ஹோம் /நியூஸ் /வணிகம் /

கிரெடிட் கார்டு பில்லை சரியான தேதியில் கட்ட முடியவில்லையா? இனிமேல் பயம் வேண்டாம்!

கிரெடிட் கார்டு பில்லை சரியான தேதியில் கட்ட முடியவில்லையா? இனிமேல் பயம் வேண்டாம்!

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு பேமென்ட்டிற்கான காலக்கெடுவை தவறவிட்ட கிரெடிட் கார்டு ஹோல்டர்கள், அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதியிலிருந்து 3 நாட்களுக்குள் பணம் செலுத்தி கொள்ளலாம்

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கிரெடிட் கார்டுகள் வரமாக இருப்பதும் கஷ்டத்தை தர கூடியதாக மாறுவதும் அதை ஒரு நபர் எவ்வாறு கையாளுகிறார் என்பதை பொறுத்து இருக்கிறது. ஒருபுறம் கிரெடிட் கார்டுகள் நமது வாங்கும் திறனை அதிகரிக்கின்றன.

அதுவே மறுபுறம் சரியாக கையாளாவிட்டால் நம்மை கடனாளியாக்கும் திறனையும் கொண்டுள்ளன. குறிப்பாக கிரெடிட் கார்டு வைத்திருக்கும் ஒருவர் அதற்கான பணத்தை உரிய தேதியில் செலுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். பில்லிங் தேதி மற்றும் பணம் செலுத்த வேண்டிய தேதி குறித்து குழப்பத்தில் சிலர் தாமதமாக பணத்தை திருப்பி செலுத்துவார்கள். இல்லை என்றால் அதிகமாக செலவு செய்ததால் போதிய நிதி இல்லாதன் காரணமாக கிரெடிட் கார்டு பில்லை செட்டில் செய்வதில் சிலருக்கு தாமதம் ஏற்படும்.

சரியான நேரத்தில் கிரெடிட் கார்டுக்கான பணம் செலுத்தா விட்டால் கடன்காரர்கள் போல வீட்டு வாசலில் வந்து நிறுவனங்கள் நிற்காவிட்டாலும் கூட, நிச்சயமாக திரை பின்னணியில் நடவடிக்கை எடுப்பார்கள். தாமதமாக கிரெடிட் கார்டு பில் செலுத்துவதால் சிபில் ஸ்கோரில் பாதிப்பு, செலுத்த வேண்டிய தொகைக்கான வட்டியுடன் தாமத கட்டணம், குறைவான கிரெடிட் லிமிட் உள்ளிட்ட சில விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது.

ஈஸியா கிடைச்சிடும்..! - இந்த 5 தேவைகளுக்கு மட்டுமே கோல்டு லோன் பெறுவது நல்லது!

ஏற்கனவே நாம் குறிப்பிட்டபடி பல்வேறு அவசர சூழல் அல்லது குழப்பம் காரணமாக கிரெடிட் கார்டு ஹோல்டர்கள் சரியான நேரத்தில் பேமென்ட் செலுத்த தவறிவிட்டால் உடனடியாக அபராதம், வட்டி உள்ளிட்ட பல பின்விளைவுகளை நினைத்து அச்சம் கொள்ள தேவையில்லை. கிரெடிட் கார்டு பேமென்ட்டிற்கான கடைசி தேதியை ஒருவர் தவறவிட்டாலும் கூட பின்விளைவுகளை தவிர்க்க ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது.

அது என்னவென்றால் ஏதாவதொரு காரணத்தால் கிரெடிட் கார்டு பேமென்ட்டிற்கான காலக்கெடுவை தவறவிட்ட கிரெடிட் கார்டு ஹோல்டர்கள், அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதியிலிருந்து 3 நாட்களுக்குள் பணம் செலுத்தி கொள்ளலாம் என்பது தான். இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள், கிரெடிட் தகவல் நிறுவனங்களுக்கு ஒரு அக்கவுண்ட்டை "past due" என்று ரிப்போர்ட் செய்யலாம் அல்லது கிரெடிட் கார்டு அக்கவுண்ட் நிலுவை தேதியை தாண்டி 3 நாட்களுக்கு மேல் பேமென்ட் செலுத்தப்படாமல் "past due"-வில் இருந்தால் மட்டுமே அபராதம் விதிக்கலாம்.

மன நலப் பிரச்சனைகளுக்கு மெடிக்கல் இன்ஷூரன்ஸில் கவரேஜ் உண்டா? விடை இங்கே!

அதாவது காலக்கெடுவிற்குள் செலுத்தப்படாத நிலுவை தொகை கொண்ட கிரெடிட் கார்டு வாடிக்கையாளருக்கு லேட் பேமென்ட் சார்ஜ் மற்றும் பிற தொடர்புடைய கட்டணங்கள் ஏதேனும் விதிக்க வேண்டும் என்றால், அந்த குறிப்பிட்ட ஒரு கிரெடிட் கார்டு அக்கவுண்ட் 3 நாட்களுக்கு மேல் '‘past due' என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் மாஸ்டர் டைரக்ஷன் - கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு - வழங்குதல் மற்றும் நடத்தை வழிமுறைகள், 2022-ல் இந்த வழிமுறை குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல ரிசர்வ் வங்கியின் முதன்மை வழிகாட்டுதலின்படி, அபராத வட்டி, தாமதமாக செலுத்தும் கட்டணங்கள் மற்றும் பிற தொடர்புடைய கட்டணங்கள் நிலுவை தேதிக்குப் பிறகு பாக்கி செலுத்தாமல் உள்ள தொகைக்கு மட்டுமே விதிக்கப்படும், மொத்த தொகைக்கு அல்ல என்பதையும் வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Bank, Bill payment issue, Credit Card, RBI