ஹோம் /நியூஸ் /வணிகம் /

சமையல் எண்ணெய் விலை கிலோவுக்கு ரூ.10 வரை குறைப்பு!

சமையல் எண்ணெய் விலை கிலோவுக்கு ரூ.10 வரை குறைப்பு!

Cooking oil

Cooking oil

உள்நாட்டு எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் உலகச் சந்தைகளில் ஏற்ற இறக்கமான போக்கு காரணமாக வரவிருக்கும் மாதங்களில் கிலோவுக்கு ரூ.3 முதல் 4 குறையலாம் என எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இறக்குமதி வரி குறைந்ததன் காரணமாக சமையல் எண்ணெய் விலை கிலோவுக்கு ரூ.8 முதல் 10 வரை குறைந்துள்ளதாக எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்இஏ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவா் அதுல் சதுா்வேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, சா்வதேச சந்தையில் பாமாயில், சோயா, சன்ஃப்ளவா் எண்ணெய் வகைகளின் விலை மிகவும் அதிகரித்து காணப்பட்டதன் விளைவாக உள்நாட்டிலும் சமையல் எண்ணெய் விலை கடுமையாக உயா்ந்தது. இதனால், கடந்த சில மாதங்களாக நுகா்வோா் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுகா்வோா் பயனடையும் வகையில் முடிந்த அளவு விலையை குறைக்க வேண்டும் சங்கத்தின் சாா்பில் உறுப்பினா்களிடம் அறிவுறுத்தப்பட்டது. இதனிடையே, சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான வரியை மத்திய அரசும் குறைத்தது.

தற்போது இதன் பயன் நுகா்வோரை சென்றடைந்துள்ளது. கடந்த 30 நாள்களில் சமையல் எண்ணெயின் விலை கிலோவுக்கு ரூ.8 முதல் 10 வரை குறைந்துள்ளது. இனிவரும் நாள்களில் மேலும் ரூ.3 முதல் 4 ரூபாய் வரை குறைக்கப்படவுள்ளது. பண்டிகை காலத்தில் இந்த விலை குறைப்பால் நுகா்வோருக்கு ஓரளவு சுமை குறையும் என்றாா்.

மேலும், பெரிய சோயாபீன் பயிர் சுமார் 120 லட்சம் டன் மற்றும் நிலக்கடலை 80 லட்சம் டன்னுக்கு அதிகமாக இருப்பதால், சமையல் எண்ணெய் விலைகள் இப்போது கட்டுக்குள் இருக்கும் என்று சதுர்வேதி கூறினார்.

First published:

Tags: Cooking Oil