தனியார் வங்கியான ஃபெடரல் வங்கி இளைஞர்களுக்கான ஸ்பெஷல் மொபைல் அடிப்படையிலான கிரெடிட் கார்டு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
கிரெடிட் கார்டுகள் கடனாளியாக மாற்றிவிடும் என பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் அவசரம் என்றால் கிரெடிட் கார்டுகள் தான் முதலில் கைக்கொடுக்கும். அதிலும் பண்டிக்காலங்கள் என்றால் கேட்கவே வேண்டாம் செலவு பட்ஜெட்டை தாண்டி விடும். ஷாப்பிங் நேரத்தில் இந்த கிரெடிட் கார்டுகளை ஸ்மார்ட்டாக பயன்படுத்தினால் பணத்தை சேமிக்கவும் முடியும். அதற்கு முதலில் கிரெடிட் கார்டு தரும் ஆஃபர்கள், சலுகைகள் பற்றி தெரிந்திருந்தால் மட்டுமே கிரெடிட் கார்டு மூலம் பணத்தை சேமிக்கவும் முடியும். பண்டிகை காலம் நெருங்கி விட்ட நேரத்தில் பல்வேறு வங்கிகள் மற்றும் ஃபினாஸ் நிறுவனங்களும் போட்டி போட்டுகொண்டு கிரெடிட் கார்டு ஆஃபர்களை வழங்கி வருகின்றன. அந்த வகையில் இளைஞர்களை குறி வைத்து ஃபெடரல் வங்கி இளைஞர்களுக்கான ஸ்பெஷல் மொபைல் அடிப்படையிலான கிரெடிட் கார்டு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்காக ஃபெடரல் வங்கி, ஒன்கார்டு நிறுவனத்துடன் கூட்டணி வைத்து வாடிக்கையாளர்களுக்கு இந்த கார்டை வழங்கி வருகிறது. இந்த கார்டை பெறுவதும் மிக மிக சுலபம்.அதற்கு முதலில் நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் மொபைலில் ஒன்கார்டு ஆப் இன்ஸ்டால் செய்து அதன் மூலம் கிரெடிட் கார்டுக்கு அப்ளை செய்து பெற்றுக்கொள்ளலாம். வெற்றிக்கரமாக உங்களுக்கு கார்டு உறுதியான பின்பு, ஒரிஜினல் கார்டு உங்கள் கையில் வந்து சேரும் வரை நீங்கள் மொபைல் கிரெடிட் கார்டை பயன்படுத்திக்கொள்ளலாம். மொத்தமாக இந்த கார்டை ஆன்லைனில் பெற 3 நிமிடங்கள் மட்டுமே போதுமானது.
இந்த கிரெடிட் கார்டுகளின் செலவுகளை மொபைல் ஆப் மூலமாகவே பார்க்கலாம். பரிசுகள் மற்றும் சலுகைள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம். பரிவர்த்தனைகளுக்கு லிமிட் வைப்பது உள்ளிட்ட பல வசதிகளை பெற முடியும். பண்டிக்காலங்களில் இதுப்போன்ற ஆஃபர்கள் அவ்வப்போது வெளிவருவது வழக்கமான ஒன்று. குறிப்பாக இளைஞர்களுக்காகவே இந்த கார்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 23 முதல் 35 வயதுக்குட்பட்ட வேலை செய்யும் ஊழியர்கள் இந்த கார்டை ஈஸியாக பெறலாம். இதுக்குறித்த கூடுதல் விவரங்களுக்கு ஃபெடரல் வங்கியின் ஆன்லைன் தளத்தில் சென்று பார்க்கலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja Sreeja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.