நாடு முழுவதும் உருமாறிய கொரோனா வைரஸின் 2வது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பணம் இருப்பவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்கும், ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறுகின்றனர். ஏற்கனவே காப்பீடு வைத்திருப்பவர்கள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டால், இன்சூரன்ஸ் கவர் செய்யாத பி.பி.கிட் போன்றவற்றிக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இது ஒருபுறம் இருக்க கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு இன்சூரன்ஸ் கொடுக்க நிறுவனங்கள் தயக்கம் காட்டிவருகின்றன அல்லது இன்சூரன்ஸ் பாலிசி கொடுப்பதில்லை.
நிறுவனங்களின் வழிகாட்டுதல்படி, லைப் அல்லது ஹெல்த்
இன்சூரன்ஸ் வேண்டும் என்றால் 3 முதல் 6 மாதங்கள் காத்திருந்து, உங்களுக்கு பக்கவிளைவுகள் அல்லது உடலில் மற்ற உறுப்புகள் பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தால் புதிய இன்சூரன்ஸ் கொடுப்பதற்கு முயற்சி செய்கின்றனர். கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு இதய பாதிப்பு, கல்லீரல், நுரையீரல் மற்றும் சிறுநீரக பாதிப்புகள் ஏற்படுவதாக கூறப்படுவதால், அவர்களுக்கு காப்பீடு கொடுக்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தயாராக இல்லை. தீவிர உடல் பரிசோதனைகள் செய்தபிறகு, அதன் முடிவுகளின் அடிப்படையில் அவர்களுக்கு ஏற்ற பாலிசியை மட்டும் நிறுவனங்கள் பரிந்துரைக்கின்றன
ஹெல்த் இன்சூரன்ஸ்
கொரோனா பரவலுக்குப் பிறகு பலருக்கும்
இன்சூரன்ஸ் பாலிசியின் அவசியம் தெரியவந்திருப்பதால், ஏராளமானோர் இன்சூரன்ஸ் எடுக்க தொடங்கியுள்ளனர். நீங்கள் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்க விரும்பினால், கொரோனா பாதிப்பு மற்றும் அதில் இருந்து மீண்டதற்கான உண்மையான சான்றுகளை அளிக்க வேண்டும். உங்களுடைய சான்றுகளை அளித்தபின்னர் அண்டர்ரைட்டிங் குழு உங்களை நேரில் சந்தித்து கூடுதல் தகவல்களை கேட்டுப் பெறுவார்கள். அப்போது, உங்களது உடலின் நிலையைப் பொறுத்து இன்சூரன்ஸ் பாலிசி கொடுக்கப்படும் அல்லது நிராகரிக்கப்படும், அல்லது சில காலம் காத்திருப்பு பட்டியலில் கூட வைத்திருக்கலாம். ஒரு சில சமயங்களில் மெடிக்கல் பரிசோதனைகளையும் பாலிசி எடுப்பவர்கள் எடுக்க வேண்டியிருக்கும்.
Also read... EPF பேலன்ஸ் தெரிந்து கொள்ள கஷ்டப்படுகிறீர்களா? இதோ 4 வழிகள்!
ICICI Lombard General Insurance நிறுவனத்தின் சஞ்சய் தத்தா பேசும்போது, "கோவிட் ரிசல்ட்டின் அடிப்படையில் மெடிக்கல் பரிசோதனைகள் அவசியமில்லை. வயதின் அடிப்படையில் வாடிக்கையாளருக்கு முன்கூட்டியே ஏதாவது உடல் நலப்பிரச்சனைகள் இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். தேவைப்பட்டால் கோவிட் வைரஸில் இருந்து மீண்டவர்கள் பரிசோதனை செய்து அதன் முடிவுகளை கொடுக்க வேண்டும். தற்போது, கொரோனா வைரஸில் இருந்து மீண்டவர்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் நீண்ட கால உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. கல்லீரல், நுரையீரல், இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கருத்தில் கொள்வார்கள்" என தெரிவித்துள்ளார்.
லைப் இன்சூரன்ஸ்
லைப்
இன்சூரன்ஸ் நிறுவனங்கள் புதிய பாலிசி எடுப்பதில் கடுமையான வழிமுறைகளை பின்பற்றி வருகின்றன. இன்சூரன்ஸ் காலம் நீண்டகாலம் என்பதால் கூல் ஆப் பீரியட் டைம் வரை புரோப்போசல் விண்ணப்பத்தைக் கூட அவர்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதில்லை. HDFC Life insurance நிறுவனத்தைப் பொறுத்து கூல் ஆப் பிரீயட் என்பது 60 முதல் 90 நாட்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. Aegon Life Insurance நிறுவனத்தின் கமலேஷ் குப்தா பேசும்போது, வாடிக்கையாளர் கடந்த 3 மாதங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்திருந்தால் அல்லது வீட்டில் 30 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால், அவர்களுக்கு 90 ஆப் பீரியட் கடைபிடிக்கபட்டு வருவதாக தெரிவித்தார்.
இன்சூரன்ஸ் நிறுவனங்களைப் பொறுத்தவரை ஒரே மாதிரியான வழிமுறைகளை பின்பற்றுவதில்லை. விதிமுறைகள் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடுவதால் இன்சூரன்ஸ் எடுக்க விரும்பும் மக்களிடையே ஒரு விதமான குழப்பம் உள்ளது. எந்த பாலிசியை எடுப்பது? எது நல்ல திட்டம்? என அடையாளம் காண முடியாமல் பலர் தவித்து வருகின்றனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.