• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • credit card பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு... இந்த தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்!

credit card பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு... இந்த தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்!

கிரெடிட் கார்ட்

கிரெடிட் கார்ட்

கிரெடிட் கார்டில் நீங்கள் மிகவும் முக்கியமாக பார்க்க வேண்டிய தேதி, கார்ட் ஸ்டேட்மெண்ட் ஜெனரேட் ஆன தேதி

  • Share this:
    கடன் அட்டை எனப்படும் கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

    அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் முதல், கூடுதலான கட்டணம் வரை பல பரிவர்த்தனைகளை நாம் கண்டுபிடிக்காமல் போகும் சாத்தியம் உள்ளது. ஒவ்வொரு முறை நீங்கள் கடன் அட்டையை பயன்படுத்தும் போதெல்லாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அது மட்டுமின்றி, உங்களுடைய கிரெடிட் கார்டு ஸ்டேட்மெண்ட்டை முழுவதுமாக சரிபார்க்க வேண்டும். குறிப்பாக, முதல் முறை கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர் என்னும் போது, நீங்கள் தவற விடக்கூடாத ஆறு விஷயங்கள் இங்கே.

    கிரெடிட் கார்டு ஸ்டேட்மெண்ட் தேதி

    உங்கள் கிரெடிட் கார்டில் நீங்கள் மிகவும் முக்கியமாக பார்க்க வேண்டிய தேதி, கார்ட் ஸ்டேட்மெண்ட் ஜெனரேட் ஆன தேதி. இந்த தேதியின் அடிப்படையில் தான் நீங்கள் கார்டுக்கான மாதாந்திர தொகை செலுத்த வேண்டிய தேதியும், தாமதக் கட்டணமும் நிர்ணயிக்கப்படுகிறது.

    பணம் செலுத்த வேண்டிய தேதி

    பலரும் கிரெடிட் கார்டுக்கு அதிகமான தொகையை செலுத்துவதற்கான காரணம், பணம் செலுத்த வேண்டிய தேதியை தவற விடுவது தான். நீங்கள் ஒரு நாள் தாமதமாக பணம் செலுத்தினாலும், அதிக வட்டி விதிக்கபப்டும். பணம் செலுத்த வேண்டிய தேதி வரை தாமதம் செய்யாமல், முன்கூட்டியே செலுத்துவதன் மூலம் கூடுதல் கட்டணத்தை தவிர்க்கலாம்.

    பில்லிங் சைக்கிள்

    ஒவ்வொரு கார்டுக்கும் ஒவ்வொரு பில்லிங் காலம் இருக்கும். இது ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் தொடங்கி கடைசி நாளில் முடிவது போன்று அனைவருக்கும் பில்லிங் பீரியட் இருக்காது. சிலருக்கு, பில்லிங் காலம் 40 நாட்கள் அல்லது 45 நாட்கள் கூட இருக்கலாம். இந்த குறிப்பிட்ட பில்லிங் காலத்தில் நீங்கள் செய்த பரிவர்த்தனைகளின் தொகுப்பு உங்கள் ஸ்டேட்மெண்ட்டில் இருக்கும். ஸ்டேட்மெண்ட்டில் காணப்படும் ஒவ்வொரு விவரத்தையும் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.

    சலுகைக் காலம்

    ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் படி, Grace period எனப்படும் சலுகைக் காலம், கிரெடிட் கார்டு பேமென்ட் செலுத்த வேண்டிய தேதியிலிருந்து மூன்று நாட்கள் கூடுதலாக சலுகை வழங்குவதைக் குறிக்கிறது. இந்த மூன்று நாட்களுக்குள் கார்டுக்கான கட்டணத்தை செலுத்தி விட்டால், கூடுதல் வட்டி அல்லது தாமதக் கட்டணம் விதிக்கப்படாது.

    மொத்தம் செலுத்த வேண்டிய தொகை

    மொத்தம் செலுத்த வேண்டிய தொகை என்பது நீங்கள் கார்டு பயன்படுத்தத் தொடங்கிய நாள் முதல், ஸ்டேட்மெண்ட் தேதி வரை எவ்வளவு கார்டு பேலன்சில் இருந்து எவ்வளவு செலவு செய்துள்ளீர்கள், வங்கியால் விதிக்கப்பட்டிருக்கும் வட்டி, தாமதக் கட்டணம், சர்வீஸ் கட்டணங்கள், மற்றும் பல கட்டணங்களைக் குறிக்கும்.

    குறைந்தபட்சமாக செலுத்த வேண்டிய தொகை

    கிரெடிட் கார்டில் நீங்கள் எவ்வளவு செலவு செய்துள்ளீர்களோ, அதில் ஒரு குறிப்பிட்டத் தொகை குறைந்தபட்சமாக செலுத்த வேண்டிய தொகை (minimum due amount) என்று குறிப்பிடப்படும். பொதுவாக, மொத்தமாக செலுத்த வேண்டிய தொகையின் ஒரு குறிப்பிட்ட சதவிகிதமாக (5 முதல் 10 சதவிகிதம்) இது குறிப்பிடப்பட்டிருக்கும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: