பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் பெரும் ஏற்றத்தை சந்தித்த பங்குச்சந்தை! முதலீட்டாளர்கள் கொண்டாட்டம்

பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் பெரும் ஏற்றத்தை சந்தித்த பங்குச்சந்தை! முதலீட்டாளர்கள் கொண்டாட்டம்
  • News18 Tamil
  • Last Updated: September 20, 2019, 8:57 PM IST
  • Share this:
இந்திய பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிறுவனங்களுக்கான வரி விகிதத்தை 30 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாக குறைத்தார். இதன் எதிரொலியாக இந்திய பங்கு சந்தைகள் இன்று ஒரே நாளில் பெரும் ஏற்றத்தை கண்டன. இதனால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்தன

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பொருளாதார சீர்திருத்த அறிவிப்புகள் தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகள் புத்துயிர் பெற்றன. பத்து ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் அதிகரித்தது.

தேசிய குறியீட்டு எண் நிஃப்டி வர்த்தகத்தின் இடையில் புதிய உச்சத்தை அடைந்தது. இன்று காலை சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புக்கு பின்னர், ஏற்றம் காண தொடங்கின.


400, 600, 800, 1000, 1200 என சென்செக்ஸ் கிடுகிடுவென அதிகரித்தது. வர்த்தகத்தின் இடையில் 2000 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்தது.

நிஃப்டியும் சுமார் 600 புள்ளிகள் வரை உயர்ந்தது. இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி காணப்பட்டது. பங்குச்சந்தைகளின் ஏற்றத்தினால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 6 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. இதனை தீபாவளி பரிசு என கொண்டாடுகின்றனர் முதலீட்டாளர்கள். எனினும் இந்த தாக்கம் நீடிக்குமா என சந்தேகம் எழுப்பும் பங்குச் சந்தை நிபுணர்கள் முதலீட்டாளர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

வர்த்தகத்தின் முடிவில், சென்செக்ஸ் 1921 புள்ளிகள் உயர்ந்து 38014 என்ற புள்ளிகளுடன் நிறைவடைந்தன.இதேபோல் தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண்ணான நிஃப்டி வர்த்தகத்தின் முடிவில் 569 புள்ளிகள் உயர்ந்து 11274 என்ற நிலையில் முடிவடைந்தன.

நிஃப்டியில் பட்டியலிடப்பட்ட 15 வாகன உற்பத்தி நிறுவனங்களின் பங்குகளும் ஏற்றத்தை கண்டன.

ஐடிசி, நெஸ்ட்லே, கோல்கேட்- பால்மோலிவ், லாபத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை இன்றைய ஏற்றத்தினால் பயனடைந்தன.

பங்குச்சந்தைகள் மட்டும் இல்லாமல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 26 காசுகள் உயர்ந்து 71 ரூபாய் 38 காசுகளுக்கு வர்த்தகமாகின.

Watch Also:

First published: September 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்