Home /News /business /

குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் ஏன்? பாதுகாப்பு காரணங்களை விளக்கிய மத்திய அரசு!

குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் ஏன்? பாதுகாப்பு காரணங்களை விளக்கிய மத்திய அரசு!

குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்

குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்

இந்தியாவில் இனி இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் 4 வயது குழந்தைகளுக்கு கூட இனி ஹெல்மேட் கட்டாயம் என்ற உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் இனி இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் பாதுகாப்புக் கவசங்கள் மற்றும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்குவதற்கான புதிய விதிகளை சாலை போக்குவரத்து அமைச்சகம் நேற்று முதல் அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் மத்திய மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் மூலம் முன்மொழியப்பட்டுள்ளன. இந்த புதிய விதி, அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஓராண்டு கழித்து அமலுக்கு வரும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

4 வயது குழந்தைகளுடன் இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் போது மணிக்கு 40 கிமீக்கு மேல் வேகமாக செல்லக்கூடாது. புதிய விதிகளை மீறினால் ரூ.1000 அபராதம் அல்லது 3 மாதம் ஒட்டுநர் உரிமர் ரத்து செய்யப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், பிப்ரவரி 15, 2022 தேதியிட்ட அறிவிப்பின்படி CMVR, 1989 விதி 138ஐத் திருத்தியுள்ளது மற்றும் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள், மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் அல்லது எடுத்துச் செல்லுதல் தொடர்பான விதிமுறைகளை பரிந்துரைத்துள்ளது." எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

"மத்திய மோட்டார் வாகன சட்டம் 129வது பிரிவின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள புதிய விதிகளின்படி, நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு, மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் அல்லது சுமந்து செல்வது போன்றவற்றிற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு வழங்கலாம் என்று கட்டளையிடுகிறது. மேலும், இது பாதுகாப்பு கவசங்கள் மற்றும் ஹெல்மெட்டைப் பயன்படுத்துவதைக் பற்றி குறிக்கிறது. மேலும் இருசக்கர வாகனத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது மணிக்கு 40 கிமீ வரை கட்டுப்படுத்துகிறது" எனத் தெரிவித்துள்ளது.

நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அமர வைக்கும் போது வண்டியை ஓட்டும் நபர், குழந்தையை இணைக்கும் வகையில் பெல்ட் அணிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பெல்ட் இந்திய தர கட்டுப்பாட்டு அமைப்பின் தர அளவீடுகளின் படி இருக்க வேண்டும் என்றும், ஒரு ஜோடி பட்டைகள் குழந்தையின் உடையுடன் இணைக்கப்பட்டு, ஓட்டுநர் அணிந்திருக்க கூடிய தோள்பட்டை வளையங்களுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என வழிகாட்டுமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also read... கோவிட் தொற்றால் இறப்பவர்களை விட பொல்யூஷனால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் – ஐநா அறிவிப்பு!

இணைப்பு பெல்ட் எடை குறைவாகவும், நீளத்தை கூட்டி, குறைக்க ஏதுவாகவும், நீர்புகா தன்மையுடனும், தரத்துடனும் இருக்க வேண்டும். 30 கிலோ எடையை தாங்க வேண்டும் என்ற தரக்கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. பாதுகாப்பு பெல்ட் சரி செய்யக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்றும், இதன் மூலம் குழந்தைகள் பைக்கை ஓட்டுபவருடன் இணைக்கப்பட்டு, கீழே சரிந்துவிடாமல் பாதுகாப்பாக பயணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் பிஎஸ் தரத்துடன் கூடிய ஹெல்மெட்டை குழந்தைகளுக்கு பயன்படுத்த அறிவுறுத்தியுள்ள மத்திய அரசு, 4 வயது மற்றும் அதற்கு குறைவான குழந்தைகள் பயன்படுத்தும் படியான அளவுக்கு ஏற்ற மற்றும் அளவை சரிசெய்யக்கூடிய தலைக்கவசங்களை தயாரிக்கும் படி ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Helmet

அடுத்த செய்தி