபிளிப்கார்ட் ஆக்சிஸ் ஃபேங்க் கிரெடிட் கார்டு
Flipkart, Myntra போன்ற தளங்களில் ஷாப்பிங் செய்யும் போது 5 சதவீதமும், Clear Trip, க்யூர்.பிட், PVR, Swiggy, Uber போன்ற தளங்களில் பரிவர்த்தனை செய்யும்போது 4 சதவீதமும் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இது தவிர, அனைத்து இதர பரிவர்த்தனைகளில் 1.5 சதவீதம் கேஷ்பேக் அளிக்கப்படுகிறது. இந்த கிரெடிட் கார்டுக்கான ஆண்டு பராமரிப்பு கட்டணம் ரூ.500 ஆகும்.
இதையும் படிங்க.. பர்சனல் லோன் வாங்கும் போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்!
ஸ்டாண்டர்ட் சார்டட் டிஜி ஸ்மார்ட் கிரெடிட் கார்டு
கிரோஃபர்ஸ் அல்லது பிளிங்கிட் மற்றும்
சொமேட்டோ ஆகிய தளங்களில் மாதம் ஒன்றில் நீங்கள் மேற்கொள்ளும் முதல் 5 பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீத கேஷ்பேக் வழங்கப்படுகிறது. மிந்த்ரா கார்டு ஹோல்டருக்கு, மாதம் ஒருமுறை 20 சதவீத சலுகையிலும், 3 மாதங்களுக்கு ஒரு முறை யாத்ரா மூலமாக உள்நாட்டு விமான பயணங்களுக்கு டிக்கெட் பெறுகையில் 20 சதவீதமும், சர்வதேச விமானப் பயணங்களுக்கு 10 சதவீதமும் சலுகை அளிக்கப்படுகிறது. அதிகபட்சமாக இந்தச் சலுகை ரூ.10,000 வரை கிடைக்கும். யாத்ரா மூலமாக காலாண்டுக்கு ஒருமுறை ஹோட்டல்களை புக் செய்கையில் ரூ.4,000 வரை சலுகை அளிக்கப்படுகிறது. இதன் ஆண்டு பராமரிப்பு கட்டணம் ரூ.588 ஆகும்.
எஸ்பிஐ கார்டு
எஸ்பிஐ கார்டு திட்டத்தில் நீங்கள் சேரும் போதே ரூ.3,000 மதிப்பிலான இ-கிஃப்ட் வவுச்சர் வழங்கப்படும். ரெஸ்டாரண்ட்களில் சாப்பிடுவது, மளிகை பொருள் வாங்குவது, பட டிக்கெட் புக் செய்வது போன்ற சமயங்களில் ரூ.100 செலவு செய்தால் 10 ரிவார்டு பாயிண்ட்ஸ் வழங்கப்படும். ஆண்டுதோறும் ரூ.3 லட்சம் செலவு செய்தால் ரினீவல் கட்டணம் கிடையாது. பராமரிப்பு கட்டணம் ரூ.2,999 ஆகும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.