கிரெடிட் கார்டு என்பது ஒரு முன் அமைக்கப்பட்ட கடன் வரம்புகளுடன் வங்கியால் வழங்கப்படும் கடன் அட்டை ஆகும். இது நீங்கள் ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை செய்ய உதவுகிறது. பல ஆன்லைன் ஸ்டோர்கள் கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு எக்ஸ்ட்ரா சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கி ஊக்குவிக்கிறது.
பணத்தை போல் பார்த்து, பார்த்து செலவழிக்காமல், கிரெடிட் பயனர்கள் இஷ்டத்திற்கு பொருட்களை வாங்கி குவிக்கும் அபாயம் உள்ளது. எனவே கிரெடிட் கார்டு யூஸர்கள் அதிக வட்டி என்றும் ஆபத்தில் சிக்காமல் குறைந்த வட்டி அல்லது ஜீரோ வட்டி முறையை பெற என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
read more.. செம்ம ஹாப்பி நியூஸ்.. பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு இனி அந்த வங்கியில் அதிக வட்டி!
1. முழு நிலுவைத் தொகையை செலுத்துதல்:
ஒவ்வொரு முறை வங்கியில் இருந்து கிரெடிட் கார்டு பில் வந்ததும், அதில் உள்ள முழு நிலுவைத் தொகையையும் குறிப்பிட்ட தேதியில் கட்ட வேண்டும் என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். கிரெடிட் கார்டு பில் கிடைத்த தேதியில் இருந்து அதனை திரும்ப செலுத்த சில காலம் அவகாசம் கொடுக்கப்படும். பொருட்களை நீங்கள் வாங்கிய தேதியைப் பொறுத்து சுமார் 45-51 நாட்கள் வட்டி இல்லாத காலம் வழங்கப்படுகிறது. எனவே வட்டி கட்டாமல் தப்பிக்க எண்ணினால் குறிப்பிட்ட காலத்திற்குள் முழு நிலுவைத் தொகையையும் செலுத்துவது நல்லது.
2. புதிய பொருட்களை வாங்கினால் ஆபத்து:
முந்தைய மாத நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்தாமல், புதிதாக பொருட்களை வாங்கினால் அதனை திருப்பச் செலுத்துவதற்கான வட்டி இல்லாத கால அவசாகம் கிடையாது. நீங்கள் வட்டி செலுத்துவதைத் தவிர்க்க விரும்பினால், நிலுவைத் தொகையை ஒருபோதும் மாற்ற வேண்டாம். நிலுவைத் தொகையை அடுத்த பில்லிங் சுழற்சிக்கு மாற்றினால், 3-4 சதவீதம் என்ற விகிதத்தில் மாதாந்திர வட்டி விதிக்கப்படும். நீங்கள் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் புதிய கொள்முதல் செய்தால், வட்டி பலூன் போல வீங்கிக்கொண்டே செல்லும்.
read more.. போஸ்ட் ஆபீஸில் வட்டி கிடைக்க வாடிக்கையாளர்கள் இதை கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும்!
3. பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் வசதி:
நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்தக்கூடிய நிதி நிலையில் நீங்கள் இல்லை என்றால், ‘பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்’ (BT) என்ற வசதியைத் தேர்வுசெய்யலாம். இதன் மூலம் நீங்கள் நிலுவைத் தொகையை மற்றொரு கிரெடிட் கார்டுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் மாற்றலாம். இதனால் வட்டியால் ஏற்படும் பெரும் பணச்செலவை தவிர்க்கலாம். மாதத்திற்கு கிட்டத்தட்ட 3.5 சதவிகிதம் செலுத்துவதற்குப் பதிலாக, நீங்கள் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபரைத் தேர்வுசெய்தால், மாதத்திற்கு 1 சதவிகிதம் முதல் 1.77 சதவிகிதம் வரை குறைக்கப்பட்ட வட்டி விகிதத்தை செலுத்தினாலே போதும்.
4. EMI ஆக மாற்றுதல்:
நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் வாங்கி பொருளின் விலை மிகவும் அதிகமானதாக இருக்கும் பட்சத்தில் மாதத்தவணை முறைக்கு மாற்றுவது சரியானது. குறைவான வட்டி விகிதத்தில் EMI -யாக மாற்றிக்கொள்வதன் மூலம் வட்டி மற்றும் அபராதம் ஆகியவற்றை தவிர்க்கலாம். இரண்டு வகையான EMI மாற்றும் வசதிகள் உள்ளன. முதலாவதாக, உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி நீங்கள் ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்கும்போது அந்த நிறுவனம் அல்லது வணிகர் வழங்கும் கால அவகாசம், மற்றொன்று உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி நீங்கள் செய்ய உள்ள பெரிய செலவினங்களுக்கு உங்கள் கிரெடிட் கார்டு நிறுவனம் வழங்கும் சில உயர்-டிக்கெட் வாங்குதல்களுக்கு உங்கள் கிரெடிட் கார்டு வழங்குபவர் EMI விருப்பத்தை தேர்வு செய்யலாம்.
5. பணம் எடுப்பதைத் தவிர்க்கவும்:
உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க வேண்டியிருந்தால், முடிந்தவரை சீக்கிரம் பணத்தை டெபாசிட் செய்வதை உறுதிசெய்து கொள்ளுங்கள், ஏனெனில் இந்த திரும்பச் செலுத்துவது வட்டியில்லா காலத்துடன் வராது. முதல் நாளிலிருந்து நீங்கள் தொகையைத் திருப்பிச் செலுத்தும் வரை ஒன் டைம் ஃபீஸ் மற்றும் மற்றும் வட்டி போன்ற கட்டணங்கள் இருக்கலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank, Credit Card