இந்தியாவில் நுகர்வோர் செலவின கணக்கெடுப்பு தொடர்பான முடிவுகளை வெளியிடப்போவதில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியர்கள் மாத செலவுத் தொகை கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கணிசமாகக் குறைந்துள்ளளதாகவும், இதன் மூலம் இந்தியாவில் வறுமை அதிகரித்துள்ளதாக அந்த கணக்கெடுப்பில் தெரியவந்ததாக தகவல் வெளியாகின.
இந்நிலையில், அந்த தரவுகளில் பிழை உள்ளதாக கூறியுள்ள மத்திய அரசு, அந்த கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.
முன்னதாக வெளியான கணக்கெடுப்பு முடிவில், 2011- 12 ஆம் ஆண்டில், ஒரு மாதத்தில் தனிநபர் செலவழித்தது 1500 ரூபாயாக இருந்ததாகவும், ஆனால் அதுவே 2017-18ம் ஆண்டில் 1446 ஆக குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 2011-ம் ஆண்டை ஒப்பிடும் போது 2017-ம் ஆண்டில் 3.7 சதவீதம் குறைந்துள்ளதாகவும், இந்திய கிராமங்களில் உணவுகளுக்கென செலவிடப்படுவது குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் பார்க்க: 13 நாட்கள் போராட்டத்துக்குப் பின் பணிக்குத் திரும்பும் டெல்லி வழக்கறிஞர்கள்..!
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.