வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) சட்டம், 2021-ஆனது இந்த ஆண்டு ஜனவரி 25 முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய வாடகை தாய் விதிகளின்படி, வாடகைத் தாய் மூலம் பெற்றோராக விரும்பும் தம்பதிகள் வாடகை தாயாக இருக்க சம்மதிக்கும் பெண்ணுக்கு ஆதரவாக 3 ஆண்டுகளுக்கு ( 36 மாதங்களுக்கு) பொது மருத்துவ காப்பீட்டை (general health insurance coverage) பெற வேண்டும்.
வாடகை தாய் (ஒழுங்குமுறை) சட்டம் அமலுக்கு வந்து கிட்டத்தட்ட 5 மாதங்களுக்குப் பிறகு, வாடகைத் தாய் கர்ப்பத்தை நிர்வகிக்கும் விதிகளை சுகாதார அமைச்சகம் சமீபத்தில் அறிவித்துள்ளது. வாடகை தாய்க்கான மூன்று வருட சுகாதார காப்பீடு வாங்குவதை விதிகள் கட்டாயமாக்குகின்றன. இந்த இன்ஷூரன்ஸ் கவரேஜானது கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்கு பிறகான சிக்கல்களுக்கும் ஆகும் அணைத்து செலவுகளையும் சமாளிக்க போதுமானதாக இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
1971-ஆம் ஆண்டின் மருத்துவக் கருவுறுதல் சட்டத்தின்படி வாடகை தாய், வாடகை தாய்க்கான செயல்முறையின் போது கருக்கலைப்புக்கு அனுமதிக்கப்படலாம்.வாடகை தாய் மீதான வாடகைத் தாய் முறையின் முயற்சிகளின் எண்ணிக்கை மூன்றிற்கு மேல் இருக்க கூடாது என்றும், சிக்கல் ஏற்பட்டால் வாடகைத் தாய் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்படுவார் என்றும் புதிய சட்டம் குறிப்பிடுகிறது. மேலும் தனியார் வாடகை தாய் கிளினிக்குகளை ஒழுங்குபடுத்த கடுமையான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
சிறப்பு மருத்துவர்கள் மற்றும் ஆலோசகர்களைக் கொண்ட குழுவை மருத்துவமனைகள் கொண்டிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டு உள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட விதிகள், பதிவு செய்யப்பட்ட வாடகை தாய் கிளினிக்கில் (surrogacy clinic) பணியமர்த்தப்பட்ட நபர்களுக்கான தேவைகள் மற்றும் தகுதிகள் மற்றும் பதிவு செய்வதற்கான படிவம் மற்றும் முறை தவிர வாடகை தாய் கிளினிக்கிற்கான கட்டணம் ஆகியவற்றை பற்றி குறிப்பிடுகிறது.
வாடகை தாயின் ஒப்புதல் படிவத்தின் வடிவமும் புதிய விதிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. வாடகை தாய்க்கு ஆதரவான கட்டாய 3 ஆண்டு பொது சுகாதார காப்பீட்டை, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையச் சட்டத்தின் விதிகளின் கீழ் நிறுவப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு காப்பீட்டு நிறுவனம் அல்லது முகவரிடமிருந்து தம்பதியினர் வாங்க வேண்டும் என்று விதிகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் . வாடகை தாய் முறையின் போது. மருத்துவச் செலவுகள், உடல்நலப் பிரச்சினைகள், குறிப்பிட்ட இழப்பு, சேதம், நோய் அல்லது வாடகைத் தாயின் இறப்பு வாடகைத் தாய்க்கு ஏற்படும் பிற பரிந்துரைக்கப்பட்ட செலவுகளுக்கான இழப்பீட்டிற்கான உத்தரவாதமாக தம்பதியர் நீதிமன்றத்தில் உறுதிமொழிப் பத்திரம் அளிக்க வேண்டும் என்றும் புதிய விதிகள் தெரிவிக்கின்றன.
Also Read : ஹெல்த் இன்சூரன்ஸ் க்ளைம் நிராகரிக்கபடுவதற்கான காரணங்கள் என்னென்ன?
சிகிச்சை சுழற்சியின் போது மகப்பேறு மருத்துவர் ஒரு கருவை மட்டுமே வாடகை தாயின் கருப்பையில் மாற்ற வேண்டும். சிறப்பு சூழ்நிலைகளில் மட்டுமே, 3 கருக்கள் வரை மாற்றப்படலாம் என்று விதிகள் கூறுகின்றன. வணிக வாடகை தாய் முறையை தடுக்கவும் தன்னலமற்ற வாடகை தாய்மையை மட்டுமே அனுமதிக்கும் வகையிலும் புதிய சட்டம் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.