• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.5.91 குறைந்தது!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.5.91 குறைந்தது!

கோப்புப் படம்  (Photo: Reuters)

கோப்புப் படம் (Photo: Reuters)

2018 டிசம்பர் 1-ம் தேதி எல்பிஜி சிலிண்டர் மீதான விலை 6.52 ரூபாயாகக் குறைந்தது. சிலிண்டர் மானியத்தின் விலை ஒவ்வொரு மாதமும் நாணய மதிப்பைப் பொருத்து மாறும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
டிசம்பர் மாதம் சமையல் எரிவாயு விலை இரண்டு முறை குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது, அமெரிக்க வட்டி விகித உயர்வு, ரூபாய் மதிப்பு உயர்வு போன்ற கரணங்களால் திங்கட்கிழமை சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 5.91 ரூபாயாகக் குறைந்துள்ளது.

இன்றைய நள்ளிரவு முதல் டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட மானிய விலை சிலிண்டர் விலை 5.91 ரூபாய் குறைந்து 494.99 ரூபாயாக விற்பனை செய்யப்பட உள்ளது.

2018 டிசம்பர் 1-ம் தேதி எல்பிஜி சிலிண்டர் மீதான விலை 6.52 ரூபாயாகக் குறைந்தது. சிலிண்டர் மானியத்தின் விலை ஒவ்வொரு மாதமும் நாணய மதிப்பைப் பொருத்து மாறும்.

சென்னையில் இன்று மானியம் இல்லா 14.2 கிலோ சிலிண்டர் விலை 826.50 ரூபாயாகவும், 19 கிலோ சிலிண்டர் விலை 1,504 ரூபாயாகவும், 5 கிலோ சிலிண்டர் விலை 301 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் பார்க்க: மோசடிகள் மூலம் ரூ.41,000 கோடியை இழந்த வங்கிகள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilarasu J
First published: