யூபிஐ மூலமாக டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்பவரா நீங்கள்? இந்த விஷயங்களை கருத்தில் கொள்ளுங்கள்..
யூபிஐ மூலமாக டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்பவரா நீங்கள்? இந்த விஷயங்களை கருத்தில் கொள்ளுங்கள்..
ஃபீச்சர் ஃபோன்களுக்கான யூபிஐ சேவைகள் அறிமுகம்
நாம் இன்றைக்கு டிஜிட்டல் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எந்தவித பில் செலுத்துவது என்றாலும், டிக்கெட் முன்பதிவு செய்வது என்றாலும் அல்லது ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்கவும்,
நாம் இன்றைக்கு டிஜிட்டல் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எந்தவித பில் செலுத்துவது என்றாலும், டிக்கெட் முன்பதிவு செய்வது என்றாலும் அல்லது ஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்கவும், சேவைகளை பெறவும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி வருகிறோம். குறிப்பாக, வங்கிகள் வழங்கும் நெட் பேங்கிங் மற்றும் யூபிஐ பரிவர்த்தனையை அடிப்படையாகக் கொண்ட பேமெண்ட் ஆப் வசதிகள் ஆகியவற்றை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
இது மட்டுமல்லாமல், ஒருவருக்கு பணம் அனுப்பவும், மற்றவர்களிடம் இருந்து பணத்தை பெறவும் நாம் டிஜிட்டல் பேமெண்ட் முறைகளைத் தான் பயன்படுத்தி வருகிறோம். இதனால், நமக்கு நேரம் மிச்சமாகிறது என்பதுடன், நமது வாழ்க்கையும் எளிமையாக மாறியுள்ளது.
இதில், நாம் குறிப்பிட்டு கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அதாவது, டிஜிட்டல் பேமெண்ட் முறைகள் நம் வாழ்கை எளிதாக்கியுள்ள வரம் என்று சொல்லப்படும் அதே சமயம், இதை மையமாக வைத்து சைபர் குற்றங்கள் ஒருபக்கம் அதிகரித்து வருகின்றன. நமது பணத்தை திருடுவதற்கு மோசடிக்காரர்கள் புத்தம்புது வழிமுறைகளை கையாண்டு கொண்டிருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் சைபர் குற்றங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பெருகியுள்ளன. ஆகவே, யுபிஐ சேவைகளை பயன்படுத்தும்போது, நாம் கவனத்தில் வைத்திருக்க வேண்டிய விஷயங்கள் இவை.
உங்கள் ஆப்-களை அப்டேட் செய்ய மறக்காதீர்கள்
சைபர் குற்றவாளிகளிடம் இருந்து உங்கள் அக்கவுண்ட்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், ஆப்-களை எப்போதும் நீங்கள் அப்டேட் செய்து வைத்திருப்பது அவசியம் ஆகும். சைபர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு அப்டேட்டிலும் புத்தம்புது வசதிகள் அறிமுகம் செய்யப்படும். ஆகவே, அப்டேட் செய்ய மறக்காதீர்கள்.
பணம் பெறுவதற்கு பின் நம்பர் பயன்படுத்த கூடாது
எந்தவொரு யூபிஐ ஆப்-பிலும் பணம் பெறுவதற்கு நீங்கள் உங்களுடைய பின் நம்பரை கொடுக்க வேண்டிய அவசியமே கிடையாது. ஆகவே, யாரேனும் உங்களுக்கு பணம் அனுப்பும்போது பின் நம்பர் எண்டர் செய்யுமாறு கூறினால், நீங்கள் கவனமுடன் அதை தவிர்க்க வேண்டும்.
மோசடி அழைப்புகள் குறித்து விழிப்போடு இருங்கள்
உங்களுக்கு ஏதேனும் லிங்க் அனுப்பி பணம் பறிக்க முயற்சிக்கும் கும்பல், அத்தோடு நின்று விடுவதில்லை. நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு ஃபோன் செய்து வங்கி அதிகாரிகளைப் போலவே பேசுகின்றனர். குறிப்பாக, அவர்களது பாஸ்வர்டு, பின் நம்பர், ஓடிபி போன்றவற்றை கேட்டு தெரிந்து, பணத்தை பறித்து விடுகின்றனர். ஆனால், இதுபோன்ற எந்த விவரங்களையும் ஃபோன் காலில் வங்கிகள் கேட்காது என்பதை மறந்து விடாதீர்கள்.
எந்த லிங்கிலும் பின் நம்பர் கொடுக்க கூடாது
பண்டிகை காலங்களில் சலுகை அல்லது பரிசுத் தொகை வழங்கப்படுவதாகக் கூறி உங்களுக்கு வாட்ஸ் அப் அல்லது இ-மெயில் மூலமாக எண்ணற்ற லிங்க் வரும். அவை எதையுமே நீங்கள் ஓபன் செய்யக் கூடாது, அதில் பின் நம்பர் கொடுக்கவே கூடாது.
பலமான பாஸ்வேர்டு அவசியம்
யுபிஐ சேவைக்கு பலமான பின் நம்பர் அவசியம். யாரும் எளிதில் யூகித்து விடும்படியான நம்பர்களை பயன்படுத்தக் கூடாது. அவ்வபோது பின் நம்பரை மாற்ற வேண்டும்.
Published by:Lilly Mary Kamala
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.