ஹோம் /நியூஸ் /வணிகம் /

தங்கம் கையிருப்பில் இந்த நாடுதான் கிங்... இந்தியாவுக்கு எந்த இடம்?

தங்கம் கையிருப்பில் இந்த நாடுதான் கிங்... இந்தியாவுக்கு எந்த இடம்?

தங்கம்

தங்கம்

உலகில் அதிகமாக தங்கம் கையிருப்பு வைத்துள்ள நாடுகள் பட்டியலில் என்னதான் அமெரிக்கா முதலிடத்தில் இருந்தாலும், ஒரு ஆண்டில் தங்கம் கையிருப்பின் அளவில் 112 விழுக்காடு அதிகரித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • interna, Indiaamerica

  உலகில் அதிகமாக தங்கம் கையிருப்பு வைத்துள்ள  நாடுகள் பட்டியலில் என்னதான் அமெரிக்கா முதலிடத்தில் இருந்தாலும், ஒரு ஆண்டில் தங்கம் கையிருப்பின் அளவில் 112 விழுக்காடு அதிகரித்து இந்தியா சாதனை படைத்துள்ளது.

  உலக பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் இரண்டே காரணிகள். ஒன்று தங்கம்..மற்றொன்று கச்சா எண்ணெய். கச்சா எண்ணெய் முற்றிலும் வர்த்தகம் சார்ந்தது  என்பதால் அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் தங்கத்திற்குத் தான் எப்போதும் முதலிடம். என்னதான் நாட்டுக்கு நாடு காகித கரன்சிகள் புழக்கத்தில் இருந்தாலும் அவற்றின் மதிப்பு நிலையில்லாதது.

  ஆனால் தங்கத்தின் மதிப்பு எப்போதுமே ஏறுமுகம் தான். அதனால் எந்த நாடு அதிக அளவிலான தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ளதோ, அந்த நாட்டின் நாணயம் தான் அதிக மதிப்பு பெறுகிறது. அதனால் தான் உலக நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு தங்கத்தை இருப்பில் வைக்க ஆர்வம் காட்டி வருகின்றன.

  அதன்படி தற்போது வெளியாகியிருக்கும் புள்ளி விபரங்களின் அடிப்படையில் அதிகம் தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 8 ஆயிரத்து 133 மெட்ரிக் டன் தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ளது. அடுத்ததாக 3 ஆயிரத்து 358 மெட்ரிக் டன்னுடன் ஜெர்மனி இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 2000-ஆம் ஆண்டை காட்டிலும் 3 விழுக்காடு அளவுக்கு ஜெர்மனியில் தங்கம் கையிருப்பு குறைந்துள்ளது. எந்தவித மாற்றமும் இன்றி 2 ஆயிரத்து 451 மெட்ரிக் டன் தங்க கையிருப்புடன் இத்தாலி மூன்றாவது  இடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களை முறையே பிரான்ஸ், ரஷ்யா, சீனா நாடுகள் பிடித்துள்ளன..

  சுவிட்சர்லாந்து நாட்டிடம் ஆயிரத்து நாற்பது மெட்ரிக் டன் அளவுக்கு தங்கம் கையிருப்பு உள்ளது. 845 டன் தங்கத்துடன் ஜப்பான் 8 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 757 மெட்ரிக் டன் தங்கம் கையிருப்புடன் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இரண்டாயிரமாவது ஆண்டில் 357 மெட்ரிக் டன் என்ற நிலையில் இருந்து தற்போது 757 மெட்ரிக் டன்னாக சுமார் 112 விழுக்காடு இந்தியாவில் தங்கம் கையிருப்பு அதிகரித்துள்ளது.நெதர்லாந்து நாட்டிடம் 612மெட்ரிக் டன் தங்கம் உள்ளது.

  இதையும் படிங்க: SBI கிரெடிட் கார்டு பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்கான கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துவிட்டது!

  தைவான், போர்ச்சுக்கல், இங்கிலாந்து, ஸ்பெயின் நாடுகள் அடுத்தடுத்து இடங்களில் 500 மெட்ரிக் டன்னுக்கும் குறைவான தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ளன.

  உலக  நாடுகளில் நிலவும் பொருளாதார மாறுபாட்டால் பொதுமக்களும் தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது.  வர்த்தக ரீதியிலான பயன்பாடு மட்டுமல்லாமல் தங்க ஆபரணங்கள் மீதும் பொதுமக்கள் ஆர்வம் கொள்வதால் தங்கத்தின் காட்டில் எப்போதும் மழைதான்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: America, Gold, India