PF Amount: கொரோனா 2வது அலை: பிஎஃப் கணக்கில் இருந்து முன்பணம் எடுக்க  அரசு அனுமதி- விண்ணப்பிப்பது எப்படி?

மாதிரிப் புகைப்படம்

பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ், 3 மாத அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி (டி.ஏ) அல்லது பிஎஃப் கணக்கில் உள்ள நிலுவைத் தொகையில் 75 சதவீதம், இதில் எது குறைவோ, அதை திருப்பிச் செலுத்த தேவையில்லாத முன்பணமாக தொழிலாளர்கள் எடுத்துக்கொள்ளலாம்

  • Share this:
    கொரோனா தொற்றின் 2வது அலையை கருத்தில்கொண்டு பிஎஃப் கணக்கில் இருந்து முன்பணம் எடுத்துக்கொள்ள தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் முதல் அலையால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டப்போது, பி.எஃப். சந்தாதாரர்களுக்கான சலுகையை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, தொழிலாளர்கள் தங்களது மூன்று மாத அடிப்படை ஊதியம் மற்றும் பஞ்சப்படி (டி.ஏ.) தொகை அல்லது பி.எஃப் கணக்கில் உள்ள தொகையில் 75 சதவீதம், இதில் எது குறைவோ அவற்றை எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்தது.

    பொதுவாக, உடல்நல குறைவு, புதிய வீடு வாங்குவதற்கு போன்ற குறிப்பிட்ட காரணங்களுக்கு மட்டுமே பிஎஃப் பணத்தை எடுக்க முடியும். எனினும் பொருந்தொற்று என்பதால் கொரோனாவை காரணம்காட்டி பணத்தை எடுக்க மத்திய அரசு அனுமதித்தது.

    தற்போது, இந்தியாவில் கொரோனா 2வது அலை கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகளும் பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளன. நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் ஊழியர்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஊழியர்கள் தங்களது பிஎஃப் கணக்கில் இருந்து முன்பணம் எடுத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, தங்களது ஓய்வூதிய கணக்கில் இருந்து முன்பணத்தை தொழிலாளர்கள் எடுத்துக்கொள்ளலாம்.

    இதுதொடர்பாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ், 3 மாத அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி (டி.ஏ) அல்லது பிஎஃப் கணக்கில் உள்ள நிலுவைத் தொகையில் 75 சதவீதம், இதில் எது குறைவோ, அதை திருப்பிச் செலுத்த தேவையில்லாத முன்பணமாக தொழிலாளர்கள் எடுத்துக்கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை காரணம் காட்டி பணத்தை எடுக்க முயலும்போது, அதற்கான பணிகள் அனைத்தும் 3 நாட்களுக்கு முடித்து வைக்கப்படும் என்றும் தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளனர்.

    விண்ணப்பிப்பது எப்படி?

    1. https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/என்ற இணையப்பக்கத்திற்கு செல்லவும்

    2. . உங்கள் UAN மற்றும் பாஸ்வேர்ட் கொண்டு உள்நுழையவும்

    3. . Online Services கீழ் உள்ள Claim என்பதை தேர்வு செய்யவும்

    4. காண்பிக்கப்படும் திரையில், வங்கி கணக்கு எண்ணை குறிப்பிட்டு உறுதி செய்யவும்.

    5. . Proceed for Online Claim என்பதை கிளிக் செய்யவும்

    6. . பின்னர் திரையில் தோன்றும் தெரிவில், PF Advance என்பதை தேர்வு செய்யவும்

    7. . Purpose of Withdrawl என்பதற்கு Outbreak of Pandemic (Covid 19) என்பதை தேர்வு செய்யவும்

    8. . உங்களுக்கு தேவையான பணத்தை குறிப்பிட்டு, காசோலை (செக்) அல்லது வங்கி பாஸ் புக்கை ஸ்கேன் செய்து பதிவேற்றவும்.

    9. . இப்போது உங்கள் மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதனை குறிப்பிடவும்

    10. . உங்கள் கோரிக்கை சமர்ப்பிக்கப்படும்.உங்கள் விண்ணப்பம் சரிப்பார்க்கப்பட்டு, ஒருவாரத்தில் பணம் வங்கிக்கணக்கில் வந்து விடும்

    Published by:Murugesh M
    First published: