30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இறக்குமதி குறைவு...! தங்கத்தின் விலை குறையாதது ஏன்?

அமெரிக்கா, சீனா இடையேயான வர்த்தக போர் மீண்டும் சூடுபிடிக்க தொடங்குமானால், தங்கத்தின் விலையில் இந்த ஏற்ற இறக்கங்கள் தொடரும்

30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இறக்குமதி குறைவு...! தங்கத்தின் விலை குறையாதது ஏன்?
சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
  • Share this:
தங்கத்தின் இறக்குமதி 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. ஆனால், தங்கத்தின் விலை குறையாததற்குக் காரணம் என்ன, இனி தங்கம் விலை எப்படி இருக்கும்?

உலகளவில் தங்கம் பயன்படுத்துவதில் 2வது மிகப்பெரிய நாடு இந்தியா. ஒவ்வொரு மாதமும் சுமார் 100 டன் அளவிற்கு, இந்தியாவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுவது இயல்பான ஒன்று. ஆனால், கொரோனா வைரஸ், தங்கத்தின் இறக்குமதியிலும் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தங்க இறக்குமதி, கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. 2019ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் இந்தியா இறக்குமதி செய்த தங்கத்தின் அளவு என்பது, 110.18 டன், அதாவது சுமார், ஒரு லட்சத்து 10 ஆயிரம் கிலோ தங்கம். மதிப்பீட்டின் அளவில், சுமார் 29 ஆயிரத்து 775 கோடி ரூபாய். இதனுடன் ஒப்பிடும்போது, 2020ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் இந்தியா இறக்குமதி செய்த தங்கத்தின் அளவு வெறும் 50 கிலோ மட்டுமே என தகவல் வெளியாகியுள்ளது.


இது தங்கம் இறக்குமதியில், சுமார் 99.9 சதவிதம் குறைவு. 30 ஆண்டுகளில் இந்த அளவிற்கு தங்கத்தின் இறக்குமதி குறைந்துள்ளது இதுவே முதல் முறை. விமான போக்குவரத்திற்கு தடை, நகைக்கடைகள் மூடப்பட்டது போன்ற காரணங்களால் தங்கத்தின் இறக்குமதி குறைந்துள்ளது, தங்கத்தின் வாங்க ஆள் இல்லாத இந்த நிலையிலும் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதற்கான முக்கியக் காரணமும் கொரோனா வைரஸ் தான். கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன. ஏற்கனவே சீனா அறிவித்ததைப் போல், அமெரிக்காவிடம் இருந்து 15 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க பொருட்களை வாங்க வேண்டும். இல்லையென்றால், சீனா மீது மீண்டும் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன் காரணமாக, தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, சீனா இடையேயான வர்த்தக போர் மீண்டும் சூடுபிடிக்க தொடங்குமானால், தங்கத்தின் விலையில் இந்த ஏற்ற இறக்கங்கள் தொடரும் என்றும் கூறப்படுகிறது.


Also see:
First published: May 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading