வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது குறித்து குழப்பமா? தெரிந்து கொள்ளுங்கள்

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது குறித்து குழப்பமா? தெரிந்து கொள்ளுங்கள்

மாதிரி படம்

வருமான வரி தாக்கல் செய்வதில் பலருக்கும் குழப்பங்கள் இருந்துவரலாம். அதைக் குறித்து தெரிந்துகொள்வோம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியாவில் வரிகளை நேரடி மற்றும் மறைமுக வரி என வகைப்படுத்தலாம். நேரடி வரி என்பது உங்கள் வருமானத்தில் நீங்கள் நேரடியாக அரசாங்கத்திற்கு செலுத்தும் வரி. மறைமுக வரி என்பது நாம் வாங்கும் பொருள்கள், பயன்படுத்தும் வசதிகள் உள்ளிட்டவற்றுக்கு மறைமுகமாக அரசாங்கத்திற்கு செலுத்தும் வரி. உதாரணத்திற்கு தியேட்டர்கள், உணவகங்கள் மற்றும் ஈ-காமர்ஸ் வலைத்தளங்களில் நீங்கள் வாங்கும் பொருட்கள் அல்லது நீங்கள் பெறும் சேவையின் மீதான வரிகளை மீட்டெடுக்கின்றன. இந்த வரி அரசாங்கத்திற்கு வழங்கப்படுகிறது.

வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதில் பலரும் குழப்பத்தில் உள்ளனர். அவர்கள் அதை தாக்கல் செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. வரி செலுத்துதல் மற்றும் ITR தாக்கல் செய்வது இரண்டும் வெவ்வேறு. மேலும் மக்கள் இரண்டையும் ஒன்று என நினைக்கக்கூடாது. இரண்டு விஷயங்களும் தனித்தனியாக செய்யப்படுகின்றன. நீங்கள் ITR தாக்கல் செய்ய வேண்டுமா வேண்டாமா, என்ற சந்தேகங்களை தீர்க்க கீழக்காணும் விளக்கத்தை படித்து தெளிவாக்கி கொள்ளுங்கள்.

வங்கிக் கணக்கு/வெளிநாட்டு சொத்தில் ஆர்வம்:

இந்த நாட்டின் ஒரு குடிமகன் வரி செலுத்தும் வரம்பிற்குள் வரவில்லை என்று வைத்துக்கொள்வோம். ஆனால் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களில் அவருக்கு ஆர்வம் உள்ளது. இந்த விஷயத்தில் அவர் ITRஐ தாக்கல் செய்வது அவசியம்.

அடிப்படை விலக்கு வரம்பை விட மொத்த வருமானம்:

ஒரு நபரின் மொத்த வருமானம் முதலீடுகள் மற்றும் செலவுகளுக்கான பல்வேறு விலக்கு விருப்பங்களைப் பெறுவதற்கு முன் அடிப்படை விலக்கு வரம்பை விட அதிகமாக இருந்தால், அவர் ITRஐ தாக்கல் செய்ய வேண்டும். VIA அத்தியாயத்தின் கீழ் தள்ளுபடிகளைக் கூடப் பெறலாம். இதில் முக்கியமாக 80C, 80 CCD, 80D, 80TTA, 80 TTB ஆகியவை அடங்கும். வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்துதல், ஆயுள் காப்பீட்டு பிரீமியம் மற்றும் சுகாதார காப்பீட்டு பிரீமியம், EPF, PPF மற்றும் NPS கணக்குகளுக்கான பங்களிப்பு, வங்கிகளிடமிருந்து வட்டி, குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம் போன்றவற்றுக்கு வரி விலக்கு விருப்பம் கிடைக்கிறது. சரியான முறையை பின்பற்றி விபரம் அறிந்தவர்கள் உடன் நீங்கள் ITRஐ பைல் செய்வது முக்கியமானது. தவறுகள் நேராமல் இருக்க அனுபவம் வாய்ந்த நபர்களை அருகாமையில் வைத்துக் கொள்வது முக்கியம்.

Also read... 7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் நல்லமுடிவை அறிவிப்பார் - ஆளுநரைச் சந்தித்தப் பின் அமைச்சர் ஜெயக்குமார்நீண்ட கால மூலதன ஆதாயங்கள்:

பட்டியலிடப்பட்ட ஈக்விட்டி பங்குகள் மற்றும் ஈக்விட்டி சார்ந்த அலகுகளின் விற்பனையின் நீண்ட கால மூலதன ஆதாயங்கள் 2019-2020 மதிப்பீட்டு ஆண்டிற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், மக்கள் ITRஐ தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கில் விலக்கு பிரிவு 10 (38) இன் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

விலக்கு வரம்பு:-

60 வயதிற்குட்பட்டவர்கள் ஆண்டுக்கு ரூ .2.5 லட்சம் வருமானம் கொண்டவர்கள் விலக்கு வரம்புக்கு உட்பட்டவர்கள். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆனால் 80க்கும் குறைவானவர்கள் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் விலக்கு வரம்பைப் பெறுகிறார்கள். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது ஆண்டுக்கு ரூ.5 லட்சமாக உள்ளது. பல்வேறு விலக்குகளைப் பயன்படுத்திய பின்னர் வருமானம் 2.5 லட்சத்துக்குக் கீழே வருவது சில நேரங்களில் நிகழ்கிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் ஒரு நபர், விலக்கு வரம்பைத் தாண்டி மொத்த வருமானம் வைத்திருந்தாலும், வரி செலுத்த தேவையில்லை. இருப்பினும் அந்த நபர் ITRஐ தாக்கல் செய்ய வேண்டும்.
Published by:Vinothini Aandisamy
First published: