ஹோம் /நியூஸ் /வணிகம் /

பணம் இல்லாத சூழல்.. அதிகரிக்கும் மன அழுத்தம்.. நிதி பிரச்னையை சமாளிக்கும் டிப்ஸ் இதோ!

பணம் இல்லாத சூழல்.. அதிகரிக்கும் மன அழுத்தம்.. நிதி பிரச்னையை சமாளிக்கும் டிப்ஸ் இதோ!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

நீங்கள் குறைவான அளவு சம்பாதித்தாலும் அதற்கேற்றால் போல் உங்களது தேவைகளை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  பணம் பத்தும் செய்யும் என்பார்கள். ஆம் நம்மில் பலர் பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளார்கள். அதற்கேற்ப கையில் பணம் இருந்தால் போதும், ஆடம்பரமாக செலவு செய்து பல இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பணம் இன்றியமையாதது தான்.

  ஆனால் பணத்தைத் தேவையில்லாமல் செலவு செய்தால் நிதி பிரச்னையை சந்திக்க நேரிடும். நிச்சயம் இந்த சூழலை நம்மில் பலர் சந்தித்திருப்போம். குறிப்பாக நிதி அழுத்தத்தை சமாளிக்க முடியாமல் திணறிய காலங்கள் அனைவருக்கும் உண்டு. எனவே இந்நேரத்தில் நிதி அழுத்தத்தை சமாளிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்துக் கொள்வோம்.

  நிதி அழுத்தத்தை சமாளிக்க உதவும் வழிமுறைகள்:

  மற்றவர்களிடம் மனம் விட்டு பேசுதல்:

  ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பணப்பிரச்சனை நிச்சயம் ஏற்படும். இந்த சூழலில் கடன்காரர்கள் அல்லது வங்கிகள் பணத்தை கட்டியாக வேண்டும் என்று தொந்தரவு செய்யும் போது ஏற்படும் மன அழுத்தத்தினால் பல தற்கொலைகளும் அரங்கேறுகின்றன. எனவே இந்த நேரத்தில் நீங்கள் நிதானம் காக்க வேண்டும். பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஏன் இப்படி தேவையில்லாமல் கடன் வாங்கினாய்? என திட்டுவார்கள் என்பதற்காக அவர்களிடம் எதையும் சொல்லாமல் இருந்து விடாதீர்கள். உங்களை யார் நம்புகிறார்களோ? அவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். அவர்களால் ஒரு தீர்வு நிச்சயம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

  மன அமைதிக்கான பயிற்சி:

  பணம் இல்லாத சூழலில் அனைவருக்கும் மன அழுத்தம் நிச்சயம் ஏற்படும். எனவே இதை எதிர்த்துப்போராட வேண்டும். இதற்கு தியானம், மூச்சுப்பயிற்சி, யோகா போன்றவை உதவியாக இருக்கும். எனவே உடலையும், மனதையும் நிதானப்படுத்துவதற்கு இதை கடைப்பிடிக்க முயலுங்கள்.

  செலவுகளைக் கட்டுப்படுத்துதல்:

  நிதி அழுத்தத்தைச் சமாளிக்கும் முக்கிய வழிகளில் ஒன்று தான் தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்துதல். ஒவ்வொரு மாதமும் என்ன செலவுகள் உள்ளது? எது தேவை? என்பதை ஆராய்ந்து கொள்ள வேண்டும். முதலில் எது முக்கியமானதோ?அதற்கு உங்களது நிதியை செலவு செய்யுங்கள். மற்றவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். கிரெடிட் கார்டு, வங்கிக்கடன் போன்றவற்றை சரியான நேரத்தில் கட்ட மறந்துவிடாதீர்கள்.

  நிதி சுதந்திரமாக இருக்க உதவும் வழிமுறைகள்:

  நீங்கள் குறைவான அளவு சம்பாதித்தாலும் அதற்கேற்றால் போல் உங்களது தேவைகளை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். அநாவசிய செலவுகள் என்பதே இருக்கக்கூடாது. குறிப்பாக மளிகைப் பொருள்களாக இருந்தாலும் அல்லது கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளாக இருந்தாலும் தேவையற்ற விஷயங்களுக்கு அதிகமாக செலவு செய்வதைத் தவிர்த்து விடுங்கள்.

  மேலும் ஒவ்வொரு மாதமும் மளிகை சாமான்கள், உணவு,வாடகை,மின்சாரம், தண்ணீர், நெட் கனெக்ஷன், போக்குவரத்து, பெட்ரோல், டீசல் செலவு என அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் எவ்வளவு பணம் தேவைப்படுகிறது என்பதை தீர்மானித்துக் கொண்டு அந்தப் பணத்தை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

  முக்கியமாக நீங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை அவசர தேவைகளுக்கென்று எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மருத்துவச் செலவுகளுக்கென்று கொஞ்சம் பணத்தை வங்கியில் செலுத்தி வருவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதோடு எதிர்கால நலன்கருதி கொஞ்சம் பணத்தை ஆர்டி, எஃப்டி போன்ற சில சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்துக் கொள்ளுங்கள். இதோடு ஒவ்வொரு நாளும் நீங்கள் என்ன செலவு செய்கிறீர்கள்? என்பதை ஒரு நோட்டில் குறித்து வைத்து வாருங்கள். இந்த நடைமுறை தேவையில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்.

  Read More: அடுத்த வாரம் அலுவலகங்களை மூடும் ஸ்பாட்டிஃபை : காரணம் இது தான்!

   இதுப்போன்ற விஷயங்களை நீங்கள் உங்களது வாழ்க்கையில் கடைப்பிடித்து வந்தாலே நிதி பிரச்சனையை நீங்கள் எளிதில் சமாளிக்கலாம்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Financial crisis, Money, Stress