EMI சலுகை... கூடுதல் வட்டி செலுத்த வேண்டுமா...?

கோப்புப் படம்

  • News18
  • Last Updated :
  • Share this:
    வங்கிகள் மாதாந்திர கடன் தவணையை செலுத்துவதில் சலுகை அறிவித்துள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் கூடுதல் வட்டி செலுத்த வேண்டுமா, இல்லையா என்பதை விரிவாகக் காணலாம்.

    கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களுக்கு வங்கிகள் கடன் தவணை வசூலிக்க கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. 3 மாதங்களுக்கு அனைத்து வகை கடன் தவணை வசூலையும் நிறுத்திவைப்பது குறித்து வங்கிகள் அறிவிப்பு வெளியிட்டன.

    கூடுதல் வட்டி செலுத்த வேண்டுமா, இல்லையா என்பது குறித்து வாடிக்கையாளர்களுக்கு பரவலாக கேள்வி எழுந்தது. வங்கிகள் அளித்துள்ள விளக்கத்தின்படி, இந்த சலுகையை பயன்படுத்த விருப்பம் தெரிவிக்கும் ஒருவர், 5 ஆண்டு தவணை செலுத்தவேண்டியது இருந்தால், அது இனி 5 ஆண்டு 3 மாதமாக மாற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தவணை எண்ணிக்கை மட்டும் உயர்வதில்லை, அதற்கான வட்டியும் இதனுடன் சேர்ந்து உயருகிறது. கடன் தொகை 5 லட்சம், 3 மாதங்களுக்கான தவணை 30,000 என்றால், இனி மொத்த கடன் தொகை 5 லட்சத்து 90 ஆயிரமாக கருதப்படும்.

    இதை சற்று விரிவாக பார்த்தால், 36 மாதம் தவணை காலம் இருந்தால், 3 மாத சலுகை பயன்படுத்தப்பட்டால், கூடுதலாக ஒரு தவணை நீங்கள் கட்ட வேண்டிவரும். 60 மாத தவணை காலமாக இருந்தால் 2 கூடுதல் தவணையுடன் சேர்ந்து 65 மாதங்களுக்கு தவணை கட்டும் நிலை ஏற்படும்

    இதே போல, 120 மாத தவணை காலம் உள்ளவர்கள், சலுகையை பயன்படுத்தினால், கூடுதலாக 5 தவணைகள் வரை செலுத்த வேண்டிவரும். 180 மாதங்கள் தவணைக் காலம் உள்ளவர்களுக்கு, 8 மாத கூடுதல் தவணைகள் செலுத்தும் நிலை வரும்

    240 தவணை காலம் உள்ளவர்களுக்கு, மொத்த கடன் தொகையில் 3 மாத தவணை சேருவதால், வட்டியுடன் சேர்ந்து அவர்களின் புதிய தவணை காலம் 258 ஆக உயர்ந்து, கூடுதலாக 15 தவணைகள் செலுத்த வேண்டிவரும்.






    இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Sankar
    First published: