இந்தியாவில் 1.2 கோடி பேர் வறுமையில் சிக்குவர்: உலக வங்கி

சிறு குறு தொழில் நிறுவனங்களும் மிகப் பெரிய தொழிற்சாலைகளும் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. சாதாரண தொழில் அமைப்புகளும் முடக்கப்பட்டன. இதனால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் உலகம் முழுக்க வேலை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் 1.2 கோடி பேர் வறுமையில் சிக்குவர்:  உலக வங்கி
உலக வங்கி
  • Share this:
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஒரு கோடியே 20 லட்சம் பேர் அதீத வறுமைக்கு ஆளாவர்கள் என்று உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலக வங்கியின் வளர்ச்சி தரவுகள் அமைப்பின் கணக்குப்படி ஒரு நாளைக்கு 145 ரூபாய்க்கும் குறைவாக வருமானம் வருவோரின் எண்ணிக்கை 1.2 கோடியாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் தெற்காசியாவில் 1 கோடியே 60 லட்சம் பேரும், ஆப்ரிக்க நாடுகளில் 2 கோடியே 30 லட்சம் பேரும் வறுமையில் சிக்குவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனாவால் உலக மக்கள் தொகையில் 8. 6 விழுக்காடு மக்கள் மிக அதீத வறுமைக்கு ஆளாவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் ஊரடங்கு காரணமாக சிறு குறு தொழில் நிறுவனங்களும் மிகப் பெரிய தொழிற்சாலைகளும் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. சாதாரண தொழில் அமைப்புகளும் முடக்கப்பட்டன. இதனால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் உலகம் முழுக்க வேலை இழந்துள்ளனர். அதிலும் வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் இது மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

Also see...
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
First published: May 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading