சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. விலை 900 ரூபாயை கடந்தது

கேஸ் சிலிண்டர்(மாதிரிப் படம்)

சமையல் எரிவாயு விலை மீண்டும் ரூ.25 உயர்ந்து உள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

 • Share this:
  வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது.

  பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி அமைத்து வருகின்றன. ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன.சில நேரங்களில் 3 முறை கூட மாற்றி அமைக்கப்படுகின்றன.

  கடந்த பிப்ரவரி மாதம் 700 ரூபயாக இருந்த சிலிண்டரின் விலை செப்டம்பர் மாதத்தில் 875 ரூபாய் 50 காசாக அதிகரித்தது. தற்போது மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டு 900 ரூபாயாக அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் கேஸ் சிலிண்டர் விலை 285 ரூபாய் அதிகரித்துள்ளது.

  சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் 900 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கேஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டு வருவது பொதுமக்கள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: