“வேலைக்கு ஏற்ற ஊதியம், நிரந்தர வேலை, நிம்மதியான குடும்ப வாழ்க்கை“ போன்றவைதான் தற்போது அனைவரும் எதிர்ப்பார்க்ககூடிய முக்கிய விஷயங்கள். அதற்கேற்றால் போல் இன்றைக்கு ஒரு புறம் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வந்தாலும் நிரந்தரமானதா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
ஆள் குறைப்பு, கம்பெனியின் பொருளாதார மந்த நிலை போன்ற காரணங்களால் பலர் வேலையில்லாத நிலை உள்ளது. அதிலும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பலர் வேலையிழக்கும் சூழலும் ஏற்பட்டது. இதனையடுத்து தான் இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் ஏதாவது பிஸினஸ் தொடங்கி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் Global Entrepreneurship Monitor மூலம் சமீபத்தில் கிடைத்த தகவலின் படி, இந்தியாவின் மொத்த தொழில் முனைவோர்களின் செயல்பாடு விகிதம் என்பது கடந்த 2020 ல் 5.3 சதவீதத்தில் இருந்து 2021ல் 14.4 சதவீதமாக அதிகரித்துள்ளது என தெரியவந்துள்ளது.
குழந்தைகளின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய விருப்பமா? நல்ல லாம் தரும் டாப் 5 திட்டங்கள்
இந்த விகிதம் என்பது வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் நீங்கள் நிரந்தர வருமானம் மற்றும் நிரந்தர வேலைக்காக வேறு கம்பெனி அல்லது தொழில் தொடங்க திட்டமிட்டிருந்தால், முதலில் நிதிப்பிரச்சனை இன்றி வாழ்வதற்கு இதெல்லாம் மறக்காமல் பாலோ பண்ணிடுங்க. நிச்சயம் தொழில் முன்னேற்றம் அடையும் வரை உங்களை மற்றும் உங்களது குடும்பத்தினரை நிதி பிரச்சனையில் இருந்து பாதுகாக்கும்.
நிதி பிரச்சனை இன்றி வாழ பின்பற்ற வேண்டிய விஷயங்கள்…
நிதி திட்டமிடல்:
உங்களது வாழ்க்கையில் திட்டமிடுதல் என்பது முக்கியமான விஷயம். அதிலும் நிதி திட்டமிடுதல் என்பது உங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். குறிப்பாக நீங்கள் செய்யவுள்ள புதிய தொழிலின் மூலம் வருமானம் பெறுவதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும்? என நிர்ணயம் செய்ய வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் வருமானம் பெறுவதற்கு சேமிப்பு மற்றும் ஏதேனும் முதலீடு நீங்கள் முன்பே செய்து வைத்திருக்க வேண்டும். இதோடு செலவுகளை நீங்கள் குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் உங்களால் நிதிப்பிரச்சனையிலிருந்து மீளவே முடியாது.
வருமான ஓட்டத்தை உருவாக்குதல்:
தொழில் தொடங்கி ஒரிரண்டு ஆண்டிற்குள்ளாகவே வெற்றி பெற முடியும் என்றால் நிச்சயம் முடியாத காரியம். எனவே அந்த இடைப்பட்ட காலத்தில் வருமானம் வரக்கூடிய ஒன்றில் முதலீடு செய்திருக்க வேண்டும். அதிகளவு வரவில்லை என்றால் ஓரளவிற்கு குடும்பத்தை மற்றும் தொழிலை நடத்துவதற்கு உதவியாக இருந்தால் போதும். இல்லையென்றால் பார்ட் டைம்மாக சில வேலைகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.
ஆயுள் காப்பீடு:
எந்த தொழிலும் எடுத்தவுடன் வருமானம் காணமுடியாது.. பல ஆண்டுகள் இதற்காக உழைக்க வேண்டும். இந்த நேரத்தில் எதிர்பாராதவிதமாக விபத்தில் மரணம் ஏற்பட்டால் நிச்சயம் உங்களது குடும்பத்திற்கு நிதிச்சுமையை அதிகரிக்கும். எனவே நீங்கள் நிலையான வருமானத்தைப் பெற்றுக்கொண்டிருக்கும் நேரத்திலேயேடேர்ம் லைப் இன்சுரன்ஸ பெறுவதை நீங்கள் உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.
HP நிறுவனத்தில் 6000 நபர்கள் வேலை இழக்கும் அபாயம் - இது தான் காரணமாம்!
குடும்பத்தைக் கவனிப்பதற்குத் திட்டமிடுதல்:
பிஸினஸ் செய்ய ஆரம்பிக்கும் பலர் கையில் உள்ள அனைத்து நிதி முழுவதையும் செலவழிப்பார்கள். எனவே குடும்பத்தில் உள்ளவர்களுக்கு திடீரென நோய் ஏற்படுதல் மற்றும் வயதான பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கான பராமரிப்பு பொறுப்புகள் போன்றவற்றிற்கு அதிக செலவாகும். இதனால் உங்களது பிஸினஸை விட்டு மறுபடியும் மாத வருமானம் பெறும் வேலைக்கு செல்லக்கூடிய அபாய நிலை ஏற்படும். எனவே இதுப்போன்ற பிரச்சனைகளிலிருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால், ஆயுள் காப்பீடு மற்றும் பங்குகளில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
முக்கியமாக நீங்கள் ஒவ்வொரு வாழ்க்கை நிகழ்வுக்கும் ஏற்ற நிதி திட்டமிடலை நிர்வகிக்கவும். குறிப்பாக திருமணம், குழந்தைப் பிறப்பு போன்ற பல செலவுகள் ஏறபடும் என்பதால் நிதி ஆலோசகரிடம் எப்படி இதையெல்லாம் சமாளிப்பது என ஆலோசனைப் பெறுவது முக்கியமானது. அதற்கேற்ப நீங்கள் உங்களைத் தயார் செய்துக் கொள்ளலாம். இதுப்போன்ற விஷயங்களை நீங்கள் மேற்கொண்டாலே எந்த பிஸினஸ் தொடங்கினாலும் நிதிப்பிரச்சனை இன்றி வாழ முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jobs