முகப்பு /செய்தி /வணிகம் / Personal Finance: உங்கள் நிதி நிலைமையை அதிகரிக்க எளிய 5 டிப்ஸ்!

Personal Finance: உங்கள் நிதி நிலைமையை அதிகரிக்க எளிய 5 டிப்ஸ்!

மாதிரி படம்

மாதிரி படம்

அத்தியாவசிய செலவுகளை ஈடுசெய்யும் அளவுக்கு உங்கள் நிதிகுறித்த திட்டமிடல் இருக்க வேண்டும்.

  • Last Updated :

உயிர் கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மக்கள் உடல் ரீதியாக மட்டுமல்லாமல், பொருளாதார ரீதியாகவும் பெரும்பாதிப்புக்குள்ளாகினர். பெரும்பாலான தொழில்கள் செயல்பட வழியின்றி முடங்கியுள்ளன. இதனால் பலரும் வேலையிழந்துள்ளனர்.

இதனால் ஏற்படும் பொருளாதார சிக்கல்களைச் சமாளிக்க பட்ஜெட் போட்டுக் குடும்பம் நடத்துவது அவசியமாகிறது. அதற்காகச் செலவுகளைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல. நம் வாழ்க்கையை முறையை மாற்றிக்கொள்வது பொருளாதார சிக்கல்களிலிருந்து விடுபடப் பெரிதும் உதவும். அதாவது சேமிப்புகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த 5 டிப்ஸ்கள் :

1. பட்ஜெட்டுக்கு முன் தயாரிப்புத் தேவை

அத்தியாவசிய செலவுகளை ஈடுசெய்யும் அளவுக்கு உங்கள் நிதிகுறித்த திட்டமிடல் இருக்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே போட்டுவைத்திருக்கும் பட்ஜெட்டை திரும்பவும் ஆராயுங்கள். இது உங்கள் பணத்தை சேமிப்பதற்கான புதிய வழியைக் கண்டுபிடிக்க உதவலாம். பெரும்பாலும் பலர் தற்போது வீடுகளிலிருந்து பணிபுரிவதால் அவர்களுக்குப் பயணம் , வெளியில் சாப்பிடும் உணவு ஆகியவற்றிற்கு ஆகும் செலவு மிச்சமாகியிருக்கும். மிச்சமாகும் பணத்தை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அந்தப் பணம் வருங்கால நிதி தேவைகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.

2. அவசர கால தேவைகளுக்குப் பணம் சேர்த்து வைத்தல்

ஒருவர் பின்னாளில் ஏற்படும் அவசர தேவைகளுக்காகப் பணம் சேர்த்துவைப்பது கட்டாயம். பொதுவாக ஒருவர் மூன்று முதல் ஆறு மாத உங்கள் அனாவசிய செலவுகளை, அவரச கால நிதியாகச் சேமித்து வைக்க வேண்டும். ஆனால் தற்போதைய நோய் தொற்று காலத்தில் ஒருவருட அவசர கால நிதி அவசியம். அளவுக்கு அதிகமான செலவுகள், அத்தியாவசிய தேவைகள் தவிர பிற தேவைகளுக்கு ஆகும் செலவை அவசர கால நிதியாகச் சேமித்து வைக்க வேண்டும்.

Also read... Bank Holidays: ஜூலை மாதத்தில் வங்கி பொது விடுமுறை நாட்கள் - முழு விவரம்!

3.முதலீடுகளை அதிகரியுங்கள்

மக்கள் தங்கள் பல்வேறு விஷயங்களில் மக்கள் முதலீடு செய்வதை அதிகரிக்க வேண்டும். மேலும் ஓய்வு பெறும் காலங்களில் பயன்படுத்தக் கூடிய வகையில் தங்கள் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். ஸ்டாக் மார்க்கெட்டில் தற்போது நிலையற்றத்தன்மை இருந்தாலும், எதிர்காலத்தில் அது மீண்டும் எழும் என்பது வரலாறு.

4. கடன் தந்திரம்

ஸ்டாக் மார்க்கெட்டில் உள்ள நிலையற்றத் தன்மையால் வட்டி விகிதம் சரிவடைந்துள்ளது. இதனால் குறைவான வட்டிக்கு, நீங்கள் திரும்பவும் ஃபைனான்ஸ் செய்யலாம். நமது பண இருப்பைப் பரிமாற்றம் செய்யக்கூடிய கிரெடிக் கார்டானது, குறைவான வட்டி விகிதத்தில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பெற வசதியாக இருக்கும். ஆனால் அதிக வட்டியுள்ள கிரெடிட் கார்டால் எந்தப் பயனும் இல்லை.

5. அடமானம் வைத்து கடனுக்கு மீண்டும் ஃபைனான்ஸ் செய்வது

நீங்கள் அடமானம் வைத்துக் கடன் பெற்றிருந்தால், ஃபெடரல் ரிசர்வ் முதல் படியாக வட்டியைக் குறைத்திருப்பது நல்ல செய்தியாக இருக்கும். வட்டி விகிதம் குறைவாக இருக்கும் போது திரும்பவும் ஃபைனான்ஸ் செய்வது என்பது நல்ல தேர்வாக பார்க்கப்படுகிறது. உதாரணமாக வட்டியில் சற்று தளர்வு ஏற்பட்டால் உங்களுக்கு நல்ல லாபமாக இருக்கும். உதாரணமாக 0.5 சதவிகிதம் வட்டியில் குறைந்தால், உங்களுக்கு ஆயிரக் கணக்கான ரூபாயை நீங்கள் சேமிக்கலாம். மேலும் உங்கள் கடனின் காலத்தைக் குறைப்பது என்பது புத்திசாலித்தனமான முடிவு.

top videos

    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    First published:

    Tags: Personal Finance