• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

கோப்புப் படம்  (Photo: Reuters)

கோப்புப் படம் (Photo: Reuters)

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மானியம் நீங்கலாக ₹495.39 ஆக அதிகரித்துள்ளது

  • News18
  • Last Updated :
  • Share this:
வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ₹2 உயர்த்தப்பட்டுள்ளது. 

சமையல் பயன்பாட்டுக்கு மானிய விலையில் வழங்கப்படும் 14.2 கிலோ சிலிண்டருக்கான வினியோகஸ்தர் கமிஷன் தொகையை ₹50.58ஆகவும், 5 கிலோ சிலிண்டருக்கான கமிஷன் தொகையை ₹25.29ஆகவும் பெட்ரோலிய அமைச்சகம் அதிகரித்துள்ளது.

இதையடுத்து, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையை ₹2 உயர்த்தின.

இந்த விலை உயர்வை தொடர்ந்து சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மானியம் நீங்கலாக ₹495.39 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 1-ந் தேதி வினியோகஸ்தர் கமிஷன் தொகை உயர்த்தப்பட்டதால் 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் சந்தை விலை ₹60 அதிகரித்து ₹939 ஆக விற்பனையானது. தற்போது இந்த விலை ₹942.50 ஆக உயர்ந்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: