ஹோம் /நியூஸ் /வணிகம் /

உங்கள் கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்யப்போறிங்களா? அப்போ கண்டிப்பா இதை படிங்க!

உங்கள் கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்யப்போறிங்களா? அப்போ கண்டிப்பா இதை படிங்க!

மாதிரி படம்

மாதிரி படம்

கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை போஸ்ட்டஸ் மூலம் க்ளோசிங் கோரிக்கைகளை அனுப்ப கட்டாயப்படுத்த முடியாது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கிரெடிட் கார்டுகளை பெறுவது என்பது தற்போது மிகவும் எளிதான ஒன்றாக இருக்கிறது. வங்கிகள் மற்றும் கார்டு வழங்கும் நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து வாடிக்கையாளர்களை எங்களிடம் கிரெடிட் கார்டுகளை வாங்கி கொள்ளுங்கள் என போன் மேல் போன் போட்டு நமக்கு தூண்டில் போடுகின்றன.

ஆனால், ஒரு வாடிக்கையாளர் தான் பெற்றுள்ள கிரெடிட் கார்டு தேவை இல்லை என்று நினைக்கும் போது அதை க்ளோஸ் செய்ய நினைத்தால் அது அவ்வளவு சுலபமானதாக இருக்காது. வெளி செல்லும் வாடிக்கையாளரை தக்க வைத்து கொள்ள மேலும் சில சலுகைகளை வழங்குவதாக நிறுவனங்கள் கூறுகின்றன. ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, ஒரு வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டு க்ளோஸ் செய்வதற்கான கோரிக்கையை நிறுவனங்கள் நிறைவேற்ற வேண்டும்.

இந்த கோரிக்கையை எழுப்பும் வாடிக்கையாளர் தனது அனைத்து நிலுவைத் தொகையையும் செலுத்தியிருந்தார் என்றால் 7 நாட்களுக்குள் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதும் விதியாகும். சில மாதங்களுக்கு முன் ரிசர்வ் வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வழங்குதல் மற்றும் செயல்பாடுகள் குறித்த தனது முதன்மையான வழிகாட்டுதலை அமலுக்கு கொண்டு வந்தது.

Read More : கையில் பணம் தங்க மாட்டேன் என்கிறதா.? - சேமிப்புக்கு என்ன வழி.!

7 வேலை நாட்களுக்குள்...

இந்த புதிய வழிகாட்டுதல்களின்படி, கிரெடிட் கார்டு அக்கவுண்டை மூடுவதில் தாமதம் ஏற்பட்டால், கார்டு வழங்குநர் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் செலுத்த வேண்டும். வாடிக்கையாளர் தனது கிரெடிட் கார்டு அக்கவுண்ட்டை மூட கோரிக்கை விடுத்த 7 வேலை நாட்களுக்குள் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க தவறினால், குறிப்பிட்ட நிறுவனம் நாளொன்றுக்கு ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும்.

கோரிக்கையை ஏற்று கிரெடிட் கார்டு அக்கவுண்ட் மூடப்பட்டது குறித்து வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி போன்றவற்றின் மூலம் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். அதே போல் கிரெடிட் கார்டு அக்கவுண்ட்டை மூடுவதற்கான கோரிக்கையை சமர்ப்பிக்க நிறுவனங்கள் வாடிக்கையாளருக்கு பல விருப்பங்களை வழங்க வேண்டும். இதில் ஹெல்ப்லைன், பிரத்யேக மின்னஞ்சல்-ஐடி,இன்டர்-ஆக்டிவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ்(IVR), இன்டெர்நெட் பேங்கிங், மொபைல்-ஆப் அல்லது வேறு ஏதேனும் மோட்ஸ் அடங்கும். ஒரு வருடத்திற்கும் மேலாக கிரெடிட் கார்டு பயன்படுத்தப்படாமல் இருந்தால் கார்டு வழங்கும் நிறுவனர், வாடிக்கையாளருக்கு தகவல் தெரிவித்த பிறகு கிரெடிட் கார்டு அக்கவுண்ட் மூடும் செயல்முறையை தொடங்கலாம் என்று கூறுகிறது ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள்.

நிறுவனங்கள் 30 நாட்களுக்குள் கிரெடிட் இன்ஃபர்மேஷன் நிறுவனத்திடம் கார்டு க்ளோஸ் பற்றிய அப்டேட்ஸ்களை வழங்க வேண்டும். கிரெடிட் கார்டு மூடப்பட்ட பிறகு குறிப்பிட்ட அக்கவுண்ட்டில் ஏதேனும் கிரெடிட் பேலன்ஸ் இருந்தால், அது வாடிக்கையாளரின் பேங்க் அக்கவுண்டிற்கு மாற்றப்பட வேண்டும்.

போஸ்ட் மூலம் அனுப்பலாமா?

கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை போஸ்ட்டஸ் மூலம் க்ளோசிங் கோரிக்கைகளை அனுப்ப கட்டாயப்படுத்த முடியாது. ஏனென்றால் இது கோரிக்கையை பெறுவதில் தாமதத்தை ஏற்படுத்தும் என்று ரிசர்வ் வங்கி கூறி இருக்கிறது.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Bank fraud, Business, Credit Card, Trending