• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • ஏப்ரல் 14 வரை ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலும் சேவை துண்டிக்கப்படாது : ஏர்டெல்

ஏப்ரல் 14 வரை ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலும் சேவை துண்டிக்கப்படாது : ஏர்டெல்

ஏர்டெல்

ஏர்டெல்

ஜீரோ பேலன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு ரூ.10-க்கு டாக் டைம் வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் அறிவித்திருந்தது.

  • Share this:
    பி.எஸ்.என்.எல் தொலைத்தொடர்பு நிறுவனத்தை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும், தங்களது வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யாவிட்டால் இன்கமிங் அழைப்பு துண்டிக்கப்படாது என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    ஊரடங்கு உத்தரவு காரணமாக வாடிக்கையாளர்கள் நலன் கருதி பி.எஸ்.என்.எல் நிறுவனம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.வீட்டில் இருந்து பணிபுரிபவர்களுக்கு ஒரு மாத காலம் வரை பிராட்பேண்ட் சேவை இலவசமாக வழங்கப்படும் என பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்திருந்தது.

    இதைத் தொடர்ந்து ஏப்ரல் 14-ஆம் தேதி வரை வேலிடிட்டி முடிவடைந்து, ரீசார்ஜ் செய்ய முடியாத சந்தாதாரா்களின் வேலிடிட்டி 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்றும், இந்த காலகட்டத்தில் ஜீரோ பேலன்ஸ் வைத்திருப்பவர்களுக்கு 10 ரூபாய்க்கு டாக் டைம் வழங்கப்படும் என்றும் பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.

    இதே போன்று ஏர்டெல் நிறுவனமும் ஏப்ரல் 14 வரை பிரிபெய்டு வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலும் சேவை துண்டிக்கப்படாது என அறிவித்துள்ளது.  ரீசார்ஜ் செய்யப்படாவிட்டால் 10 ரூபாய் ஊக்கத்தொகையாக வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் என்றும் அந்த பணத்தை அவர்கள் பின்னர் செலுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏழைகள் மற்றும் சாமானியர்களுக்கு தொடா்ந்து தொலைபேசி சேவை கிடைப்பதற்காக இச்சலுகையை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    Also see...





    இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: