ஹோம் /நியூஸ் /வணிகம் /

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களா நீங்கள்.. இந்த தவறுகளை மட்டும் செய்ய வேண்டாம்

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களா நீங்கள்.. இந்த தவறுகளை மட்டும் செய்ய வேண்டாம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Credit Card | கிரெடிட் கார்டு நிலுவை தொகையை தாமதமாக செலுத்துவது ஒருவரது CIBIL ஸ்கோர் மற்றும் கிரெடிட் ஸ்கோரை கடுமையாக பாதிக்கலாம். இதனால் எதிர்கால பரிவர்த்தனைகளுக்கு இடையூறூ ஏற்படலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கிரெடிட் கார்டுகளை பொறுப்பான முறையில் பயன்படுத்தினால் பொருளாதார ரீதியாக பல சிக்கல்களை சமாளிக்க உதவும் ஒரு பெரிய வரமாக இருக்கும். அதுவே பொறுப்பற்ற முறையில் பயன்படுத்தப்படும் போது வட்டியுடன் கூடிய கடனாக அது மாறி இக்கட்டான சூழலை ஏற்படுத்துகிறது.

நிதி இலக்கு அல்லது சூழ்நிலை எதுவாக இருந்தாலும் ஒருவர் கிரெடிட் கார்டு கடனை சரியான முறையில் செலுத்துவதை தவறாமல் பின்பற்ற வேண்டும். கிரெடிட் கார்டு நிலுவை தொகையை தாமதமாக செலுத்துவது ஒருவரது CIBIL ஸ்கோர் மற்றும் கிரெடிட் ஸ்கோரை கடுமையாக பாதிக்கலாம். கிரெடிட் கார்டு நிலுவை தொகையை உரிய நேரத்தில் செலுத்த முடியாமல் போவதற்கு அதிக செலவு, வருமான இழப்பு உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம்.

ஸ்கோர்ஸில் ஏற்படும் பாதிப்புகளை தவிர லேட் பேமென்ட் அபராதங்கள், அதிக வட்டி விகிதம் மற்றும் கார்ட் டீஆக்டிவேஷன் வரை செல்லலாம். இதனிடையே ரவி ராஜன் & கோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக பங்குதாரரான எஸ்.ரவி பேசுகையில் சமீபத்திய ஆண்டுகளாக நிதி நிலையற்ற தன்மை அதிகம் காணப்பட்டு வருகிறது. பெருந்தொற்று கிட்டத்தட்ட குறைந்து விட்ட நிலையில் காஸ்ட் ஆஃப் லிவ்விங் புதிய நிலைக்கு சென்றுள்ளது.

Read More : சிறிய முதலீட்டில் பெரிய லாபம்! ரூ.5 லட்சம் முதலீடு செய்து மாதம் ரூ.60,000 வருமானம் பெறுங்கள்

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, மே மாதத்தில் 76 மில்லியனுக்கும் அதிகமான கிரெடிட் கார்டுகள் நிலுவையில் இருப்பதாக கூறி இருக்கிறார். இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்ததை விட 23% அதிகம், 2018-ஆம் ஆண்டு மே மாதத்தை விட 100% அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.நீங்கள் கிரெடிட் கார்டு வைத்திருந்தால் அதன் பில்களை மாதா மாதம் சரியான நேரத்தில் செலுத்த சிரமப்பட்டால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

கடைசி நிமிட நெருக்கடியை தவிர்க்க உங்கள் கிரெடிட் கார்டு பில் கட்டணத்தை எவ்வாறு நிர்வகிக்கலாம் என்பதற்கான டிப்ஸ்களை ரவி கூறி இருக்கிறார்:

பணத்தை சரியான விஷயத்திற்கு செலவு செய்வதும், கூடவே பணத்தை சேமிக்க நீங்கள் எடுக்கும் முயற்சியும் கிரெடிட் கார்டு விஷயத்தில் உதவிகரமாக இருக்கும்.
நீங்கள் மாதம் எவ்வளவு சம்பாதித்தாலும் தேவைக்கேற்ப செலவு செய்து விட்டு மீத தொகையை சேமிப்பில் வையுங்கள். உங்களது சேமிப்பு எப்படி இருக்க வேண்டும் என்றால் 3 - 6 மாத செலவுகள் உங்கள் கையிருப்பில் இருக்க வேண்டும்.
0% APR கிரெடிட் கார்ட்ஸ் ஒரு வருடத்திற்கும் மேலான நீண்ட வட்டி-இல்லாத காலத்தை நமக்கு அளிக்கின்றன.
கிரெடிட் கார்டு நிலுவை தொகையை நிதி நெருக்கடியால் தாமதமாக செலுத்துவோரும் இருக்கிறார்கள். டியூ டேட்டை மறந்து பில் செலுத்தாமல் நெருக்கடியில் சிக்குபவர்களும் இருக்கிறார்கள். நீங்கள் இதில் இரண்டாவது வகையாக இருக்க விரும்பவில்லை என்றால் ரிமைண்டர் செட் செய்து காலக்கெடுவிற்கு முன்பாக பில்களை செட்டில் செய்து விடுங்கள்.
கிரெடிட் கார்டு பில்லை தாமதமாக கட்டுவதை தவிர்க்க உங்கள் பேங்க் அக்கவுண்ட்டை அதனுடன் இணைத்து ஆட்டோ பே ஆப்ஷனை ஆக்டிவேட் செய்வது நல்ல வழி.
கிரெடிட் கார்டு நிலுவை தொகையை செலுத்த EMI ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இந்த EMI-கள் ஏபிஆரை விட ஒப்பீட்டளவில் குறைந்த வட்டி விகிதத்துடன் ஒரு நிலையான காலவரையறையுடன் வருகிறது. இது நிலுவை தொகையை நன்கு திட்டமிட்டு செலுத்த அனுமதிக்கும்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Business, Credit Card