Home /News /business /

இறக்குமதி வரி குறைப்பால் விரைவில் சமையல் எண்ணெய் விலை குறைகிறது..

இறக்குமதி வரி குறைப்பால் விரைவில் சமையல் எண்ணெய் விலை குறைகிறது..

பண்டிகை காலம் நெருங்கி வருவதையொட்டி இறக்குமதி வரி குறைக்கப்பட்டதன் பலன்களை உடனடியாக நுகர்வோர் பயன்பெறுமாறு கிடைக்க செய்யுமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதைத்தொடர்ந்து, விரைவில் சமையல் எண்ணெய் விலை குறைய உள்ளது.

    முன்னதாக, கச்சா வகைகளான பாமாயில், சூரியகாந்தி மற்றும் சோயாபீன் எண்ணெய்களுக்கான அடிப்படை சுங்க வரியை மத்திய அரசு ரத்து செய்தது. சமையல் எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்த சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்கள் மீதான கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளன.

    பாமாயில், சோயாபீன் எண்ணெய் மற்றும்  சூரியகாந்தி எண்ணெய் மீதான அடிப்படை சுங்க கட்டணமான 2.5 சதவீதம் முற்றிலும் நீக்கப்பட்டது. மேலும், பாமாயிலுக்கு 20 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாகவும்,  சோயாபீன் எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய்க்கு 5 சதவீதமாகவும் வேளாண் செஸ் வரியும் குறைக்கப்பட்டது.

    ஆர்பிடி பாமலின் எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரி தற்போதைய 32.5 சதவீதத்திலிருந்து 17.5 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    இந்த வரி குறைப்புக்குப் பிறகு, பாமாயில் மீதான வரி 8.25 சதவிகிதமாகவும், சோயாபீன் எண்ணெய் மற்றும்  சூரியகாந்தி எண்ணெய் வரி 5.5 சதவிகிதமாகவும் இருக்கும். முன்னதாக,  பாமாயில் வரி 22.5 சதவீதமகாவும், சூரியகாந்தி எண்ணெய்,  சோயாபீன் எண்ணெய் 32.5 சதவீதமாகாவும் இருந்தது

    இந்த வரி குறைப்பானது அக்.14, 2021 முதல் மார்ச் 31, 2022 வரை அமலில் இருக்கும் என்று நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் கூறியுள்ளது.

    இதைத்தொடர்ந்து, இறக்குமதி வரியைக் குறைத்ததற்கான முழுமையான பலன்கனளை விரைவில் நுகர்வோருக்கு கிடைக்கப்பெற செய்வதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், தமிழகம் மற்றும் ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட எண்ணெய் உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு, எண்ணெய் விலை உயர்வைக் குறைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

    இறக்குமதி வரி குறைப்பை தொடர்ந்து, சமையல் எண்ணெய்களின் விலை கிலோவுக்கு 15-20 ரூபாய் குறைவாக இருக்கும்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Cooking Oil, Crude oil

    அடுத்த செய்தி